அடையாளம் THE TOKEN 63-09-01 1. நீங்கள் அமரலாம். ஒவ்வொருவருக்கும் காலை வணக்கம், மறுபடியுமாக... இன்று காலை கர்த்தருடைய ஆராதனைக்கு வந்திருப்பதைக் குறித்து மகிழ்ச்சியுறுகிறேன். நாங்கள் வரமுடியுமோ வரமுடியாதோ என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆயினும் கர்த்தர் ஒரு வழியை அருளினதால், நாங்கள் இன்று ஆராதனைக்குத் திரும்பவும் வந்து உள்ளோம். இப்பொழுது இன்றோ மகத்தான நேரங்களையே நாம் இன்று காலை ஞாயிறு வேத பாட பள்ளி போதனையிலும், வார்த்தையிலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றிரவு மீண்டும் சுகமளிக்கும் ஆராதனை இருக்கும், அதைத் தொடர்ந்து இராப்போஜன ஆராதனை நடைபெறும். 2 இப்பொழுது ஒரு ஒரு குழந்தை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென்று நான் நம்புகின்றேன்... யாரோ ஒருவர் குழந்தையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பதற்காக இங்கு கொண்டு வந்துள்ளதாக சகோ,நெவில் என்னிடம் கூறினார். இப்பொழுது அந்த குழந்தையை இந்த நேரத்தில் கொண்டு வருவார்கள் ஆனால் நலமாயிருக்கும். நம்முடைய சகோதரன் இங்கிருந்தால் அல்லது அவர்களில் யாராவது ஒருவர் இசைக்கருவியை அல்லது இசைப் பேழையை இசைக்கட்டும். அப்பொழுது அந்த குழந்தையைக் கொண்டு வருவார்கள் ஆனால், நாம் பிரதிஷ்டை ஆராதனையை நடத்திவிட்டு, நம்மால் இயன்றவரை துரிதமாக வார்த்தைக்குச் செல்ல முடியும். 3 ஏனெனில் நாம் வார்த்தையில் நிலைத்திருக்க விரும்புகிறோம். அதுவே அதுவே முக்கியமான காரியம். நமது நேரத்தை சரியாக கர்த்தருடைய வார்த்தைக்கு சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இன்று... இந்த இவ்வாராதனையில் இங்கு உங்களைச் சந்திக்க கிடைத்த தருணத்திற்காக நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம். 4 நான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். சகோதரியே, பரவாயில்லை. நான்... நான்... அவ்வாறு எண்ணினேன். அது ஒரு தவறாய் இருக்கலாம். சரி. இப்பொழுது நான் உங்களுக்கு மிக அதிகமாய் நன்றி கூறுகிறேன். ஒருக்கால் அது வேறொருவர் மூலம் வந்தது என்று நான் நினைக்கிறேன். எனவே இது ஒரு விதமாக அதனைக் கடினமாக்கிவிட்டது. 5 இப்பொழுது எல்லோரும் நலமாக உணருகிறீர்களா-? [சபையோர், "ஆமென்” என்கிறார்கள்.- ஆசி.) தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக-! 6 [சகோ.நெவில், “இதோ அவர்கள் வருகின்றனர்.” என்று கூறுகிறார் - ஆசி.) இப்பொழுது, ஓ, ஆம், இதோ சிறு பையன்கள் இருக்கின்றனர். என்னை மன்னிக்கவும். என்னை மன்னிக்கவும். அது சரி, மூப்பரே, நீங்கள் இங்கே வருவீரா-? ("ஆம் ஐயா.”] 7 நல்லது, சிறு பழுப்பு நிறக்கண்களையுடைய சிறுமிகள், இரண்டு அருமையான சிறிய சிறுமிகள்-! ஹூம்-? அது அழகாயுள்ளது. இவளுடைய பெயர் என்ன-? இங்கே பார்-! (தாய், "ஜெனிபர் லீ," என்று கூறுகிறார்கள். - ஆசி.) ஜென்னி-? ["ஜெனிபர் லீ.") ஜெனிபர் லீ. கடைசி பெயர் என்ன-? ("செரப்ட்,") செரப்ட். சகோதரி லீ, நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்-? ("வெர்செய்ல்ஸ், இல்லினாய்.") வெர்செய்ல்ஸ், இல்லினாய் எவ்வளவு அருமையானது-! 8 இப்பொழுது, வேதாகமத்தில், இப்பொழுது, வழக்கமாக, அவர்கள்... அவர்கள் குழந்தைகள் ஞானஸ்நானத்தைக் கொண்டிருக்கின்றனர்; குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதில் நமக்கு நம்பிக்கை கிடையாது. ஏனெனில் அவைகள் பாவம் செய்யவில்லை, ஏனெனில் அவை மிகச் சிறிய பருவம் கொண்டவைகள். ஆனால் குழந்தைகளை கர்த்தருக்குப் பிரதிஷ்டை செய்வதில் நாம் விசுவாசம் கொண்டிருக்கிறோம். இப்பொழுது மூப்பரும் நானும் சிறிய குழந்தையின் மேல் கைகளை வைக்கப்போகின்றோம். ஜென்னி, நீங்கள் என்ன கூறினீர்கள், (சகோ.நெவில், "ஜெனிபர்" என்று கூறுகிறார்.- ஆசி.) ஜெனிபர். அது சரி. நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 9 பரலோகப் பிதாவே, இக்காலை வேளையில் ஜெனிபர் என்று அழைக்கப் படுகின்ற இந்த சிறுமியை நாங்கள் உம்மிடம் கொண்டு வருகையில், இந்த தாயும், அருமையானவர்களும், கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட இவளை நீண்ட தூரத்திலிருந்து அழைத்து வந்திருக்கின்றனர். உம்முடைய நாட்களில், உம்முடைய கரங்களை இதைப் போன்ற சிறிய பிள்ளைகள் மேல் நீர் வைத்தீர், மேலும், "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள், அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்றீர். இப்பொழுது நாங்கள் இவளை, ஊழியம் செய்யும் ஜீவியத்திற்காக உம்மிடம் அளிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 10 அடுத்த சிறுமியின் பெயர் என்ன-? [தாய் "கானி-லின்”- என்று கூறுகிறார்-ஆசி.) கானி-லின். சரி, குட்டி கானி, என்னை சிறிய ஒன்றாக உணரும்படி செய்கின்றது. ஓ, நீ பயப்படுகின்றாயா-? ஓ, அது அப்படி நடக்காது, தாயே. சரி. நமது தலைகளை நாம் வணங்குவோமாக. 11 கர்த்தராகிய இயேசுவே, இக்காலை இந்த சிறு கானியை, சர்வ வல்லவருக்கான பிரதிஷ்டை ஆராதனைக்காக எங்களிடம் இந்த தாய் கொண்டு வந்திருக்கிறார்கள். அவளை வளர்க்கத்தக்கதாக இந்த குழந்தையை நீர் அளித்தீர், இந்த சகோதரியுடன் அவள் இதை உம்மிடம் கொண்டு வந்து இருக்கிறாள். பரலோகப் பிதாவே, நீர் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கின்றேன். குடும்பத்தை ஆசீர்வதியும். இந்த சிறுமியை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவளின் மீது நாங்கள் கரங்களை வைக்கையில், இவளை நாங்கள் உம்மிடம் ஒரு ஊழியம் செய்யும் ஜீவியமாக அளிக்கின்றோம். ஆமென். உங்களையும் அங்கே இருக்கின்ற உம்முடைய சிறு பிள்ளைகளையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. என்ன, அநேக சிறு பிள்ளைகள் இப்பொழுது நம்மிடையே இருக்கின்றனவே-! 12 இந்த சிறு பையனின் பெயர் என்ன-? (தாய் "ஜோயல்-லீ-வாட்சன்" என்று கூறுகிறார்கள்.- ஆசி.) ஜோயல்-வாட்சன். - ("ஜோயல் லீ.") ஜோயல்-லீ-வாட்சன். என்ன ஒரு அருமையான பையன், மகத்தான பெரிய நீல நிறக் கண்கள்-! என்னே-! நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றீர்கள்-? [“ஈஸ்ட்மேன், ஜார்ஜியா.") ஜார்ஜியாவிலிருந்தா. ["உம் -ஊம்.") நீங்கள் தெற்கிலிருந்து வந்தீர்கள் என்று நான் நினைத்தேன். எனக்கு தெரியவில்லை... ["நல்லது, எங்களுடைய வீடு டிப்டன் அருகில் இருக்கின்றது. அது அங்கேயிருக்கின்றது.") ஓ. ஆம், ஓ. ஹை-! இவன் ஒரு அருமையான சிறிய ஜார்ஜியா பையன் ஆவான், பிறகு, ஹூ-? அது சரி, ஐயா. ஆம், ஐயா, அது மிக அருமையானதாகும். இவனால் பேசக் கூட முடியும். உன்னால் பேச முடியுமா-? நமது தலைகளை நாம் வணங்குவோமாக. 13 பரலோகப் பிதாவே, தங்கள் இணைப்பின் பயனாக, இந்த தாயும் தந்தையும் இங்கே நிற்கையில், இந்த அருமையான சிறு பையனை நாங்கள் கொண்டு வருகிறோம். நீர் இந்த சிறு பையனை வளர்க்கத் தக்கதாக இவர்களிடம் கொடுத்திருக்கின்றீர், ஆகவே இவர்கள் இதை மறுபடியுமாக உம்மிடம் திரும்பக் கொண்டு வந்து உள்ளனர். ஒரு குழந்தைக்காக ஜெபித்த பழைய ஏற்பாட்டில் அன்னாளைப் போன்று, என்ன ஒரு ஒரு அழகான காட்சி இது; பிறகு- பிறகு தேவன் அவளுக்கு ஒரு குழந்தையை அளித்தார், அவள் பிரதிஷ்டைக்காக, மறுபடியுமாக தேவனுடைய ஆலயத்திற்கு அதைக் கொண்டு வந்தாள். கர்த்தாவே, இந்த சிறு பையன் உம்முடைய ஊழியனாக இருக்கவும், தந்தையும் தாயும் ஆசீர்வதிக்கப்படவும், இதை வளர்க்க ஆரோக்கியத்தையும் பெலத்தையும் கொண்டிருக்கும்படியாக அருள் புரியும். ஆகவே நாங்கள் இதை உம்மிடம் சமர்ப்பிக்கையில் இது தாமே ஒரு நீடித்த, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து உம்முடைய ஊழியக்காரனாக இருக்கட்டும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். (தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக-!) இவனை ஒரு அருமையான மனிதனாக, ஒருக்கால் குட்டி சாமுவேலைப் போல இன்னுமொரு சிறு தீர்க்க தரிசியாக ஆக்கும். 14 இப்பொழுது இங்கே இரண்டு அருமையான சிறு பையன்கள் இருக்கின்றனர். என்னே-! அப்படியானால் மூன்று பேர் இருக்கின்றார்களா-? நல்லது, அது ஒரு முழு குடும்பம் ஆகும். உன்னுடைய பெயர் என்ன-? [அந்தப் பையன் "மைக்கேல்" என்கின்றான்.) மைக்கேல். உன்னுடைய பெயர்-? [அடுத்த பையன் "பவுல்" என்று கூறுகிறான்.) பவுல் என்ன அருமையான பெயர்கள்-! உன்னுடையது என்ன-? [சிறுமி "டெப்பி” என்கின்றாள்.) தெபொரா, அது உண்மையாகவே அருமையானது. மைக்கேல், மற்றும் பவுல், மற்றும் தெபொரா. ஆகவே உங்களுடைய கடைசி பெயர் என்ன-? (தகப்பன் "எல்லிஸ்" என்று கூறுகின்றார்.) எல்விஸ்-? ["ஆம்.") நல்லது, அது ஒரு மகத்தான அருமையான சிறு குடும்பம் என்றே நான் உங்களிடம் கூறிக்கொண்டிருக்கின்றேன். 15 உங்களுக்குத் தெரியுமா, இதைப் போன்ற சிறு நபர்களை நான் பார்க்கையில், நான் சிறு பையானாக இருந்த நினைவிற்கே மறுபடியுமாக அது எப்பொழுதும் என்னைக் கொண்டு செல்கின்றது. ஆகவே இப்பொழுது “இவர்கள் இப்பொழுது உங்கள் காலின் மேல் மிதிப்பார்கள், பிறகு உன் இருதயத்தை மிதிப்பார்கள்" என்னும் பழைய பழமொழி உங்களுக்குத் தெரியும், ஆனால் இவர்களை நாம் கர்த்தரிடம் பிரதிஷ்டை செய்து விட்டால் அவ்வண்ணமாய் இருக்கும் என்று நான் விசுவாசிப்பதில்லை. இங்கே நமக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது, தேவன் இதை உங்கள் கரத்தில் வைத்திருக்கின்றார். உங்களிலிருந்து ஒரு பிரசங்கியை அவர் உண்டாக்கினார். எப்பொழுதுமே நான் பெண் பிரசங்கிகளைக் குறித்து கூறினது உண்டு, உங்களுக்குத் தெரியும், ஆனால் ஒவ்வொரு தாயும் ஒரு பிரசங்கியாவாள், இதோ அவள் சபை. பாருங்கள், தந்தை வேலை செய்கையில், இந்த சிறிய பையன்களை சரியாக வளர்க்க வேண்டியவளாக இருக்கின்றாள். ஆகவே உங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. தேவன் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஒரு அருமையான குடும்பத்தை நீங்கள் கொண்டு இருக்கின்றீர்கள். 16 எங்கள் பரலோகப் பிதாவே, முதலாவதாக பிறந்தவன் போல் காணப்படுகின்ற, சிறிய மைக்கேலுடன் நாங்கள் வருகின்றோம். இயேசு கிறிஸ்துவிற்கு பிரதிஷ்டை செய்ய நாங்கள் கரங்களை இவன் மீது வைக்கிறோம். அவரவருடைய குடும்பம் தங்கள் சிறு பிள்ளைகளைக் கொண்டு வருகின்றது. ஏனெனில் நீர் இவர்களுடைய பொறுப்பில் இதை வைத்து இருக்கின்றீர், உம்முடைய உதவி இல்லாமல் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை இவர்கள் அறிந்திருக்கின்றனர். ஆதலால் இவர்கள் தங்கள் சிறு குடும்பத்தை, பிரதிஷ்டை செய்ய கொண்டு வருகின்றனர். 17 இப்பொழுது இந்த சிறு மைக்கேலை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஊழியத்தின் ஜீவியத்திற்கென நான் இங்கே உம்மிடம் அளிக்கின்றேன். அதே விதமாக இந்த சிறிய பவுலின் மீதும் நாங்கள் கரங்களை வைக்கிறோம். தேவனுடைய மகிமைக்கென்று ஊழியத்தின் ஜீவியத்திற்கென இவனுடைய ஜீவயத்தை நாங்கள் பிரதிஷ்டை செய்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நினைவாக, பிரதிஷ்டைக்காக, பிதாவே இந்த சிறு தெபொராவின் மீது எங்கள் கரங்களை நாங்கள் வைக்கிறோம். இயேசு தம்முடைய கரங்களை சிறு பிள்ளைகள் மீது வைத்து, அவர்கள் என்னிடம் வருவதற்கு தடை செய்யாதிருங்கள்" என்றாரே. இந்த சிறு பெண்ணுடைய ஜீவன் தேவனுடைய இராஜ்ஜியத்தில் ஆசீர்வதிக்கப் படுவதாக 18 தந்தையையும், தாயையும் ஆசீர்வதியும், இவர்கள் தாமே நீண்ட சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து, தங்கள் பிள்ளைகள் தேவனுடைய ஊழியத்தில் இருப்பதை காணட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இவர்களை பிரதிஷ்டை செய்கையில், தேவனுடைய மகிமைக்கென்று நாங்கள் இந்த ஆசீர்வாதத்தை கேட்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக-! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக நீங்கள் ஒரு அருமையான சிறிய குடும்பம். ஆம். 19 என்ன ஒரு... நான் நினைப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? நான் ஒரு சிறு பையானாக இருந்த போது, அப்பொழுது இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது சிறுமிகள் அழகாகக் காணப்படுகின்றனர். ஆம், ஐயா, என்ன மகத்தான பெரிய கண்கள்-! இவள் பெயர் என்ன-? (தாய், "யோவன்னா " என்று கூறுகிறாள்-ஆசி.) யோவன்னா. உன்னுடைய கடைசி பெயர்... [தந்தை "பிளேர்" என்று கூறுகிறார் - ஆசி.) பிளேர், யோவன்னா பிளேர். அங்கே திரும்பி பார்த்துக் கொண்டிருக்கும் நீ, இவள் ஒரு பொம்மையல்லவா-? ஆம், ஐயா, யோவன்னா, நீ எப்படியிருக்கின்றாய், ஹூ-? சற்று கூச்சமுள்ள ஒரு சிறுமி, ஊ-, கூச்சம் சுபாவமுள்ள ஒரு சிறுமி. ஒரு அருமையான சிறுமி. நமது தலைகளை நாம் வணங்குவோமாக. 20 எங்கள் பரலோகப் பிதாவே, இந்த பிளேர்கள் குடும்பம் தங்கள் இணைப்பிற்கு இந்த சிறிய யோவன்னாள் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்கள் பொல்லாதவைகளாக இருக்கின்றது. விசேஷமாக இந்த சிறுமிகளை ஒவ்வொரு தருணத்திலும் தாறுமாறாக்க சாத்தான் இருக்கின்றான் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இவளை சரியாக வளர்த்தெடுக்க தங்களால் இயலாது என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இவள் சரியாக வளர்க்கப்பட்டு உமக்கு ஊழியத்தில் இருப்பவளாகக் காணப்பட வேண்டுமென்று இவர்கள் விரும்புகின்றனர். உமக்கு கனத்தை அளிக்க இந்த சிறுமியை இவர்கள் வளர்க்கின்றனர். இப்பொழுது, இவர்கள் பிரதிஷ்டைக்கென உம்மிடம் இவளைக் கொண்டு வருகின்றனர். தேவனுடைய மகிமைக்கென்று இந்த சிறு யோவன்னா பிளேயரை தேவன் உடைய இராஜ்ஜியத்திற்கு நாங்கள் பிரதிஷ்டை செய்கையில் இயேசு கிறிஸ்து வின் நாமத்தில் நாங்கள் எங்கள் கரங்களை இவள் மீது வைக்கின்றோம். ஆமென். சகோதரன் பிளேர் நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக கர்த்தர் உம்மோடு இருப்பாராக. 21 காலை வணக்கம், ஐயா-! [தந்தை "காலை வணக்கம்" என்று கூறுகிறார். ஆசி.) என்ன அருமையான பையன் இவன்-! ஹே, நீ எப்படியிருக்கின்றாய்-? நல்லது, என்னே, நீ இந்தப் புறமாக திரும்பினால் எவ்வளவு நன்றாக காணப்படுவாய். ஆம், ஐயா. அருமையான, அழகான, சிறிய தலையைக் கொண்டு இருக்கிறான், அதற்கிணைந்தாற் போன்று முகமும்கூட இருக்கின்றது. அஹ்-? இவன் பெயர் என்ன-? ("டானியேல் மார்க்.") டானியேல் மார்க் ஆகவே உன்னுடைய கடைசி பெயர்-? ["மார்க் கார்டம் .") ஹார்டம் ["கார்டம்.") கார்டம், டானியேல் மார்க் கார்டம். 22 சகோதரன் கார்டம், இங்கே சுற்று வட்டாரத்தில் இருக்கின்றீர்களா-? (சகோதரன் ஹாரீடன் "இப்பொழுது மெல்கெர்க் பட்டணம்” என்கிறார்-ஆசி.) ஆம், ஐயா. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்-? ["நான் நியுயார்க் மாநிலத்தைச் சேர்ந்தவன்.") நியூயார்க் மாநிலத்திலிருந்தா ஒரு யாங்கி, சரியா, (ஆம்.") நல்லது, அது ஒரு பெரிய மாநிலம். அங்கு வசிக்கிற சில ஜனங்கள் எனக்கு உறவினராய் இருக்கின்றனர். என் மாமா பிலாட்ஸ்பர்கில் வசிக்கின்றனர். ஓ, நியூயார்க்கில் நல்ல நேரத்தை கொண்டிருந்தேன். அங்கே என்னுடைய அடுத்த கூட்டத்திற்கு நியூயார்க் பட்டணத்திற்கு, அங்கே உள்ள ஸ்டோன் சபைக்குச் செல்கிறேன். சரி. 23 இப்பொழுது, இவனுடைய பெயர் மார்க் என்று கூறினீர்கள் அல்லவா-? [தந்தை "டானியேல் மார்க்" என்று கூறுகின்றார்.- ஆசி.) டானியேல் மார்க், என்ன ஒரு அருமையான சிறிய பையன்-! நமது தலைகளை நாம் வணங்குவோமாக. 24 கர்த்தராகிய இயேசுவே, இந்த சிறிய டானியேல் மார்க்கை, இவனுடைய ஜீவிய பிரதிஷ்டைக்காக உம்மிடம் நாங்கள் கொண்டு வருகிறோம். தேவன் உடைய போதனையில் சிறு குழந்தையை வளர்த்தெடுக்க, தந்தை மற்றும் தாயினுடைய கரங்களில் இது கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனைச் செய்ய குறைவு உள்ளவர்களாயிருக்கிறார்கள் என்பதை இவர்கள் அறிந்திருக்கின்றனர், ஆதலால் கர்த்தாவே, நீர் தாமே இதன் ஜீவியத்தை ஆசீர்வதிக்கத்தக்கதாக, உம்மிடம் இதைக் கொண்டு வருகின்றனர். ஆகவே, இப்பொழுது, நாங்கள் வாழ்கின்ற நாள் பொல்லாதது என்று நாங்கள் அறிந்திருக்கின்றோம். இந்த சிறு பிள்ளைகளை நாங்கள் பார்க்கின்றோம், நாளை இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை நாங்கள் அறியோம். ஆனால், என்னவாயிருந்தாலும் சரி, உம்முடைய கரத்தில் இவர்களைக் நாங்கள் சமர்ப்பிக்கின்றோம். இந்த சிறு பையனின் மீது நாங்கள் கரங்களை வைத்து, இவனுடைய ஜீவியத்தை, தேவனுடைய இராஜ்ஜியத்திற்கான ஊழியத்தின் ஜீவியத்திற்கென பிரதிஷ்டை செய்கிறோம். இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 25 சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இவன், ஒரு அருமையான பையன் குட்டி மார்க், நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக. ஓ. உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவ களங்களிலிருந்து அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள்; ஓ, அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், இந்த சிறுவர்களை இயேசுவிடம் கொண்டு வாருங்கள். அது அற்புதமாயுள்ளதே-! சகோதரியே உங்களுக்கு நன்றி. 26 எத்தனை பேர் கடந்த ஞாயிறு, இங்கிருந்து, கடந்த ஞாயிறன்று ஜெபித்துக் கொள்ளப்பட்டு, அதன் பலனை உணர்ந்து, நீங்கள் சுகமடைந்துவிட்டதாக உணருகிறீர்கள்-? ஜெபித்துக் கொண்டவர்கள் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். ஓ, என்னே, இங்கே பாருங்கள், கிட்டத்தட்ட அவர்கள் ஒவ்வொருவருமே. 27 [சகோ.நெவில், "அல்லேலூயா-! அது அற்புதமானதல்லவா-! தேவனுக்கு ஸ்தோத்திரம்-! வாரம் முழுவதுமாக நான் இதை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்" என்று கூறுகிறார்.-ஆசி.) ஆம், ஐயா, நானும் கூட உட்கார்ந்து கொண்டு, கேட்டுக் கொண்டிருக்க விரும்புவேன், பாருங்கள். 28 பாருங்கள், ஏதோ ஒன்று சம்பவித்துக் கொண்டு வருகின்றது, அதைக் குறித்து நான் பின்பு கூறுகின்றேன். சில நேரத்தில், பாருங்கள், அது அது மிகவும் மகிமை உள்ளதாகவும் அற்புதமாயுமுள்ளது. நாம்... நாம் வேறொரு கூட்டத்தில், மற்றொரு சமயத்தில் அதைக் குறித்து பேசலாம். உங்களுக்குத் தெரியும் இப்பொழுது தான் அது நிகழத் தொடங்கியுள்ளது. அதற்காக நாம் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். 29 நான் கென்டக்கி நாட்டிற்குச் சென்றிருந்தேன். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வது வழக்கம். அங்குள்ள சில நண்பர்களோடு நான் அங்கிருந்தேன். நாங்கள் அணில் வேட்டைக்காக மாத்திரம் அங்கு செல்வதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள். 30 எனவே நாம் இப்பொழுது மகத்தான நேரத்தைக் கொண்டவர்களாய் இருக்கிறோம். நாம் கர்த்தருக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம்-! 31 இக்கூட்டம் முடிந்தவுடன் நான் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அதன் பின்னர் நாங்கள், சிறிது கழித்து, கூட்டத்திற்காக நான் நியூயார்க் பட்டணத்திற்குச் செல்ல வேண்டும். அச்சமயம் இங்கு வருவதற்கு ஓர் தருணம் கிடைத்தால், ஏன், வேறொரு கூட்டம் இக்கூடாரத்தில் நடத்துவதற்கு நாங்கள் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். 32 அதன் பிறகு ஷ்ரீவ்போர்ட் (Shreveport) என்னும் இடத்திற்கு நான் சென்று திரும்ப வேண்டும். ஆகவே பிறகு நாங்கள் வீடு திரும்பி, கர்த்தருக்குச் சித்தமானால், விடுமுறை நாட்களின் போது, மீண்டும் குடும்பமாக இங்கு வர நோக்கமாயிருக்கிறோம். அதன் பின்னர்... அதன் பின்னர் நான்... 33 அதன் பின்னர் ஜனவரி மாதத்தில் பீனிக்ஸில் என் கூட்டம் வருகிறது. அதுவோ கிறிஸ்தவ வர்த்தக புருஷர்களுக்கான வருடாந்தர கூட்டமாகும். அதற்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பு, ஒரு பெரிய இடத்தை வாடகைக்கு எடுக்க முயற்சி செய்யப் போகிறேன். அந்த 'இயேசுவின் நாமம்,' ஜனங்கள். சகோ.கார்சியா என்னும் ஸ்பானிய நாட்டு சகோதரனுக்கு ஒரு அற்புதமான விஸ்தாரமான ஸ்தலம் அங்குள்ளது. அவர்கள் இப்பொழுது தான் அதைக் கட்டியிருக்கிறார்கள். அநேக ஆயிரம் மக்கள் அங்கு அமரலாம். புத்தம் புதிய இடம், அவர்களுடைய சபையோ மிகச் சிறியது. எப்பொழுது வேண்டுமா னாலும் அதை நான் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் சுற்று வட்டாரமெங்கும் பள்ளத்தாக்கில் ஒவ்வொரு சபைக்கும் செல்வதற்குப் பதிலாக எல்லாரையும் ஒரு பெரிய கூட்டமாகக் கூட்டி, அந்த ஸ்தலத்தில் கூட்டமொன்றை வைக்கலாம் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் பாருங்கள். 34 அப்பொழுது அந்த ஆலயத்தை நாம் வாடகைக்கு எடுக்கலாம். அது முடியுமாவென்று இப்பொழுது நாங்கள் முயற்சி செய்யப்போகின்றோம். அதன் பின்பு கிறிஸ்த வர்த்தக புருஷரின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளுவேன். நான் வெளி நாட்டுப் பயணம் மேற்கொள்வது சரியாக ஒழுங்கு செய்யப்படும் வரை, தென் பாகத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூட்டங்கள் ஒழுங்கு செய்ய நாங்கள் முயற்சிக்கப்போகிறோம். அதன் பின்னர் போக விருப்பது... ஏனெனில் இப்பொழுது நாங்கள் கிறிஸ்துமஸ் சமயத்தில் புறப்பட்டு, ஆப்பிரிக்காவை அடையும் தருணத்தில், ஜூலை நான்காம் தேதியாகும்; பாருங்கள், அப்பொழுது அது மழை காலமாயிருக்கும். அச்சமயம் அங்கு செல்லவே முடியாது. எனவே அதற்குப் பிறகு அங்கு செல்வது மிகச் சிறந்த நேரமாயிருக்கும். கூடுமானால் நாங்கள் நார்வே தேசத்தில் தொடங்கி, உலகத்தைச் சுற்றி, கர்த்தருக்குச் சித்தமானால், ஆப்பிரிக்காவில் கூட்டங்களைத் துவங்க விரும்புகிறோம். 35 ஆனால் இப்பொழுது எங்களுக்காக ஜெபியுங்கள். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். அது உங்களுக்குத் தெரியும். நாங்கள் செய்ய முடிந்ததற்கும் அல்லது நினைப்பதற்கும், அதிகமாக கர்த்தர் கிரியை செய்வார் என்று நாங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 36 இன்றிரவு ஒரு மகத்தான சுகமளித்தல் ஆராதனை இருக்கும் என்று நாம் நம்புகிறோம். ஒரு ஆராதனை இருக்கும் என்றே நான் நம்புகிறேன். எனவே நான் பிரசங்கம் செய்யப் போவதில்லை, சிறிது நேரம் மாத்திரமே பேசுவேன். ஏனெனில் இன்றிரவு அவர்கள் இராப்போஜன ஆராதனையொன்றை ஏற்பாடு செய்து உள்ளனர். எனவே 20 அல்லது 30 நிமிடங்கள் மாத்திரமே பேசுவேன். அதன் பின்பு நமக்கு ஜெபவரிசை இருக்கும். அது முடிந்தவுடன், உடனடியாக நாம் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளலாம். எங்களுடன் தங்கி அதில் பங்கு கொள்ள உங்களை வரவேற்கிறோம்; அப்பொழுது நாங்கள் மகிழ்ச்சியடைவோம்; நாங்கள் ஒரு ஒரு குறிப்பிட்ட சாரருக்கான இராப்போஜனம் நடத்துவதில்லை. (closed communion) அது ஒவ்வொரு விசுவாசிக்கும், ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியதாயுள்ளது. 37 நாம் வேத வசனங்களைப் படிக்கும் முன்பு, ஒரு நிமிடம் நமது தலைகளை வணங்குவோமா-? என்று நான் எதிர்பார்க்கிறேன். தேவன் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிக்கும்படி எனது நல்ல நண்பர் சகோ.லீ-வேயில் அவர்களை நான் கேட்டுக் கொள்ளப் போகிறேன். அவர் நம்மை ஜெபத்தில் வழி நடத்துவார். சகோ.வேயில், நீர் எங்களுக்காக அதைச் செய்வீரா-? (சகோ.லீ-வேயில் இப்பொழுது ஜெபம் செய்கிறார்-ஆசி.) ஆமென். கர்த்தாவே அதை அருளும். கர்த்தாவே அதை அருளும். கர்த்தாவே அதை அருளும். ஆம் கர்த்தாவே. ஆமென். 38 இப்பொழுது பயபக்தியுடன் நாம் வார்த்தையை அணுகுவோம். இன்று காலை, இப்பொழுது யாத்திரயாகமம் 12-ம் அதிகாரத்திலிருந்து, 12-ம் வசனம் துவங்கி, 13-ம் வசனம் உட்பட வாசிக்க விரும்புகிறேன். இப்பொழுது நன்றாக கவனியுங்கள். இன்றிரவு இராப்போஜனத்திற்கு முன்பு யாத்.12-ம் அதிகாரம் முழுவதையும் படியுங்கள். அந்த அதிகாரத்தின் 11-ம் வசனம் பிரயாணத்திற்கு ஆயத்தம் ஆகுதலையும், அந்த பயணத்திற்கு முன்பு நிகழ்ந்த இராப் போஜனத்தையும் குறிக்கிறது. இப்பொழுது நாம் அதை மிகுந்த பயபக்தியுடன் அணுக விரும்புகின்றோம். இப்பொழுது 12-ம் அதிகாரத்தில் 12-ம் வசனம். அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்து போய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருகஜீவன்கள் மட்டும் முதற்பேறாய் இருக்கிறவைகளையெல்லாம் அதம் பண்ணி, எகிப்து தேவர்களின் மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும் போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும். 39 கர்த்தர் தாமே தமது பரிசுத்தமான வார்த்தையை ஆசீர்வதிப்பாராக 40 இப்பொழுது இந்த வசனங்களிலிருந்து ஒரு பொருளைத் தெரிந்தெடுக்க விரும்புகிறேன்: அது ஆங்கிலத்தில் ஐந்து எழுத்துக்கள் கொண்ட சிறிய வார்த்தையான "அடையாளம்.” அடையாளம்-! நான் அந்த வார்த்தையின் பேரில் பேச, அல்லது ஞாயிறு பள்ளி போதனையையளிக்க விரும்புகிறேன், அதாவது "அடையாளம்" என்ற ஒரு வார்த்தையின் பேரிலாகும். வேதாகமம், "அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்" என்று இங்கு உரைக்கின்றது. "அடையாளம்" என்னும் சொல்லை நாம் உபயோகிக்க விரும்புகிறோம். 41 இப்பொழுது நமக்குத் தெரியாது: நான் கடிகாரத்தை நோக்கி, சமயம் கடந்து விடும் போது, நல்லது. இவைகளை... நான் அநேக வேத வாக்கியங்களை இங்கு எழுதி வைத்துள்ளேன். ஆகவே இல்லை... நான் சிறிது காலம். உங்களுடன் இருக்கமாட்டேன் என்பதனை அறிவேன். நம்மில் சிலருக்கு இதுவே கடைசி சந்திப்பாக இருக்காது என்பதை நாம் எப்படி அறிவோம்-? எனவே மிகுந்த பயபக்தியுடன் இதை அணுக நாம் முற்படுவோம். அது மிகவும் கடினமானது என்று எனக்குத் தெரியும். இப்பொழுதும் கூட கர்த்தர் நமக்கு ஒரு அருமையான காலையை அளித்துள்ளார். அது ஆராதனைக்கு அருமையானதாய் உள்ளது. இப்பொழுது நாம் பேசவிருக்கும் எல்லாவற்றின் மேலும் நமது மனதை ஒரு முகப்படுத்துவோம். எனவே அதாவது. நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று கர்த்தர் விரும்பும் ஏதாகிலும் ஒன்று இருக்குமானால், அது உங்களுக்கு அருளப்படும். 42 மற்றவர் நம்மை காண வேண்டுமெனும் நோக்கத்துடன் நாம் இங்கு வரவில்லை. நாம் அணிந்துள்ள உடைகளை மற்றவர் காண வேண்டும் என்பதற்காக நாம் இங்கு வரவில்லை. அதாவது... நாம், ஒரே ஒரு நோக்கத்திற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். நமது சகோதரன் இப்பொழுது ஜெபம் பண்ணினது போன்று, "நம்மிடத்தில் வரும் வார்த்தையை, தேவன் உடைய வார்த்தையைக் கேட்பதற்காக நாம் இங்கு கூடி வந்துள்ளோம்." நமக்கு அதுவே வேண்டும், ஏனெனில் அது ஒன்றே நமக்கு அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கப் போகிறது. அது ஒன்றே நமக்கு கணிசமாகவும், அதுவே அதுவே நமக்கு உதவி செய்யும் ஒன்றாகவும் இருக்கப்போகிறது. 43 நாம் மரித்துக் கொண்டிருக்கும் ஜனங்களாய் இருக்கிறோம். மானிடர் அனைவரும் நித்தியத்தை நோக்கி செல்ல வேண்டியவராய் இருக்கின்றனர். எனவே, எந்த வழியில் செல்ல வேண்டுமென்று தீர்மானம் செய்ய நமக்கு இவ்வளவு சமயம் தான் இருக்கின்றது. பாதை நமக்கு முன்பாக உள்ளது. நாம் இரண்டு வழிகளில் எந்த வழியை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். அந்நிலையில் தான் அவர் ஆதாமையும் ஏவாளையும் வைத்தார். அவ்வாறே தம்மையும் அவர் அந்நிலையில் வைத்துள்ளார். 44 நாம் எதைச் செய்தாலும், அல்லது வாழ்க்கையில் நாம் எவ்வளவாக வெற்றி கண்டாலும் அது ஒரு பொருட்டல்ல, கிறிஸ்து இல்லாமற் போனால் நாம் எல்லாவற்றையும் இழந்தவர்களாய் இருப்போம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே அவரையே... நாம் நோக்கிப் பார்க்க வேண்டியது அனைத்தும் அவரைத் தான் என்றால், அவரை வாஞ்சையுடன் ஏற்றுக் கொள்ளாமல் போனால் நாம் மிகவும் மூடர்களாயிருப்போம். அவரை ஏற்றுக் கொள்வது மாத்திரமல்ல, ஆனால் நீங்கள் அதைக் காட்டிலும் சிறந்த ஒரு காரியத்தண்டை வருகின்றீர்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்ட பின்பு, அலமாரியில் அதை சும்மா வைத்து விடாதீர்கள். அது உபயோகிக்கப்பட வேண்டியதாயுள்ளது. 45 நீங்கள் வைத்தியரிடம் சென்று மருந்தை வாங்கி வந்து, அதை அலமாரியில் வைத்து விடுவது போன்றாகி விடும். நீங்கள் மருந்தைப் பெற்றுக் கொண்டால் அதை உட்கொள்ள வேண்டும். ஏதாகிலும் ஒரு வியாதி உங்களைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தால், இந்த மருந்து உங்களுக்கு உதவி செய்ய வைத்தியர் கொடுத்த மருந்தையே நீங்கள் பருக வேண்டும். அவர் கற்பித்தபடியே, நீங்கள் அந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில நிமிடங்கள் தாமதம் ஆனாலும், நீங்கள் அதை உட்கொள்கிற விதத்தில், அது நிறைய வித்தியாசத்தை உண்டாக்கும். நாம் எப்படி அறிவோம்.... 46 ஆனால் இவ்விஷயத்தில், இன்றைக்கு, உங்கள் ஒரு நொடி பொழுதின் முடிவானது உங்கள் நித்திய ஜீவிய சேருமிடத்தை நிர்ணயிக்கலாம். உங்களிடம் அவர் எப்படி கொடுக்கின்றாரோ அப்படியே அதை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அடையாளம்... “இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்". 47 இப்பொழுது ;அடையாளம்,' (Token) என்றால் என்ன-? ஆங்கிலம் பேசுபவர் இடையே, முக்கியமாக அமெரிக்காவில் வாழும் மக்களிடையே இச்சொல் வழக்கமாக உபயோகிக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் ஒரு அடையாளம்... உண்மையாகவே, அகராதியில் டோக்கன் என்ற பதத்திற்கு அடையாளம் என்று அர்த்தம் உரைக்கிறது. அது கிரயம் ஏற்கனவே செலுத்தப்பட்டதன் அறிகுறியாக ஒரு அடையாளம் அளிக்கப்படுகின்றது, பாருங்கள்; அந்தக் கட்டணம் அல்லது ஒரு கிரயம், கேட்கப்பட்ட கிரயம் செலுத்தப்பட்டது என்பதன் அடையாளமாகும். 48 ஒரு இரயில் பயணக்கட்டணம் அல்லது ஒரு பேருந்து கட்டணம் போன்றது ஆகும். நீங்கள் சென்று உங்களுடைய கட்டணத்தை செலுத்தினவுடனே அதற்கு அறிகுறியாக அவர்கள் ஒரு ''அடையாளத்தை," தருகின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு மாத்திரமே அதை உபயோக்கிக்க வேண்டுமேயன்றி, வேறு எதற்கும் உபயோகிக்க முடியாது. ரயில் நிர்வாகத்தினருக்கு நீங்கள் உங்களுடைய கட்டணத்தை செலுத்திவிட்டீர்கள் என்பதற்கு தரும் அது ஒரு அடையாளமாயுள்ளது. அது ஒரு அடையாளம், நீங்கள் அதை வேறெதற்கும் உபயோகிக்க முடியாது. அது வேறெந்த துறைக்கும் பயன்படுகிறதில்லை. அது அந்த துறைக்கு மாத்திரமே பயன்படுகிறது அது ஒரு அடையாளம். 49 இப்பொழுது நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கும், பேசத் துவங்கியுள்ள விஷயத்தில், தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடம், "இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் (Token) இருக்கும்” என்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் ஆட்டுக் குட்டியைக் கொல்வதே யேகோவாவினால் கேட்கப்பட்ட அடையாளமாய் இருந்தது. அது இரத்தமாக இருக்க வேண்டும். தேவன் ஒரு அடையாளத்தை உண்டு பண்ணி, அதை இஸ்ரவேலருக்கு அளித்திருந்தார். வேறெந்த அடையாளமும் கிரியை செய்யாது, பாருங்கள், அது அங்கீகரிக்கப்படமுடியாது. 50 உலகத்திற்கு அது ஒரு மூடத்தனமாகத் தென்படலாம். ஆனால் தேவன் உடைய பார்வையில் அந்த ஒரு வழிதான் உண்டு. அவருக்குத் தேவை அந்த ஒரு அடையாளம் மாத்திரமே. அது அங்கே இருக்க வேண்டும். கிரயத்தை செலுத்தாமல் அந்த அடையாளத்தை நீங்கள் வாங்கிக் கொள்ள முடியாது. அவ்விதம் கிரயத்தை நீங்கள் செலுத்தும்போது, நீங்கள் அந்த அடையாளத்தின் உரிமை ஆளாகிவிடுகிறீர்கள், அது ஒரு அனுமதிப் பெற்ற சிலாக்கியத்தை உங்களுக்கு அளிக்கிறது. அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்." என்னே நேரம், அந்த அனுமதிச் சீட்டை உங்களுக்குள் வைத்து உள்ளீர்கள் என்பதை அறிவது என்ன ஒரு சிலாக்கியமாயுள்ளது. அந்த இரத்தத்தை நான் காணும் போது, உங்களைக் கடந்து போவேன்." அந்த காரியத்தை மாத்திரமே அவர் அங்கீகரிப்பார். அதன் ஸ்தானத்தை வேறெதுவும் எடுத்துக்கொள்ள முடியாது. ஈடாக எதையும் பெறவும் முடியாது, ஸ்தாபனங்கள் ஆனாலும் சரி, வேறெந்த ஓன்றாலும் கூட முடியாது. தேவன் அதை மாத்திரமே நான் காண்பேன்” என்றார். 51 அவர்கள் எவ்வளவாக நீதிமான்களாய் இருந்தாலும், எவ்வளவாக நல்லவர்களாய் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் எவ்வளவாக கல்வி அறிவு பெற்றிருந்தாலும், அவர்கள் எவ்வளவு தான் சிறந்த ஆடைகளை அணிந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அந்த அடையாளம் (Token) ஒன்று மாத்திரமே முக்கியம் வாய்ந்தது. அந்த அடையாளத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்." யேகோவாவின் தேவையை பூர்த்தி செய்ததன் அறிகுறியாக இரத்தம் ஒரு அடையாளமாய் இருந்தது. அதுவே அதை செய்ததாய் இருந்தது, இரத்தமே அடையாளமாய் நின்றது. இரத்தம் தான் அடையாளமாய் இருந்தது, பாருங்கள்-? அந்த ஜீவன்... 52 தேவன், "அதைப் புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய்" என்று கூறி இருந்தார். ஆனால் விசுவாசியின் ஜீவனுக்கு ஈடாக வேறொரு ஜீவன் அங்கு அளிக்கப்பட்டது. தேவன் இரக்கத்தின் நிமித்தம், கறைபட்ட நபருடைய ஜீவனுக்கு ஈடாக வேறொரு ஜீவனை ஏற்றுக் கொண்டார். தம்முடைய பிள்ளை தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காததனால் உண்டான பாவத்தினால் கறைபட்ட போது, இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் அதற்கு ஈடாக வேறு ஓன்றை அருளினார். அவனுக்குப் பதிலாக வேறொன்று அங்கு மரிக்க வேண்டியதாயிற்று. இல்லாவிடில் வேறொன்றும் கிரியை செய்ய முடியாது. 53 அந்தக் காரணத்தினால் தான் காயீனின் ஆப்பிள் பழங்களும், பீச் (Peach) பழங்களும் கிரியை செய்யவில்லை. இரத்தத்திலுள்ள ஜீவனாக அது இருக்க வேண்டியதாயிருந்தது. பலி செலுத்தப்படும்போது, ஜீவன் அதனின்று புறப்பட்டுச் சென்றது. தேவனுடைய கட்டளை நிறைவேற்றப்பட்ட தன் அடையாளமாக இரத்தம் இருந்தது. இப்பொழுது தேவனுக்கு எது தேவைப்பட்டது-? ஜீவன். ஜீவன் போக வேண்டியதாயிருந்தது என்பதை இரத்தம் காண்பித்தது. எனவே ஜீவன் செலுத்தப்பட்டு இருந்தது என்பதன் அடையாளமாக இரத்தம் இருந்தது, அதாவது ஏதோ ஒன்று மரித்தது. தேவனுடைய தேவை: இரத்தம் சிந்தப்பட்டு, ஜீவன் செலுத்தப்பட்டு இருந்தது ஜீவன் செலுத்தப்பட்டதன் அடையாளமாக இரத்தம் அமைந்திருந்தது. தேவன் உரைத்திருந்த மிருகத்தினுடைய ஜீவன் எடுக்கப்பட்டு, இரத்தமே அடையாளமாக நின்றது. புரிகிறதா-? 54 அந்த அந்த அந்த ஆராதிக்கும் விசுவாசி அந்த அடையாளத்தின் மூலம், தன்னுடைய பலியுடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றான். நான் நீண்ட நேரம் இச்சிறு மேற்கோள்களின் மேல் நிலைத்திருக்க விரும்பவில்லை. ஆனால், அதில் ஏதாவதொன்றின் மேல் பேசினால் ஒரு முழு ஆராதனையுமே நீங்கள் அதில் செலவிட நேரிடும். ஆனால் நான் இங்கு ஒரு நிமிடம் நிறுத்தி அதை வெளிப்படுத்திக் கூற விரும்புகிறேன். விசுவாசியானவன் தன்னுடைய பலியுடன் அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டியதாயிருந்தது. புரிகிறதா-? அது ஒரு பலியாயிருந்தால், அது எங்கோ செலுத்தப்பட்டு, அவன் அதை செலுத்தி இருந்தால், அவன் அதில் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டியதாய் இருந்தது. வெளிப்படையாகக் கூறினால், அதனுடன் ஒன்று படுவதற்காக, முதலாவது அவனுடைய கரங்களை அவர், பலி செலுத்தப்பட வேண்டிய மிருகத்தின் மேல்வைத்து, அந்த பலியுடன் தன்னை ஒருமுகப்படுத்த வேண்டும். அதன் பிறகு இரத்தமானது அங்கு வைக்கப்பட்டு அதனடியில் அவன் வந்து நிற்க வகை செய்யப்படுகின்றது. அந்த இரத்தம் அவன் மேல் இருக்க வேண்டும். அவன், தாமே குற்றவாளியென அடையாளங்கண்டு கொள்ளப்பட்டு, பாவமில்லாத ஒன்று அவனுடைய ஸ்தானத்தை ஈடாக எடுத்துக் கொண்டது என்று நிரூபிக்கப்பட்டதற்கு அடையாளமாக அந்த இரத்தம் இருந்தது. 55 என்னே ஒரு அருமையான காட்சி-! ஓ, மீட்கப்பட்டவன். பாருங்கள். நீதியானது நிறைவேற்றப்பட்டது, தேவனுடைய தேவையான பரிசுத்த நீதி அங்கு நிறைவேறினது. தேவன், "எனக்கு உன் ஜீவன் தேவை" என்கிறார். அப்பொழுது அந்த ஜீவன் பாவம் செய்த போது, பாவமேயறியாத ஒரு ஈடு அவனுடைய ஸ்தானத்தை ஏற்கின்றது. அது இரத்தமுள்ள ஒரு மிருகமாயிருக்க வேண்டும். ஆப்பிள் பழமோ அல்லது பீச் பழமோ அல்ல. இது சர்ப்பத்தின் வித்து போதகத்தை எல்லாருக்கும் வெளிப்படையாக விளக்கித் தர வேண்டும். அது இரத்தமாக இருக்க வேண்டும். இந்த இரத்தம் பழங்களிலிருந்து வெளி வர முடியாது. அது பாவமற்ற ஒரு ஈட்டிலிருந்துதான் வெளிவர வேண்டும். குற்றம் செய்தவனுக்குப் பதிலாக, மிருகம் பலி செலுத்தப்பட்டு, அது ஜீவனை விடுகின்றது. மிருகம் மரித்து, இரத்தம் அதனின்று வெளியேறினது என்பதன் அடையாளமாக இரத்தம் அமைந்துள்ளது. 56 ஆராதிப்பவன் தன் மீது அந்த பலியின் இரத்தத்தைத் தடவிக் கொள்கிறான். அந்த மீட்பில் அவன் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றான் என்பதை அது காண்பித்தது. ஏனெனில் அவன் தன்னை அந்த பலியோடு அடையாளங்கண்டு கொள்ளச் செய்தான். அந்த பலியண்டை தன்னை இணைத்துக் கொண்டான், எனவே இரத்தமே அடையாளமாக நின்றது. 57 எவ்வளவு எவ்வளவு அற்புதமானது-! என்ன அழகான ஒரு காட்சி-! அது சரியாக கிறிஸ்துவுக்கு பரிபூரண மாதிரியாய் அமைந்துள்ளது. விசுவாசி, சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தின் கீழ் நின்று கொண்டு, அந்த பலியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். எவ்வளவு பரிபூரணமாக அமைய முடியுமோ, அவ்வளவு பரிபூரணமாக இது அமைந்துள்ளது. பிறகு எப்படி கிறிஸ்து ஒரு மிருகமாய் இல்லாமல்... நீங்கள் பாருங்கள். அந்த மிருகம் செத்தது. ஆனால் அது... 58 நம்மிடையே இருக்கின்ற மிக கபடமற்ற காரியமானது, அந்த மிருகம் - அந்த ஆட்டுக்குட்டியாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தேவன் இயேசு கிறிஸ்துவை அடையாளம் காட்ட நினைத்த போது, அவரை ஒரு ஆட்டுக் குட்டியாகவே அடையாளம் காட்டினார். அவர் தம்மை அடையாளம் காட்ட எண்ணி தம்மை ஒரு பறவையுடன், ஒரு புறாவுடன் அடையாளங்காட்டினார். பறவை இனங்களிலேயே புறா மிகவும் கபடற்றதும், சுத்தமுமான ஒரு பறவை ஆகும். ஆட்டுக்குட்டியும் எல்லா மிருகங்களிலும் சுத்தமானதும் கபடற்ற ஒரு மிருகமாகும். ஆதலால் நீங்கள் பாருங்கள்.... 59 இயேசு, யோவான் ஸ்நானனால் ஞான ஸ்நானம் பண்ணப்பட்ட போது, "பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் அவர் மேல் இறங்கினதை அவன் கண்டான்" என்று வேதம் உரைத்தது. ஆகவே அது ஒரு... அது ஓநாயாகவோ அல்லது வேறொரு மிருகமாகவோ இருந்திருந்தால், புறாவின் சுபாவம் ஓநாயின் சுபாவத்துடன் இணைய முடியாது. அது புறாவின் தன்மைக்கு ஒத்த தன்மையை பெற்றிராது. அவ்வாறே புறாவின் சுபாவமும் ஆட்டுக்குட்டியின் சுபாவத்துடன் தவிர, வேறெந்த மிருகத்தின் சுபாவத்துடனும் இணைய முடியாது. அவ்விரு சுபாவங்களும் ஒன்றோடொன்று இணைந்தன. அப்பொழுது மாத்திரமே அவை ஒன்றோடொன்று ஒத்துப் போக முடிந்தது. 60 ‘முன் குறித்தலை' இப்பொழுது நீங்கள் காண முடிகின்றதா-? அது அங்கே வந்த போது அது ஒரு ஆட்டுக்குட்டியாக இருந்தது. புரிகிறதா-? பார்த்தீர்களா-? அந்த அது கொண்டு வரப்பட்டபோது, அது ஒரு ஆட்டுக்குட்டியாக இருந்தது. அது ஒரு ஆட்டுக்குட்டியாக இருந்தது. அது ஆட்டுக்குட்டியாகவே பிறந்தது. அது ஒரு ஆட்டுக்குட்டியாகவே வளர்க்கப்பட்டது. புரிகிறதா-? 61 எனவே அத்தகைய உண்மையான ஆவி மாத்திரமே வார்த்தையை, கிறிஸ்துவை பெற்றுக் கொள்ள முடியும். மற்ற அனைவரும் அதைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பர், அவர்கள் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் போது, அது தேவனுடைய ஆவியை ஒரு ஓநாயின் மேல் அவர்கள் கொண்டு வருபவர் களாய் இருப்பார்கள், பாருங்கள், கோபம் கொள்வார்கள், இழிவு செய்வார்கள், கேவலமாக நடப்பார்கள். ஆவியானவர் அவர்கள் மேல் தங்க மாட்டார். அவர் அவ்விடம் விட்டு பறந்து செல்வார். அது ஒருக்காலும் நடக்காது. 62 புறா இறங்கி வந்து, ஒரு ஆட்டுக்குட்டிக்குப் பதிலாக வேறொரு மிருகத்தின் மேல் அமர்ந்திருந்தால் என்னவாயிருக்கும்-? அது உடனே பறந்து சென்று இருக்கும். புரிகிறதா-? ஆனால் அதனுடன் இணையக் கூடிய ஒரு சுபாவத்தை அது கண்ட போது, அதனுடன் அது ஒன்றானது. 63 ஆகவே பிறகு அந்த அந்த புறா ஆட்டுக்குட்டியை வழிநடத்திச் சென்றது. கவனியுங்கள், பலி செலுத்தப்படுவதற்காக அது ஆட்டுக்குட்டியை வழி நடத்தினது. இப்பொழுது அந்த ஆட்டுக்குட்டியும் புறாவுக்கு கீழ்ப் படிந்தது. புரிகிறதா-? அது எங்கே அதை வழி நடத்தினதோ அப்பொழுது கவலைப்படாமல் அது செல்ல மனப்பூர்வமாய் இருந்தது. 64 இன்று தேவன் நம்மை பரிபூரண அர்ப்பணிப்புக்கும் அவருடைய சேவைக்கும் வழி நடத்திச் செல்வாரானால், நம்முடைய ஆவிகள் அதை எதிர்க்குமோ என்று நான் வியப்புறுகிறேன். அப்படியானால், நாம் ஆட்டுக்குட்டி அல்லவென்பதை அது காண்பிக்கின்றது. புரிகிறதா-? பார்த்தீர்களா-? ஆட்டுக்குட்டி கீழ்ப்படியும் தன்மை வாய்ந்தது. 65 ஆட்டுக்குட்டி பலி செலுத்தப்பட தன்னை ஒப்புவிக்கும். அதற்கு எதுவும் அதற்கு சொந்தமென்று அது உரிமை பாராட்டுவது கிடையாது. அதை படுக்க வைத்து, அதன் உரோமத்தை கத்தரிக்கலாம் அது ஒன்று மாத்திரமே அதனிடம் உள்ளது. அதைக் குறித்து எந்த ஒரு காரியத்தையும் கூறாது; அது கொண்டு இருக்கின்ற எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுகின்றது. அது ஒரு ஆட்டுக் குட்டியாயிருக்கிறது. அது எல்லாவற்றையும் கொடுத்து விடுகின்றது... அது தன்னையும் தனக்குள்ள எல்லாவற்றையும் கொடுத்துவிடுகின்றது. 66 அந்தவிதமாகவே ஒரு உண்மையான கிறிஸ்தவனும் இருக்கிறான். அவர்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களையே தாங்கள் தியாகம் செய்கிறவர்களாகவும், இவ்வுலகைக் குறித்த கவலை ஏதுமின்றி, அவர்களுக்கு உள்ள யாவற்றையும் தேவனுக்குச் செலுத்திவிடுவார்கள். புரிகிறதா-? 67 கிறிஸ்து பரிபூரணமுள்ள ஆட்டுக் குட்டியானவராக இருந்தார். எகிப்தில் ஒரு இயற்கை ஆட்டுக் குட்டி பலி செலுத்தப்பட்டு, அதன் இரத்தம் தடவப்பட்டது. அவ்விதம் பூசப்பட்ட இரத்தம் ஓர் அடையாளமாகத் திகழ்ந்தது. அப்படியானால், ஆட்டுக் குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தம் எதை எடுத்துக் காட்டுகின்றது-? புரிகிறதா-? நாம், நமக்குள் மரித்து, அந்த பலியுடன் ஒன்றுபட்டு விட்டோம் என்பதற்கு அது அடையாளமாயுள்ளது. பார்த்தீர்களா-? ஆட்டுக் குட்டியும், இரத்தமும், அந்த மனிதனும் ஒன்றாக அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றனர் - பலியும் விசுவாசியும் பாருங்கள். உன்னுடைய பலியின் மூலம், உன்னுடைய ஜீவியத்தில் நீ அடையாளங்கண்டு கொள்ளப்படுகின்றாய். அதுவே நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்ற நிலைக்கு உங்களைக் கொண்டு வருகின்றது. 68 ஆகையால் ஒரு அடையாளங் கண்டு கொள்ள அந்த இரத்தம் அடையாளமாகத் திகழ்கின்றது. ஆராதிப்பவன் அந்த ஆட்டுக் குட்டியைக் கொன்று, ஆட்டுக் குட்டியை ஏற்றுக் கொண்டு, அந்த அடையாளத்தை தன் மீது பூசிக் கொண்டு, அவன் வெட்கப்படாது இருந்தான். அவன் இரத்தம் தடவிக் கொண்டிருப்பதை யார் கண்டது என்று அவன் கவலைப்படவில்லை. அதை ஒவ்வொருவரும் காண வேண்டுமென்று விரும்பினான். கடந்து சென்ற ஒவ்வொருவரும் அந்த அடையாளத்தைக் காணும்படியான ஒரு நிலையில் அது பூசப்பட்டது. 69 பாருங்கள், அநேகர் கிறிஸ்தவர்களாயிருக்க விரும்புகின்றனர். ஆனால் மற்றவர் யாரும் அவர்கள்... அவர்கள் கிறிஸ்தவர் என்பதை அறியாதவாறு இரகசியமாக அவ்வாறிருக்க விரும்புகின்றனர். இப்பொழுது, பாருங்கள், "நான் - நான் கிறிஸ்தவனாயிருக்க எனக்கு விருப்பம் தான், ஆனால் இன்னார்... இன்னார் அதைக் குறித்து அறியக்கூடாது" என்று அவர்களோடு சகவாசம் செய்பவர் மற்றும் சிலர் அவ்வாறு நினைக்கின்றனர். புரிகிறதா-? அப்படியானால் நீங்கள் பாருங்கள். இப்பொழுது அது கிறிஸ்தவ மார்க்கம் அல்லவே அல்ல. 70 கிறிஸ்த மார்க்கம் என்பது தனது அடையாளத்தை பகிரங்கமாகக் காண்பிக்க வேண்டும், பாருங்கள். பொது வாழ்க்கையிலும், அலுவலகத்திலும், தெருவிலும், சச்சரவு வரும் போதும், சபையிலும், ஏதாகிலும் நேரிடும் போதும் காண்பிக்க வேண்டும். எல்லா ஸ்தலங்களிலும் அதை பகிரங்கமாகக் காண்பிக்க வேண்டும். புரிகிறதா-? இரத்தம் அடையாளமாயுள்ளது. அடையாளம் பூசப்பட வேண்டும், பாருங்கள், இல்லை என்றால் (அது அடையாளமல்ல) உடன்படிக்கையும் செல்லாது. 71 இரத்தமானது ஒரு அடையாளம், அல்லது ஒரு அடையாளப்படுத்தும் ஒன்று, இந்த நபர் மீட்கப்பட்டார் என்பதை அடையாளம் காண்பிக்கின்றது. இப்பொழுது அப்படியானால் கவனியுங்கள், அவர்கள் எதுவுமே நடந்தேறுவதற்கு முன்னரே மீட்கப்பட்டிருந்தனர். விசுவாசத்தினால் அவர்கள் அந்த இரத்தத்தைப் பூசினார்கள். பாருங்கள், அது உண்மையாகவே சம்பவிக்கும் முன்னே, அது சம்பவிக்கப் போகிறதென்று விசுவாசித்து, விசுவாசத்தினால் இரத்தத்தைப் பூசினர். புரிகிறதா-? அந்த தேசத்தில் தேவ கோபாக்கினை கடக்கும் முன்பே, அந்த இரத்தம் முதலில் பூசப்பட வேண்டியது அவசியமாயிருந்தது. தேவ கோபாக்கினை விழுந்த பிறகு அது பூசப்பட்டிருந்தால், காலதாமதம் ஆகி இருக்கும். 72 இப்பொழுது இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் ஒன்றுண்டு. அதை உங்கள் சிந்தனைக்கு சற்று கொண்டுவர விரும்புகின்றேன். கவனியுங்கள், அது நிகழ்வதற்கு முன்னமே, நீங்கள் இரத்தம் பூசிக் கொள்ள முடியாத காலம் ஒன்று வரப்போகின்றது. 73 ஆட்டுக்குட்டி சாயங்கால நேரத்தில் கொல்லப்பட்டது. அதற்கு முன்பு அது 14-நாட்கள் வைக்கப்பட வேண்டும். பின்பு அது கொல்லப்பட்டு, சாயங்கால நேரத்தில் இரத்தம் பூசப்பட்டது. உங்களுக்கு இது விளங்குகின்றதா-? சாயங்கால நேரம் வரும் வரைக்கும் அந்த அடையாளம் ஒரு போதும் தோன்றவில்லை. 74 நாம் ஜிவித்துக் கொண்டிருக்கும் காலத்தின் சாயங்கால நேரம் இது ஆகும். இதுவே சபைக்கான சாயங்கால நேரம். எனக்கும், இது சாயங்கால நேரம். இதுவே என்னுடைய சாயங்கால நேர செய்தியாயுள்ளது. நான் மரித்துக் கொண்டிருக்கின்றேன். நான் சென்று கொண்டிருக்கிறேன். நான் சுவிசேஷத்தின் சாயங்கால நேரத்தில் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். நாம் "நீதிமான் ஆக்கப்படுதல்" போன்றவைகளைக் கடந்து வந்துவிட்டோம். ஆனால் இதுவோ அடையாளம் தரித்துக் கொள்ள வேண்டிய நேரம். உங்களிடம் ஒன்றைக் குறித்துப் பேசவேண்டுமென்று சென்ற ஞாயிறன்று கூறினேனே-! அதுதான் இது. இந்த நேரத்தில் நீங்கள் இதனுடன் விளையாடிக் கொண்டிருக்க முடியாது. இப்பொழுதே அதை செய்தாக வேண்டும். அது எப்போதாவது செய்யப்பட போவதாயிருந்தால், இது இப்பொழுதே செய்யப்படவேண்டும். ஏனெனில் தேவ கோபாக்கினை இந்நாட்டின் வழியாக கடந்து செல்லும் தருணம் அருகாமையில் வந்து விட்டது. அடையாளத்தின் கீழில்லாத யாவும் அழிந்து போகும். அந்த இரத்தம் உங்களை அடையாளம் கண்டு பிடிக்கும் கவனியுங்கள். 75 மிருகத்தின் ஜீவன், மனிதனின் மேல் மறுபடியும் வரமுடியாது. அந்த ஆட்டுக் குட்டி கொல்லப்பட்டு தன் இரத்தம் சிந்தப்பட்ட போது, அதன் உயிர் வெளியே சென்றது என்பது உண்மையே, ஏனெனில் அது உயிருள்ள ஒன்றாயிருந்தது. ஜீவனைக் கொண்ட அந்த இரத்தம் வெளி வந்த போது, ஜீவன் என்பது இரத்தத்தில் இருந்து வித்தியாசமாய் உள்ள போது... இரத்தம் என்பது ஜீவனின் இரசாயனம். ஜீவன் என்பது இரத்தத்தினின்று வித்தியாசமான ஒன்று. ஆனால் ஜீவனோ இரத்தத்தில் உள்ளது. மிருகத்தின் ஜீவன் ஆராதிப்பவன் மேல் மீண்டும் வரமுடியாது. அந்த ஆட்டுக் குட்டியின் இரத்தத்தை அவன் சிந்தின போது, அந்த இரசாயனத்தை அவன் தன் மேல் பூசிக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. ஏனெனில் பிரிந்து சென்ற மிருகத்தின் ஜீவனால் திரும்ப வர முடியாது. 76 ஏனென்றால் அது மீண்டும் மனிதனின் மேல் வரமுடியாது. ஏனெனில் மிருகத்தின் உயிருக்கு ஆத்துமா கிடையாது. மிருகம் தான் நிர்வாணியாய் இருப்பதை அறியாது. அது பாவத்தை உணர்ந்து கொள்வதில்லை. அதற்கு ஒன்றுமே தெரியாது. ஆகையால் அது உயிர் வாழும் பிராணியாய் இருந்தாலும், அதற்கு ஒரு ஜீவனுள்ள ஆத்துமா கிடையாது. ஆகவே மிருகத்தின் ஜீவன் மானிட ஜீவியத்தின் மேல் மீண்டும் வர முடியாது. ஏனெனில் அந்த ஜீவனில் அதற்கு ஒரு ஆத்துமா கிடையாது. ஆனால் மனிதனின் இரத்தத்தில் அவன் உயிரும், அந்த உயிரில் ஆத்துமாவும் உண்டு. ஆத்துமா என்பது அந்த உயிர் பெற்று இருக்கும் சுபாவமாகும். மிருகத்திற்கு அத்தகைய சுபாவம் ஏதுவும் இல்லை. அது வெறுமென ஒரு மிருகமாயிருந்தது. ஒரு உயிர் செலுத்தப்பட்டது என்பதற்கு ஒரு அடையாளமாகவே அந்த இரத்தம் நின்றது. 77 ஆனால், இந்த மகத்தான ஸ்தலத்தில், இந்த உடன்படிக்கையின் கீழ், இரத்தத்திற்கும் உயிருக்குமிடையே வித்தியாசமுண்டு. இன்றுள்ள விசுவாசிக்கு பரிசுத்த ஆவியே அடையாளமாயுள்ளது. இரத்தமல்ல, ஒரு இரசாயனமல்ல, ஆனால் தேவனுடைய பரிசுத்த ஆவியே. இன்றைய சபை இடமிருந்து அந்த அடையாளத்தையே தேவன் கேட்கிறார். இந்த அடையாளத்தை தேவன் காண வேண்டும். நம்மில் ஒவ்வொருவரிலும் அவர் அந்த அடையாளத்தைக் காண வேண்டும். 78 எனவே, சாயங்காலத்தின் நிழல்கள் தோன்றும் போது, உன்னதத்தில் இருந்து கோபாக்கினை ஊற்றப்பட ஆயத்தமாயுள்ளது, தேவனற்ற நாடுகளின் மேலும், அவபக்தி உள்ள அவிசுவாசிகளின் மேலும், எதையும் பெற்றுக் கொள்ளாமலே பெற்றுக் கொண்டவர் போல் நடிப்பவரின் மேலும் ஊற்றப்பட ஆயத்தமாய் உள்ளதே-! இந்தக் காரியங்களை நான் கூறும் முன்பு, அது எங்கே இருந்து கொண்டு இருந்தது என்பதைக் காண்பிக்க, நான் என்னையே வெளிப்படுத்தி, உங்கள் மத்தியில் சரியாக வாழ முயன்று வந்திருக்கிறேன். இப்பொழுது நாம் நிழல்களின் கீழ் வாழ்கிறோம். கோபாக்கினை தாக்குவதற்கு ஆயத்தமாயுள்ளது. தேவன் ஒரு அடையாளத்தை, நீங்கள் தாமே அவருடைய அடையாளத்தை, பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டீர்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த ஒரே வழியில் மாத்திரமே, அந்த ஒரே அடையாளத்தை மாத்திரமே அவர் கடந்து செல்வார். ஏனெனில் அது இயேசு கிறிஸ்துவின் தத்ரூபமான ஜீவன் விசுவாசிக்குள் திரும்ப வந்திருக்கின்றது என்பதாகும். 79 மிருகத்தின் ஜீவன் அவ்விதம் மீண்டும் வர முடியாது. ஆகவே, இரத்தம் கதவுகளிலும், நிலைக் கால்களிலும் தெளிக்கப்பட வேண்டிய அவசியம் உண்டாகி இருந்தது. அவ்வீட்டைக் கடந்து சென்ற அனைவரும், பொது மக்களும் யாவரும் அந்த வீட்டின் மேல் ஒரு அடையாளம் இரத்தம் போடப்பட்டு இருக்கிறது என்றும், அந்த வாசலின் அருகே ஒரு ஜீவன் உயிர் விட்டது என்றும் அறிந்து கொண்டனர். ஆமென்-! 80 அந்தவிதமாகவே இன்றைக்கும் ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஆட்டுக் குட்டியானவரின் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடையாளத்தைப் பெற வேண்டியவராய் இருக்கின்றனர். ஆட்டுக்குட்டி ஆனவருக்குள் இருந்த அந்த ஜீவன் மீண்டும் விசுவாசியின் மேல் வந்து அவனை முத்தரிக்கும் போது, அவனைக் கடந்து செல்பவர் அனைவரும், அவனுடன் உரையாடுபவரும், அவனுடைய சகாக்களும், ஆட்டுக்குட்டியானவர் உடைய இரத்தம் பூசப்பட்டுள்ளது என்றும், அந்த இரத்தத்திலிருந்து ஜீவன் என்னும் அடையாளம் அவன் மேல் தங்கியுள்ளது என்றும் அறிந்து கொள்வார்கள். நீங்கள் அப்பொழுது கோபாக்கினையினின்று பாதுகாப்பாய் இருக்கிறீர்கள். அது மாத்திரமே பாதுகாக்கும்; அங்கத்தினராவதன் மூலம் அல்ல. இல்லை, ஐயா. 81 மிருகத்தின் ஜீவன் விசுவாசியின் மீது மறுபடியும் வரமுடியாது, ஏனெனில் அது ஒரு மிருகமாயிருந்தது. பரிபூரணமான ஒரு பலி செலுத்தப்படவிருக்கிறது என்பதை காண்பிக்கும்படியான, ஒரு நல்மனசாட்சியைக் குறித்து மாத்திரமே அது உரைத்தது. 82 இப்பொழுது தேவன் தாமே பாவ நிவிரித்தியாவதைக் காட்டிலும் பரிபூரண பலி வேறெது இருக்கமுடியும்-? தம்முடைய சொந்த சிருஷ்டிக்கும் இரத்தத்தில், தேவன் மாம்சமாக்கப்பட்டபோது, அந்த ஒரே வழியில் மாத்திரமே தேவனுடைய ஜீவன் மீண்டும் வரமுடிந்தது. 83 ஏனெனில் நாம் அனைவருமே இனச் சேர்க்கையினால் தோன்றிவர்கள். அந்த ஜீவன் நிலைத்து நிற்காது. அது ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டு, ஆக்கினைக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. எனவே நீங்கள் அதை ஒட்டுப் போட முடியாது. அதைப் போட வழியே கிடையாது. அதை மிருதுவாக்க வழியே இல்லை, அது சரிபடுத்தவும் வழியே இல்லை. அது மரிக்க வேண்டும். அது மாத்திரமே தேவனுடைய தேவையாய் உள்ளது. அது மரிக்க வேண்டும். 84 அதற்கு ஈடாக இயேசு கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள் வரவேண்டும். அதுவே பரிசுத்த ஆவியாய், தேவனுடைய அடையாளமாயுள்ளது. அதுவே நீங்கள் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அங்கீகரித்து உள்ளீர்கள் என்பதாகும். 85 ஆகையால் வெஸ்லியின் நாட்களில், அல்லது லூத்தரின் நாட்களில் அவர்கள் இரத்தத்தின் இரசாயனத்தை விசுவாசித்தனர். ஆனால் இது கடைசி காலமாதலால், பரிசுத்த ஆவியின் அடையாளம் தேவைப்படுகின்றது. அது முழு அங்கத்தையும்(Unit) எடுத்துக் கொள்ளப்படுதலுக்கென்று ஒன்றாக இணைக்கிறது. உங்களுக்கும் இது புரிகின்றதா-? (சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி.] 86 தாய் ஒரு குழந்தையைப் பிரசவிக்கும் போது, தண்ணீர், இரத்தம், ஆவி என்பவை வெளி வருகின்றன. இயற்கையான பிரசவத்தின் போது முதலில் வெளிவருவது தண்ணீர், இரண்டாவது காரியம் இரத்தம்; அடுத்தபடியாக ஜீவன். 87 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்திலிருந்தும் தண்ணீர், இரத்தம், ஜீவன் என்பவை வெளி வந்தன. அவ்வாறே முழு சபையும், அதாவது மணவாட்டி நீதிமானாக்கப்படுதலினூடாக பரிசுத்தமாக்கப்படுதலினூடாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினுடாக உண்டாக்கப்பட்டு வருகிறாள், அதுவே அடையாளமாய் உள்ளது. 88 எபிரெயர்.11-ல், அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்தார்கள். இவைகளை எல்லாம் அவர்கள் செய்தும், நம்மை அல்லாமல் அவர்கள் ''பூரணராக முடியவில்லை,” என்று கூறுகின்றது. 89 இந்நாளின் சபை பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் அடையாளத்தைப் பெற்று உள்ளது. அது இரத்தம் சிந்தப்பட்டதென்றும், பரிசுத்த ஆவியானவர் சபையின் மேல் இருக்கிறார் என்பதையும் காண்பிக்கிறது. நம்மையல்லாமல் அவர்கள் உயிரோடெழுந்திருக்க முடியாது. ஆனால் அவர்கள் நம் மேல் சார்ந்து உள்ளனர். தேவன் அதை அளிக்கப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். எனவே ஒரு சிலர் அங்கு இருக்கப் போகின்றனர். அது யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு சிலர் அதைப் பெற்றுக் கொள்ளப் போகின்றனர். நான் ஒரு காரியத்திற்கு மாத்திரமே பொறுப்பாளி, அது இதைப் பிரசங்கிப்பதாகும். முன் குறிக்கப்பட்ட வித்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு தேவனுடையது. அங்கே இருக்கப் போவது, காரணம் அவர்கள், அவர்கள் எல்லாரும் அங்கு இருக்கப் போகின்றனர். ஒருவர் மற்றவரோடு; தண்ணீரின் காலத்தில் இருந்தவர், இரத்தத்தின் காலத்தில் இருந்தவர், தற்போது பரிசுத்தாவி என்னும் அடையாளத்தின் காலத்தில் இருப்பவர். 90 இஸ்ரவேல் ஜனங்கள் அநேக காரியங்களின் வழியாக கடந்து வந்தனர் என்பது நினைவிருக்கட்டும். ஆனால் சாயங்கால நேரத்தில் மாத்திரமே அடையாளம் தேவைப்பட்டது. காலை நேரத்தில் அல்ல, அல்லது பஸ்கா பண்டிகைக்கு முன்பிருந்த ஆயத்த நாட்களாகிய 14 நாட்களின் போதல்ல. ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகின்றது என்று இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்திருந்தனர். 91 அவ்வாறே லூத்தரும் அதை அறிந்திருந்தார், வெஸ்லியும் அதை அறிந்திருந்தார்; அவ்வாறே ஃபின்னி, நாக்ஸ், கால்வின் அதை அறிந்திருந்தனர். அதுதான் இதுவாகும். அக்கினி ஸ்தம்பம் ஒரு காலத்தில் சபைக்குத் திரும்பவும் வரும் ஒரு நேரம் உண்டாயிருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இக்காரியங்கள் நடைபெறப்போகும் சமயம் ஒன்று வரும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஆனால் அதைக் காண அவர்கள் உயிர் வாழவில்லை. ஆனால் அவர்கள் அதை எதிர் நோக்கி இருந்தனர். 92 இஸ்ரவேல் ஜனங்களும் ஏதோ ஒன்று வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருந்தனர். ஆனால் சாயங்கால நேரத்தில் மாத்திரமே ஆட்டுக்குட்டியின் இரத்தம் என்றும் அடையாளம் கதவுகளின் மேல் போடப்பட்டது. அதே சமயத்தில் ஏற்கெனவே அந்த ஆட்டுக்குட்டி தெரிந்து எடுக்கப்பட்டு விட்டது. 93 எல்லா காலங்களிலும் அது ஆட்டுக் குட்டியாகவே இருந்து வந்துள்ளது. லூத்தரின் காலத்திலும் அது ஆட்டுக் குட்டியாகவே இருந்தது; வெஸ்லியின் காலத்திலும் அது ஆட்டுக்குட்டியாகவே இருந்தது. ஆனால் இப்பொழுதோ ஒவ்வொரு வீடும் இந்த அடையாளத்தினால் மூடப்பட வேண்டிய அடையாளத்தின் காலமாயுள்ளது. தேவனுடைய ஒவ்வொரு வீடும் இந்த அடையாளத்தினால் மூடப்பட வேண்டும். அதற்குள் இருக்கும் எல்லாமே இந்த அடையாளத்தினால் மூடப்பட வேண்டும். தேவனுடைய வீடு என்னப்படுவது இயேசு கிறிஸ்துவின் சரீரமாகும். ஒரே ஆவியினால் நாம் அந்த அடையாளத்துக்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அதன் பாகமாகிறோம். அதாவது, தேவனும், "அந்த வெளிப்படையாக காட்டப்பட்ட அடையாளத்தை நான் காணும் போது, நான் உங்களைக் கடந்து போவேன்" என்றார். நாம் இப்பொழுது எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்-! ஓ-! 94 இரத்தம் விசுவாசியை அடையாளம் காண்பிக்கின்றது. ஏனெனில் ஜீவன் அதனின்று சென்று விட்டது. அது மிருகத்தின் ஜீவனாயிருப்பதால் மீண்டும் வரமுடியவில்லை. எனவே அவன் அந்த இரசாயனத்தை உடையதாயிருக்க வேண்டியதாய் இருந்தது. எனவே அவன் இரத்தத்தை, வர்ணத்தைப் போல பூசிக் கொள்ள வேண்டியதாயிருந்தது. ஜீவன் அதனின்று சென்றுவிட்டது என்பதைக் காண்பித்த ஒரு இரசாயணம். 95 இப்பொழுது ஆவி தாமே அடையாளமாயுள்ளது. பரிசுத்தாவி தாமே அடையாளமாய் உள்ளது, இரத்தமல்ல. அந்த இரத்தம் கல்வாரியில் சிந்தப் பட்டது என்பது உண்மை. ஆனால் அது எங்கிருந்து வந்ததோ, அதாவது அவர் உணவுண்டு வாழ்ந்து வந்த அதே ஆகாரத்திற்கே, அதே மூலக் கூறுகளுக்கு (elements) அது திரும்பிச் சென்றது. ஆனால் நீங்கள் பாருங்கள், அந்த இரத்த அணுக்களுக்குள் (Blood cells) அந்த அணுக்களை இயங்கச் செய்யும் ஜீவன் உண்டாகி இருந்தது. அவ்வாறு இல்லையெனில், இரத்தம் என்னும் இராசயனத்திற்கு ஜீவன் இராது; அது இயங்க முடியாது. ஆனால் இரத்தம் என்னும் இரசாயனத்துக்குள் அந்த ஜீவன் வரும் போது, அங்கு அணுக்கள் உண்டாகின்றன; அது தன் சொந்த அணுவை உற்பத்தி செய்து கொள்கிறது. பின்னர் அணுவின் மேல் அணு, அணுவின் மேல் அணு இவ்வாறு உண்டாகி, அது ஒரு மனிதனானது. அந்த மனிதன் தான் மாமிசத்தில் தோன்றிய தேவனாய், இம்மானுவேலாய் இருந்தார். ஆனால் அந்த ஜீவனானது இரசாயனத்திற்கு திரும்பிச் சென்ற போது அதனிடம் சென்றது. ஆனால், அந்த ஜீவன் சபையின் மேல் பரிசுத்தாவி என்னும் அடையாளம் இருக்கிறது. அதன் விளைவாக மற்றவர்கள் கிறிஸ்துவைக் காண்கிறார்கள். 96 அது அவ்வாறே இருக்க வேண்டும், ஏனெனில் ஒரு ஸ்திரியும் அவளுடைய கணவனும் ஒன்றாகின்றனர். அவர்கள் ஒன்றாகின்றனர். அது போன்று மணவாட்டியும் கிறிஸ்துவும் ஒன்றாகின்றனர். மணவாட்டியின் ஊழியமும் கிறிஸ்துவின் ஊழியமும் ஒன்றே. நினைவிருக்கட்டும், தெயோப்பிலுவே, இயேசுவானவர், தாம் தெரிந்து கொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளை இட்ட பின்பு அவர் எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையும் குறித்து முதலாம் பிரபந்தத்தை உண்டு பண்ணினேன். அவருடைய மரணம் அவரை அதோடு நிறுத்திவிடவில்லை. இல்லை ஐயா, அவர் திரும்பவும் வந்தார். மூன்றாவது நபராக அல்ல, ஆனால் அதே நபர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் திரும்பவும் வந்து, அவருடைய ஊழியம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருப்பதாக அப்போஸ்தலருடைய நடபடிகள் உரைக்கின்றது. "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." (Token) அது தான் அடையாளம். அதுதான் சின்னம். 97 பேதுருவும் யோவானும் அலங்கார வாசல் வழியாகக் கடந்து சென்ற போது, தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒருவன் படுத்துக் கொண்டு இருப்பதைக் கண்டனர். அப்பொழுது பேதுரு, "வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட," என்று சொன்னான். பாருங்கள்-? சீஷர்களிடம் அவர்கள் பேசின போது, அந்த சீஷர்கள் படிப்பு அறியாதவர்களென்றும், பேதமை உள்ளவர்களென்றும் அறிந்திருந்தனர், அதே சமயத்தில் அவர்கள் இயேசுவுடன் கூட இருந்தவர்கள் என்று அறிந்து கொண்டனர். பாருங்கள். அந்த அடையாளம் அங்கு பிரகடனம் செய்யப்பட்டது. பாருங்கள். "என்னிடத்திலுள்ளதை" ஒரு ஏழை, விழுந்து போன சகோதரன் சப்பாணியாய், விகார ரூபம் கொண்டவனாய் படுத்துக் கொண்டிருக்கிறதை அவன் கண்டான். இயேசுவுக்குள் இருந்த அதே ஜீவன் அவர்களுக்குள் இருந்தது என்பது வெளிப்பட்டது. "என்னிடத்திலுள்ளதை." 98 “என் நாமத்தினாலே (நீங்கள்) பிசாசுகளைத் துரத்துவீர்கள்" “நான் துரத்துவேன்" என்றல்ல, "நீங்கள் துரத்துவீர்கள்" "இந்த மலையைப் பார்த்து நீங்கள்," "நான் சொல்வேனானால் என்றல்ல." "சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று நீங்கள் சொன்னால்" 99 ஓ, சகோதரனே, அந்த அடையாளத்தை வெளிப்படையாய் காண்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இப்பொழுது நாம் முடிவிற்கு அருகாமையில் இருக்கிறோம். நாம் அற்புதங்களையும் அடையாளங்களையும் காண்பிக்கும்படி எல்லாவிதமான செய்திகளையும் கொண்டு வந்துள்ளோம், சபை என்ன செய்ய வேண்டும்-? என்பதற்கு நாம் மீண்டும் வருவோம். அந்த அடையாளம் வெளியரங்கமாய் காண்பிக்கப்பட வேண்டும். அந்த இரத்தத்தை நான் காணும் போது, நான் உங்களைக் கடந்து போவேன்," வேறொன்றும் கிரியை செய்யாது. அது இரத்தமாக மாத்திரமே இருக்க வேண்டும். இப்பொழுது பரிசுத்த ஆவியே தேவன் இடமிருந்து வந்துள்ள நம்முடைய அடையாளமாயிருக்கிறது. 100 பாப்டிஸ்டு ஸ்தாபனத்தைச் சேர்ந்த வேத தத்துவ நிபுணர் ஒருவர், அவர் மிகச் சிறந்தவர், நற்பண்பு கொண்டவர் அவர் ஒரு முறை என்னை அணுகி, "சகோ.பிரான்ஹாமே, நீங்கள் இப்பொழுது பரிசுத்தாவியைக் குறித்து பேசி வருகின்றீர்கள். ஏன்-? அது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் காலாகாலங்களாக அதை போதித்து வருகிறோம்," என்றார். நான், "சரி, நான்," என்று கூறினேன். அவர், "நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு விட்டோம்" என்றார். 101 நான் “எப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள்-?" என்று கேட்டேன். 102 அவர், “நான் விசுவாசித்த போது” என்று கூறினார். காரணம் அது பாப்டிஸ்டு போதனையென்பதை நான் அறிந்திருந்தேன். அதாவது, நீங்கள் விசுவாசிக்கும் போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிறீர்கள் என்பது. 103 நான் அவரிடம், “அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் பவுல் ஒரு பாப்டிஸ்டு குழுவைச் சந்தித்தான். யோவான் ஸ்நானன் மூலமாக இரட்சிக்கப்பட்ட ஒரு பாப்டிஸ்டு போதகர், இயேசுவே கிறிஸ்து என்று வேத ஆதாரம் கொண்டு அவர்களுக்கு நிரூபித்து வந்தார்.” என்றும் கூறினேன். 104 பவுல் மேடான தேசங்களை வழியாகப் போய் எபேசுவுக்கு வந்தபோது, இந்த குறிப்பிட்ட சீஷர்களைக் கண்டு, "நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா-?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், "பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை," என்றார்கள். அப்பொழுது அவன், அவர்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று கேட்டான். அவர்கள் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஆனவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞான ஸ்நானம் பெற்றிராமலிருந்தனர். அவர்கள் அவருடன் தங்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் வெறுமன விசுவாசித்தார்கள், அதாவது, மருந்து அங்கிருந்து, அதை உட்கொள்ளாமலிருப்பது போன்றாகும். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மறுபடியும் ஞான ஸ்நானம் பெற வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டான். 105 அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற பிறகு, அந்த அடையாளம் அவர்கள் மேல் வந்தது. அவர்கள் பரிசுத்தாவியின் கிரியைகளினாலும், அடையாளங்களினாலும் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, அவர்கள் அந்நிய பாஷை பேசி, தீர்க்க தரிசனம் உரைத்து, தேவனை மகிமைப்படுத்தினார்கள். அவர்கள் தங்களுடைய பலியினால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டனர். 106 பரிசுத்த ஆவியே நமது அடையாளம். அது தான் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் கண்டுகொள்ளச் செய்கிறது. சபைகளில் உள்ள நம்முடைய அங்கத்தினர்கள் அல்ல; நம்முடைய வேதாகம் புரிந்து கொள்ளுதலினால் அல்ல, நீங்கள் எவ்வளவு வேதத்தைக் குறித்து அறிந்திருக்கிறீர்கள் என்றல்ல. அந்த வேதாகமத்தின் ஆக்கியோனை நீங்கள் எவ்வளவாக அறிந்திருக்கிறீர்கள் என்றும், பாருங்கள். அந்த ஆக்கியோன் எவ்வளவாக உங்களுக்குள் ஜீவிக்கிறார் என்பதையும் அது பொறுத்தது. அது அது உங்களுடைய சுயம் போய் விட்டது என்பதாகும். அப்பொழுது நீங்கள் ஒன்று மற்றவர்களாகி விடுகின்றீர்கள். நீங்கள் உங்களை மரித்தவர்களாக எண்ணிக் கொள்கிறீர்கள். அப்பொழுது உங்களுக்குள் ஜீவிக்கிறதே அந்த அடையாளம் தான். அது உங்கள் ஜீவனல்ல, அது அவராயுள்ளது. 107 பவுலும், "நான் இப்பொழுது பிழைத்திருக்கிற இந்த ஜீவியம்..." என்கிறான். அவன் முன்பைக் காட்டிலும் வித்தியாசமான வாழ்க்கை வாழ்ந்தான். "இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்து இருக்கிறார்." இதுவே தேவனுக்குத் தேவைப்பட்ட அடையாளம். கண்டு கொள்ளப்பட்ட அடையாளம். நம்மோடு தேவைப்பட்ட, அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட... நம்முடைய பலியோடு கூடிய அடையாளம்; நம்முடைய இரட்சகரின் ஜீவன் நமக்குள் வாசம் செய்தல், பரிசுத்தாவி. 108 ஓ, என்னே ஒரு- என்னே ஒரு உறுதியான அடையாளம்-! வேறொரு அடையாளம் இருக்க முடியாது. ஓ. என்னே, நீங்கள் மாத்திரம் இதைக் குறித்த கருத்தைக் கிரகித்துக் கொண்டால் நலமாய் இருக்கும்-! இதை உங்கள் ஆத்துமாவில் பதியவைக்க, வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கூறும்படியான வல்லமை எனக்கு இக்காலை இருக்குமானால் நலமாயிருக்கும். உங்கள் செவிகளில் அல்ல, உங்கள் ஆத்துமாக்களில் பதிய வைக்க, அதைக் குறித்த உத்தரவாதத்தை(guarantee) நீங்கள் காணக்கூடும். உங்களை அது நிம்மதிபடுத்தி விடுகிறது. (relaxed) 109 நீங்கள் ஏதாவது ஒரு குற்றம் புரிந்து, அதைத் தொடர்ந்து நியாய ஸ்தலத்தில் நியாய விசாரனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் குற்றவாளியென்று கண்டறியப்பட்டு, நீங்கள் மரிக்கப் போவதாய் இருந்தால், நீங்கள் பாருங்கள். நீங்கள் மின்சார நாற்காலியிலோ அல்லது வாயு அறையிலோ அல்லது அவர்கள் உங்களுக்கு பகிரங்கமாக மரண தண்டனை அளிக்கப் போவதாய் இருந்தால் தூக்கிலிடப்பட்டோ அல்லது கொல்லப்படவோ கூடும், தண்டனை என்னவாய் வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் குற்றவாளியாய் இருந்தீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தீர்கள். நீங்கள் குற்றவாளி என்பதை அறிந்திருந்து ஒரு வழக்கறிஞர் உங்களுக்காக பரிந்து பேசி உங்களை அந்த காரியத்திலிருந்து விடுவிக்காவிட்டால், நீங்கள் நிச்சயம் மரிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறீர்கள். எனவே நீங்கள் சிறந்த வழக்கு அறிஞரையே நியமிக்க விரும்புவீர்கள். 110 ஒரு நல்ல வழக்கறிஞரை, புத்திசாலியான வழக்கறிஞரை நீங்கள் இதற்காக நியமித்தால், உங்கள் இறுக்கமான நிலையில் இருந்து சற்று தளர்ந்த நிலைமையை அடைவீர்கள். ஏனென்றால் நீங்கள் ஒரு வழக்கறிஞரை வைத்து விட்டீர்கள். ஆயினும், இந்த வழக்கறிஞர் நீதிபதியின் கருத்தை அல்லது நீதிமன்றக் குழுவின் கருத்தை மாற்ற முடியுமோ என்னும் ஐயம் உங்கள் உள்ளங்களில் குடிக் கொண்டிருக்கும். இந்த வழக்கறிஞர் தன்னுடைய புத்திக் கூர்மையினால் பேசி, சட்டங்களை அறிந்தபடியினால் அதை மாற்ற முடியும் ஆனால் நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று என்று நிரூபிக்க உங்கள் வழக்கில் முறையிடலாம். ஆனால் அதே சமயத்தில் தன்னுடைய- தன்னுடைய மகத்தான அதிகாரத்தினாலும், சிறந்த வாதத் திறமையினாலும் நீதிபதியிடமோ, நீதித் துறையினிடமோ நல்ல ஒரு எண்ணத்தை உருவாக்கலாம். அதினால் நீங்கள் - நீங்கள். ஒருவேளை சில நிமிடங்கள் மன அமைதி பெறலாம். ஆனால் அப்படியிருந்தாலும், அவரால் இதைச் செய்ய முடியுமா-?" என்ற இந்தக் கேள்வி உங்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும். 111 ஆனால் இந்த விவகாரத்தில் நீதிபதியே நம்முடைய வழக்கறிஞராக மாறி விட்டார். தேவன் மானிடனானார். எந்த வழக்கறிஞரும் இதைச் செய்ய முடியவில்லை. அத்தகைய ஒருவரை நாம் எங்கும் கண்டறிய முடியவில்லை. மோசேயும், நியாப்பிரமாணமும், தீர்க்கதரிசிகளும், வேறு யாரும் இதைச் செய்ய முடியவில்லை. எனவே நீதிபதியே நீதிமன்றக் குழுவானவர் அவரே வழக்கு அறிஞரும் நீதிபதியுமானார். அவருடைய நியாயப் பிரமாணத்தின் நீதியை தமது கரங்களில் ஏந்திக் கொண்டு, அதற்குரிய கிரயத்தை செலுத்தினார். அவரே அதைச் செய்தார். அப்படியானால், நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியும்-? பின்பு அவர் அதை அங்கீகரித்துக் கொண்டார் என்பதற்கு ஒரு சாட்சியாக, தமது சொந்த ஜீவனை நம் மீது அனுப்பினார். எவ்வளவு பாதுகாப்பு-! 112 "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்.” 113 அவரே நமது நீதிபதியாகவும், நீதிமன்றத்தின் விசாரணையை கவனித்துக் கொள்பவராகவும், வழக்கறிஞராகவும் ஆன போது, அவரே நமது வழக்கில் வாதாடினார். அவருடைய சொந்த நியாயப் பிரமாணத்தின் மூலமாக நாம் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டோம். அவர் இந்த உலகில் வந்து, குற்றவாளியின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். அந்த குற்றவாளியினுடைய பாவத்தை அவர் எடுத்துக்கொண்டார். அவர் அதை தன் மீது சுமந்து, மரித்து, கிரயத்தைச் செலுத்தி, தமது இரத்தத்தைச் சிந்தி, தமது சொந்த அடையாளத்தை தமது சொந்த ஜீவனை மீண்டும் அளித்தார். 114 ஏன், நாம் பரிபூரணமாயிருக்கிறோம். இந்த விவகாரமோ தள்ளுபடியாயிற்று. விசுவாசியின் மீது இப்பொழுது எவ்வித பாவமுமில்லை. ஓ, தேவனே, எங்கள் மீது இரக்கமாயிரும். இனி நியாய ஸ்தலத்தில் எவ்வித வழக்கும் இல்லை என்பதை ஜனங்கள் காணக் கூடுமானால் நலமாயிருக்கும். "என் வசனத்தை கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான்.” அதோ, அந்த வழக்கு. வழக்கோ தள்ளுபடி ஆயிற்றே-! வேறெந்த வழக்கும் இல்லை. ஆமென். அப்படியானால், பாதுகாப்பு, அந்த அடையாளம் வைக்கப்படும் போது பாதுகாப்பாக இருக்கிறோம். மரணம் நமது வாசற்படியில் வந்து நின்றாலும், அதற்கு ஆதிக்கமில்லை. பாருங்கள்-? ஆம். 115 அந்த அடையாளம் வைக்கப்பட்டு உள்ளது. அந்த அடையாளம் மட்டுமே இப்பொழுது அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றது. பாருங்கள், அடையாளம் வருவதற்கென்றே அவர் அதைச் செய்தார். அந்த அடையாளம் தேவனுடைய ஜீவனாய் இருந்தது. 116 தேவன் முதலாம் மனிதனை அவருடைய ஒரு குமாரனாக சிருஷ்டித்தார்; அவனோ நேர்மையிழந்தவனாய், தேவனுக்குச் செவி கொடுப்பதற்குப் பதிலாக, தன் மனைவிக்கு செவி கொடுத்தான். அவள் தன் கணவனுக்கு செவி கொடுப்பதற்குப் பதிலாக, பிசாசுக்குச் செவி கொடுத்தாள். அதைச் செய்த போது, அவர்கள் தங்களை ஒன்று சேர்ந்து கெடுத்துக் கொண்டு, அசுத்தத்தை கொண்டு வந்தனர். அவர்கள் அவ்விதம் செய்யும் போது, உலகத்தில் அவர்கள் பிள்ளைகளைப் பெற வேண்டுமென்று அவர் அறிந்திருந்தார். ஏதேன் தோட்டத்தின் மத்தியிலுள்ள ஜீவவிருட்சமும் தொடப்படக் கூடாது. எனவே மானிட வர்க்கம் தங்கள் மீது இந்த பாவத்தைச் சுமத்திக் கொண்டது. அதன் விளைவாக மானிட வர்க்கம் முழுவதுமே பாவத்தில் விழுந்தது. அதனின்று மீள்வதற்கு எவ்வித வழியும் இல்லாதிருந்தது. 117 பின்னர் தேவன் கீழே வந்தார். அவனை மீட்பதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. அது தமக்கென்று மீண்டும் ஒரு குமாரனைப் பெற்றுக் கொள்ளுதல் ஆகும். அவருடைய சொந்த நியாயப்பிரமாணமே அவனைக் "ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படுத்தும் போது," அவர் எங்ஙனம் இதைச் செய்ய முடியும்-? ஆகவே, பிதா தாமே நம்மைப் போல் ஒருவரானார். அது தான் உண்மையான ஆட்டுக்குட்டி. அதுவே அவர் மனதில் கொண்டிருந்த அவருடைய நோக்கமாய் இருந்தது. 118 அதன் காரணமாகவே ஆட்டுக்குட்டி ஏதேன் தோட்டத்தில் அடையாளம் கண்டுக் கொள்ளப்பட்டது. ஏனெனில் ஒரு நேரத்தில் ஆட்டுக்குட்டியும் புறாவும் ஒன்றையொன்று சந்திக்கும் என்பதை அறிந்திருந்தார். ஆட்டுக் குட்டியும், புறாவும் ஒன்று சேரும் போது அப்பொழுது நாமெல்லாரும் ஒன்று சேர்வோம், என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் இத்தகைய தியாகப் பலியைச் செலுத்த மனப்பூர்வமாய் இருந்தார். இப்போது அந்த அடையாளம் நம்மேல் வைக்கப் படுவதால், நாம் இனி அன்னியரும் பரதேசிகளுமாயிராமல், நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறோம். அவருடைய மகத்தான பலியின் மூலம், ஆதாமும் ஏவாளும் இருவரும் ஆணும் பெண்ணும் ஒன்றாக இணைக்கப்பட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய குமாரரும் குமாரத்தி களுமாக ஆகின்றனர். 119 பிறகு, தவறொன்றும் அங்கேயிராது-! பூமிக்குள் புதைக்கப்பட வேண்டிய இந்த ஜீவியத்தின் விதையோ, இந்த சரீரமோ அழிந்து போகக் கூடிய வித்தாகும். அந்த வித்தில் இருக்கும் ஜீவன் தாறுமாறாக்கப்பட்டால், அதுவும் வித்தோடு அழிந்து போகிறது. ஆனால் தேவனோ நித்திய ஜீவனை அதற்குள் வைத்து, நமது ஜீவனை தமது ஜீவனுடன் ஒன்றுபடுத்திக் கொண்டார். எனவே உயிர்த்தெழுதலின் போது, அவர் அதை உயிரோடெழுப்புவார். ஒன்றும் இழந்து போய்விடாது. நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா-? [சபையார், ஆமென்” என்று கூறுகின்றனர்-ஆசி.) 120 அது இனி அழிந்து போக முடியாது. ஏனெனில் அதற்கு ஜீவன் உள்ளது. அதுவே ஒரு அடையாளம். அந்த சிறு சரீரத்திற்குள் அந்த நபரின் ஆத்துமா உள்ளது. அந்த ஆத்துமாவில் தேவனுக்குச் சொந்தமான பரிசுத்த ஆவியென்னும் அடையாளம் உள்ளது. அது அவருடையது. "அந்த அடையாளத்தை நான் காணும்போது, நான் கடந்து போவேன்." ஒரு உறுதியான அடையாளம், பரிசுத்தாவியே நமது அடையாளம். எனவே நீங்கள் பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ளும் போது, மரணத்தை விட்டு நீங்கள் ஜீவனுக்குள் பிரவேசிக்கின்றீர்கள். அவ்வளவு தான். ஏனெனில் தேவனுடைய ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் அழிந்து போக முடியாது. 121 வேதம் "தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யான்' என்று உரைக்கின்றது. அவன் தேவனுடைய வித்தாய் இருப்பதால், அவனால் பாவம் செய்ய முடியாது, ஆமென்-! தேவனுடைய வித்து அவனுக்குள் தங்கி இருக்கிறது. பாவமில்லாத தேவன் அவனுக்குள் வாசம் செய்யும் போது, அவன் எங்ஙனம் பாவம் செய்ய முடியும்-? அவனும் பாவமில்லாத தேவனுக்குள் இருக்கும் போது எப்படி அவன் பாவம் செய்ய முடியும்-? அவன் என்ன செய்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, இரத்தம் அவனை மறைத்துள்ளது. புரிகிறதா-? அவன் இப்பொழுது புது சிருஷ்டியாய் இருக்கிறான். அவன் விருப்பங்களும் குறிக்கோள்களும் பரலோகத்திற்கு உரியவைகளாய் இருக்கின்றன. ஏனெனில் அவன் களையில் இருந்து கோதுமை மணியாக மாறி இருக்கிறான். அவனுடைய விருப்பங்கள் முன்பு போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். தற்பொழுது அவன் கொண்டுள்ள விருப்பங்களை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறான். 122 நீங்களோ, "ஓ, நான் அதை விசுவாசிக்கிறேன்" என்று கூறலாம். இன்னும் பாவம் செய்து கொண்டு இருக்கிறீர்களா-? அப்படியானால் நீங்கள் வஞ்சிக்கப் பட்டு இருக்கிறீர்கள். புரிகிறதா-? தேவனால் பிறந்தவனோ அடையாளத்தைத் தவிர, வேறெதையும் பகிரங்கமாகக் காண்பிக்க முடியாது. 123 அணி வகுத்துச் செல்ல வேண்டுமெனும் கட்டளை பிறக்கும் வரைக்கும். அவர்கள் அந்த இரத்தத்தின் கீழ் இருக்க வேண்டுமென்று இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. "அதனின்று அவர்கள் விலகக் கூடாது." அந்த அடையாளத்தின் கீழ் அவர்கள் தங்கியிருந்த வரைக்கும் முத்தரிக்கப்பட்டிருந்தனர். அதை அவர்கள் விடக்கூடாது." நள்ளிரவு தோன்றி, எக்காளங்கள் தொனிக்கும் வரை, அவர்கள் அங்கேயே இருந்தனர். ஆட்டுக் கடாக்களின் கொம்புகளை உபயோகித்து எக்காளம் ஊதப்பட்ட போது, ஒவ்வொருவரும் தங்கள் பொருட்களைக் கையில் பிடித்துக் கொண்டு, வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். 124 அதே நிலையில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஆணும் பெண்ணும் உள்ளனர். அவன் எல்லா துன்பங்களினின்றும் ஆபத்துகளின்றும் விலகி, பாதுகாப்பான ஸ்தலத்தில் வைக்கப்பட்டு முத்தரிக்கப்படுகின்றான். அவனுடைய வாழ்க்கையின் அம்சங்கள் அனைத்தும், அவன் யாரென்பதைக் காண்பிக்கின்றன. அவன் எங்கு நடந்து சென்றாலும், எந்த விவகாரத்தில் ஈடுபட்டாலும், யாரிடம் பேசினாலும், பெண்களுடனும் சகாக்களுடனும் தொடர்பு கொள்ளும் போதும், மற்ற எதனுடன் அவன் ஈடுபடும் போது, அந்த அடையாளம் அவனுக்குள் இருக்கின்றது. ஆமென். அவன் மரணத் தருவாயிலிருக்கும் போது, “நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கின்றீர்" என்கிறான். அந்த அடையாளம் அங்குள்ளது. உயிர்த்தெழுதல் நிகழும் போது, அவன் அங்கு இருப்பான். ஏனெனில் தேவன் அவனைக் கடைசி நாளில் உயிரோடு எழுப்புவார். இயேசு அவ்வண்ணமாய்க் கூறினாரே-! “நான் இரத்தத்தை, அடையாளத்தைக் காணும் போது, நான் உங்களைக் கடந்து செல்வேன்," என்றார். ஓ-! 125 அந்த அடையாளத்தை மற்றவர் காணும்படி பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் அந்த உடன்படிக்கையே ரத்தாகிவிட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உண்மை. அந்த உடன்படிக்கை செல்லாததாகி விடுகிறது. அடையாளம் இராத வரைக்கும், உடன்படிக்கையும் அங்கு இல்லை. அந்த அடையாளம் உடன்படிக்கைக்காக நின்றது. தேவன் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆம், ஐயா... ஆனால் அந்த அடையாளம் இருக்க வேண்டியதாய் இருந்தது. அங்கு அடையாளம் இல்லையெனில், உடன்படிக்கையும் சக்தியற்றதாகி விடுகின்றது. 126 அநேக யூதர்கள் அன்று "இங்கு வந்து பாருங்கள். என் வாசலில் இரத்தம் தெளிக்கப்படவில்லை. ஆனால் வேறொன்றை நான் காண்பிக்க விரும்புகிறேன். நானொரு விருத்தசேதனம் பண்ணப்பட்ட யூதன். நான் விருத்தசேதனம் பண்ணப்பட்டவன்" என்று கூறியிருக்கலாம். அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்தவில்லை. (சகோ.பிரான்ஹாம் தன்னுடைய விரலை சொடுக்குகி றார் ஆசி.) "அந்த இரத்தத்தை நான் காணும்போது-! நான் அந்த அடையாளத்தை காணும்போது-! 127 நீங்கள், "நான் பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு" என்று கூறலாம், அல்லது நீங்கள் எதைச் சேர்ந்தவன் என்று வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அந்த அடையாளத்தை நான் காணும் போது." 128 நீங்கள், "நான் ஒரு விசுவாசி, என் தாயார் இச்சபையில் ஒரு உறுப்பினராய் இருந்தார். என் தகப்பனாரும் இந்த சபையில் ஒரு உறுப்பினராய் இருந்தார். நானும் என் சிறு வயது முதல் இச்சபையின் உறுப்பினராக இருந்து வந்து இருக்கிறேன்," எனலாம். அதனால் ஒரு காரியமுமில்லை. (சகோ.பிரான்ஹாம் சொடுக்குகிறார்-ஆசி.) நான் பொய் சொல்வதில்லை, களவு செய்வதில்லை, நான் இதைச் செய்கிறதில்லை. நான்...'' அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்து கிறதில்லை. அதனால் ஒரு காரியமும் இல்லை. (சகோ.பிரான்ஹாம் தன் விரலை சொடுக்குகிறார்.) "நான் பிரான்ஹாம் கூடாரத்தைச் சேர்ந்தவன். நான் இதை செய்கிறேன். அதைச் செய்கிறேன் அல்லது மற்றதைச் செய்கிறேன். நான் தேவனுடைய வார்த்தை அனைத்தையும் விசுவாசிக்கிறேன்," என்று கூறலாம். 129 அந்த யூதர்களாலும், "நாங்கள் யேகோவாவை விசுவாசிக்கிறோம்" என்று கூற முடிந்தது. இந்த மணி நேரத்தின் செய்தியை அவன் கேட்டிருந்தான், அவன் கேட்டிருந்தான், நிச்சயமாக அநேக செய்திகள் அவர்கள் இடமிருந்தன. ஆனால் இதுவே இந்த மணி நேரத்தின் செய்தியாகும். பாருங்கள்-? நான் இந்த மணி நேரத்தின் செய்தியை விசுவாசிக்கிறேன். ஆம். இரத்தம் சாயங்கால நேரத்தில் பூசப்பட்டது. அவர்கள், “நான், ஒரு யூதன்” என்று கூறியிருக்கலாம். 130 ஜனங்களும் இன்று, "நான் ஒரு கிறிஸ்தவன். என்னுடைய நீண்ட கால உறுப்பினர் சான்றினை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். நான் எங்காவது எப்போதாவது களவாடி இருக்கிறேனா என்றும், நான் எப்போதாவது நீதிமன்ற விசாரனையில் இருந்திருக்கிறேனா என்பதை நீங்கள் எனக்குக் கூற வேண்டும். நான் எப்பொழுதாவது விபச்சாரம் செய்திருக்கிறேனா, நான் மற்ற எந்த தவறான காரியங்களைச் செய்திருக்கிறேனா அல்லது அதைப் போன்ற ஒன்றை எனக்குக் காண்பியுங்கள்," என்கிறார்கள். இப்பொழுது அதனால் ஒரு காரியமும் இல்லை. ஓ, இல்லை, பாருங்கள், அவன் எவ்வளவு தான் அவ்வாறு இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, உடன்படிக்கை பிரயோஜன மற்றதாகி விடுகின்றது. அது சக்தியற்று விடுகின்றது. நீங்கள், “நான் ஒரு வேத மாணாக்கன்” எனலாம். 131 நீங்கள் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. உடன்படிக்கை இல்லாமலிருந்தால், தேவ கோபாக்கினை உங்கள் மேல் தங்கும். அது உண்மை. அது உங்களைப் பிடிக்கும். ஆம் "உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும்" பாவம் என்றால் என்ன-? அவிசுவாசம். நீங்கள் செய்தியை விசுவாசிக்கவில்லை. வார்த்தையை நீங்கள் விசுவாசியாமல் இருக்கிறீர்கள். அடையாளத்தின் சாட்சியையே, அதையே நீங்கள் விசுவாசிக்கவில்லை, முக்கியமாக நமது மத்தியில் அது தன்னை பகிரங்கமாக அடையாளம் காண்பித்த போது, அதை நீங்கள் விசுவாசிக்காமல் இருந்தீர்களா-? நீங்கள் எவ்வளவு தான் விசுவாசியாமல் இருந்தாலும் சரி, ஆனால் அந்த அடையாளமோ வைத்துக் கொள்ளப்பட வேண்டும். 132 நீங்கள், "நான் அதை நம்புகிறேன்; நான் அதை நம்புகிறேன்; அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். அது சாத்தியம் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறலாம். அதெல்லாம் நல்லது தான். ஆயினும் அதே சமயத்தில் அந்த அடையாளம் வைத்துக் கொள்ளப்பட வேண்டும் 133 ஏன் ஆட்டுக்குட்டியை பலியாகச் செலுத்தின போது, யூதன் அதன் இரத்தத்தைக் கலக்கிக் கொண்டே, “இது யேகோவா” என்று கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். 134 ஒரு ஆசாரியனும் அங்கு நின்று கொண்டு, "ஆம் ஐயா, அது உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லியிருப்பான். ஆனால் அவனுடைய சொந்த வீட்டில் அந்த இரத்தம் பூசப்படாதிருந்தது. அப்பொழுது அந்த குழுவோடு அவன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை. இல்லை ஐயா, "வாசலில் இரத்தம் பூசின மதப்பைத்தியம் கொண்டவர்கள்" என்று கூறி இருக்கலாம். அவன் அந்த அடையாளத்தை விரும்பவில்லை. அவன் எவ்வளவு தான் ஆசாரியனாக இருந்தாலும், அவன் தேவனுடைய வார்த்தையை எவ்வளவு தான் அறிந்திருந்தாலும், அவன் எவ்வளவு நல்லவனாக வளர்க்கப்பட்டாலும், அவன் எவ்வளவு நற்கிரியைகளைச் செய்திருந்தாலும், எவ்வளவு தான் அவன் ஏழைகளுக்கு கொடுத்திருந்தாலும், அவன் எவ்வளவு தான் பலி செலுத்தி இருந்தாலும் அது ஒரு பொருட்டேயல்ல. 135 பவுல், “என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் இந்த எல்லாக் காரியங்களும் இருந்தாலும் அந்த அடையாளம் என் மீது இராவிட்டால் நான் ஒன்றுமில்லை" என்றான். “இந்த அடையாளம் இருக்கும் வரையே-!" நான் இன்றிரவு பேசிக் கொண்டிருக்கும் அன்பு பாருங்கள்-? "அது என் மீது வந்தால் ஓழிய நான் ஒன்றுமில்லை " புரிகிறதா-? 136 நீங்கள் ஒருக்கால் பிசாசுகளைத் துரத்தி இருக்கலாம்; உங்கள் விசுவாசம் உள்ள ஜெபத்தால் நீங்கள் பிணியாளிகளைச் சுகமாக்கி இருக்கலாம். இவை அனைத்தையும் நீங்கள் செய்திருக்கலாம். அதைக் குறித்து எனக்கு கவலை இல்லை. ஆனால் அந்த அடையாளம் அங்கில்லை என்றால், நீங்கள் தேவ கோபாக்கினைக்கு ஆளாவீர்கள். நீ ஒரு விசுவாசியாக இருக்கலாம். நீ பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கலாம். "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே-! கர்த்தாவே-! உமது நாமத்தினாலே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் அல்லவா-? அதாவது உமது நாமத்தினாலே பிரசங்கம் செய்தேன் அல்லவா-? நாம் உம்முடைய நாமத்தில் பிசாசை துரத்தினேனல்லவா-?" என்பார்கள். அது மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தர் அனைவரையும் குறிக்கிறது. இயேசுவோ, "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்" என்றார். 137 ஆனால் "அந்த அடையாளத்தை நான் காணும் போது, நான் உங்களைக் கடந்து போவேன்." அதுவே இந்நேரத்தில் தேவனுடைய தேவையாயுள்ளது. சாயங்கால செய்தியே அந்த அடையாளத்தை உங்கள் மேல் வைக்கின்றது. 138 சாத்தான் கைகுலுக்குதல், அத்தாட்சிகள், அது போன்ற எல்லா போலிகளையும் விதைப்பான். அவை அனைத்தையும் மறந்து விடுங்கள். அந்த அடையாளத்திற்குத் தாமே நேரம் வந்து விட்டது, ஏதோ போலியானதற்கு, அவிசுவாசத்திற்கு, பதிலீயானத்தற்கோ அல்ல. 139 இக்காலத்தில் நமது மத்தியில் தம்மை நம்முடன் ஒன்றுபடுத்திக் கொண்டு, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபித்து வருகின்ற மணி நேரம் அதுவே. அவர் சரியாய் வார்த்தையுடன் இருக்கின்றார். அந்த அடையாளம் இப்பொழுது நம்மேல் வைக்கப்பட வேண்டும். ஒரு மனிதன் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டதாக் கூறிக் கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை மறுதலித்தால், அப்பொழுது அதைக் குறித்து என்ன-? பாருங்கள், நீங்கள் அவ்விதம் செய்யவே முடியாது. அந்த அடையாளம் அங்கு இருக்க வேண்டும். இரத்தம் உங்களுக்கு அடையாளமாக இருக்க வேண்டும். இப்பொழுது பரிசுத்தாவி, இயேசுவின் இரத்தத்தில் இருந்த ஜீவன், உங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கிறது. அதைக் குறித்து கொஞ்ச நேரத்தில் நான் பேசுவேன். பாருங்கள். பரிசுத்தாவியே அந்த அடையாளம். வழக்கு முடிவுற்றுவிட்டது. ஆம், ஐயா. இப்பொழுது நினைவிருக்கட்டும். நான்.... 140 நீங்கள் யாராயிருந்தாலும், எவ்வளவு நல்லவராக இருந்தாலும், எத்தனை முறை மேலும் கீழும் குதித்தாலும், எத்தனை சபைகளைச் சேர்ந்திருந்தாலும், எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும், அடையாளம் உங்கள் மீது இராவிட்டால், இவை அனைத்தும் உபயோகமற்றவை. இது சாயங்கால நேரம் ஆகும். லூத்தரின் காலத்தில் அது சரியாகக் கிரியை செய்தது. வெஸ்லியின் காலத்திலும் அப்படியே. ஆனால் இக்காலத்தில் அவைகளால் ஒரு காரியமும் இல்லை. கிடையாது. 141 ஆம், அப்பொழுது ஆட்டுக்குட்டியை வைத்திருப்பது சரியான காரியமாக இருந்தது. ஆட்டுக்குட்டி, அந்த இரத்தம் பூசப்படுவதற்கு முன் அப்பொழுது மரித்தவர்கள், அது வேறொன்றாகும். ஆம், ஐயா. அவர்கள் நல்மனச் சாட்சியுடன் சென்றனர். அவர்கள் அவர்கள் அதைக்...நியாயந்தீர்க்கப்படுவர். 142 அவர்கள் முன்குறிக்கப்பட்டவர்களானால், அது அவர்களைத் தொடும். இல்லையேல், அது அவர்களைத் தொடுவதில்லை. அவ்வளவு தான். எல்லாம் தேவனே. "அவர்-அவர் யாரை விரும்புகிறாரோ, அவர்களை நீதிமான்கள் ஆக்குகிறார். எவர்கள் மேல் இரக்கமாய் இருக்கச் சித்தமாய் இருக்கிறாரோ அவர்கள் மேல் அவர் இரக்கமாய் இருக்கிறார். எவர்களைக் குற்றப்படுத்த சித்தமாய் இருக்கிறாரோ, அவர்களை அவர் குற்றப்படுத்துகிறார்." அவர் தேவன். அவ்வளவு தான். "எவர்கள் மேல் இரக்கமாயிருக்கிறாரோ அவர்கள் மீது இரக்கமாய் இருக்கிறார். எவர்களை குற்றப்படுத்த அவர் விரும்புகிறாரோ அவர்களை குற்றப்படுத்துகிறார்." 143 ஒரு யூதன் விருத்தசேதனத்தின் மூலம் தன்னை ஒரு விசுவாசி என்று தெளிவாக காண்பிக்க முடியும். 144 அவ்வாறே, அடிப்படை போதகத்தை கைக் கொண்டுள்ள அநேகர், வேதாகமத்தை கையிலேந்தி, "நான் ஒரு விசுவாசி" என்று கூறலாம். இயேசு "விசுவாசத்தினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்" என்று கூறியுள்ளார். "நான் ஒரு விசுவாசி. ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது அர்த்தமற்றது என்று கூறலாம். அப்படியானால், அந்த அடையாளம் அவர்கள் மேல் இல்லை என்று அர்த்தம். அவர்கள் எவ்வளவு தான் விசுவாசித்தாலும், அது ரத்தாகி விடுகின்றது. 145 விருத்தசேதனம் செய்யப்பட்ட யூதனைப் போலவே. அவன், "நான் ஒரு யூதன். அந்த மத வைராக்கியக் குழுவினரைப்போல் நான் ஏன் இரத்தத்தை பூச வேண்டும்-?” என்று கூறியிருப்பான். 146 மோசே தெருக்களில் நின்று கொண்டு, "சாயங்கால செய்தி இங்கு உள்ளது. 14-நாட்கள் முடிவடைந்த பின்பு, நீங்கள் சபையைக் கூட்டி அந்த ஆட்டுக் குட்டியைக் கொல்ல வேண்டும். இஸ்ரவேல் சபை அனைத்தும் அந்த ஆட்டுக் குட்டியின் மேல் தங்கள் கைகளை வைத்து, அதனுடன் தங்களை ஒன்று படுத்திக் கொண்டு, அதனை கொல்ல வேண்டும். அதன் இரத்தத்தை நீங்கள் வாசல்களிலும் நிலைக்கால்களிலும் பூச வேண்டும். நான் இரத்தத்தைக் காணும் போது, நான் உங்களைக்கடந்து போவேன். ஏனெனில் நான் உங்களுக்கு அளித்து உள்ள அந்த ஆட்டுக்குட்டியின் மரணத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதற்கு அதுவே ஒரு அடையாளமாயுள்ளது." இரத்தமே அடையாளமாய் இருந்தது. 147 இப்பொழுதோ பரிசுத்தாவியே அடையாளமாய் உள்ளது. "இன்னும் சில நாட்களில் நீங்கள் பரிசுத்தாவியினால் நிறையப்படுவீர்கள்." இயேசு கிறிஸ்து வின் இரத்தம் சிந்தப்பட்ட பிறகு, அந்த அடையாளம் பலத்த காற்று அடிக்கிற முழக்கமாய் பெந்தெகொஸ்தே நாளன்று அனுப்பப்பட்டது. 148 அதுவே, ஒவ்வொரு அப்போஸ்தலரின் கருப்பொருளாயிருந்தது. நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்தாவியைப் பெற்றீர்களா-? "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்தாவியின் வரத்தைப் பெறுவீர்கள். ஏனென்றால் அதுவே ஒரு அடையாளமாயுள்ளது. ஆமென், நீங்கள் மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறீர்கள்' என்பதாயிருந்தது. அங்கு தான் காரியமே உள்ளது. அந்த புறஜாதி... யூத சபை மறைந்தவுடன் புறஜாதி சபை தோன்றி, தாறுமாறானவைகளை கைக்கொண்டனர். இப்பொழுது புறஜாதியில் மீதியானவர்கள், மணவாட்டி, அவருடைய நாமத்திற்கென்று அந்த ஸ்தாபனங்களை விட்டு வெளி வந்து கொண்டு இருக்கிறார்கள். 149 நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா-? இங்கே என்ன கூறிக் கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிகிறதா-? அந்த அடையாளம் பகிரங்கமாக காண்பிக்கப்படாவிட்டால், உடன்படிக்கையே செல்லாததாய்ப் போய் விடுகிறது. புரிகிறதா-? அது செய்யப்பட வேண்டும். ஏனெனில், நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று சொல்லியும், தேவனுடைய வார்த்தை கற்பிப்பவைகளை நீங்கள் கைக் கொள்ளாமற் போனால், அப்பொழுது நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்க வில்லை என்று அர்த்தமாகின்றது. புரிகிறதா-? நீங்கள் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தாலும், நீங்கள் சபையில் சேர்ந்து ஞான ஸ்நானம் பெற்று இருந்தாலும், இவை அனைத்தும் நீங்கள் செய்திருந்தாலும், அது அடையாளம் அல்ல, பரிசுத்தாவியே அடையாளம் 150 நான் சற்று முன்பு உங்களிடம் கூறினது போல, அந்த அருமையான வேத பண்டிதர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர், “பில்லி, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. தேவனை விசுவாசிப்பதைக் காட்டிலும், ஒரு மனிதன் வேறெதைச் செய்ய முடியும்-?" என்று கேட்டார். 151 அதற்கு நான், "அது உண்மை தான், வேத பண்டிதர் அவர்களே, அது சரிதான் ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். வேதாகமம் அவ்வண்ணமாக உரைத்து உள்ளது. நீங்கள் கூறுவது சரி. இதுவரை நீங்கள் வந்துள்ள நிலை சரி தான்" என்று கூறினேன். 152 கானான் தேசத்தை வேவு பார்க்க அனுப்பப்பட்ட 12-வேவுகாரர்கள் அவர்கள் கானான் தேசத்தை நோக்கிச் சென்ற போது, அவர்கள் அவ்வாறு செல்லும் வரைக்கும் விசுவாசத்தில் உறுதியாய் சென்றார்கள். ஆனால் எல்லையை அடைந்த போது, அவர்கள் அதைப் புறக்கணித்தனர். 153 எனவே நான், “பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் தற்பொழுது வந்துள்ள நிலை வரைக்கும் சரி தான். ஆனால் நீங்கள் விசுவாசிகளான போது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா-?" என்று கேட்டேன். உம். மேலும் நான், "தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை அங்கீகரித்தார் என்பது நினைவிருக்கட்டும். அவன் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அது உண்மை தான். ஆனால் விருத்தசேதனம் என்னும் முத்திரையை தேவன் அவனுக்கு ஒரு அடையாளமாகத் தந்தருளினார். மாம்சத்தில் செய்யப்பட்ட விருத்தசேதனம் அவனுடைய ஆத்துமாவுடன் சம்பந்தப்பட்டது என்பதற்காக இது அளிக்கப்படவில்லை. அவர் (தேவன்) அவனுடைய விசுவாசத்தை அங்கீகரித்தார் என்பதன் அடையாளமாக இது கொடுக்கப்பட்டது. 154 அவர் நம்மை விசுவாசிகளாக அங்கீகரித்திருக்கிறார் என்பதன் அடையாளமாக பரிசுத்த ஆவியை அவர் நமக்குத் தந்தருளியுள்ளார். நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கு என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞான ஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும்...'' 155 இப்பொழுது இந்த காரியத்தை புரிந்து கொள்ளுங்கள். யூதர்கள், தாங்கள் விருத்தசேதனம் பெற்றவர்கள் என்று எவ்வளவு நிரூபித்தாலும், அடையாளம் பகிரங்கமாக காண்பிக்கப்பட வேண்டியதாயிருந்தது. இல்லாவிடில், உடன் படிக்கை பலனற்றுப் போனதாய் இருந்தது. அது பயனற்றதாயிருந்தது. 156 இப்பொழுதும் அது போன்றேயுள்ளது. நீங்கள் என்னதான் செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, வேதாகமத்தை நீங்கள் எவ்வளவு தான் வியாக்கியானம் செய்தாலும் ஒரு பொருட்டல்ல, நீங்கள் அது ஒரு வேத மாணாக்கனாக இருக்கலாம்; ஓ, என்னே-! நீங்களோ, "நான் ஒரு விசுவாசி மற்றும் ஒவ்வொன்றையும்," கூறிக்கொள்ளலாம். ஆனாலும் இன்னமும் அடையாளம் அவசியமாயுள்ளது. நான் ஒரு வேத மாணாக்கன், "நான் ஒரு நல்ல நபர், சகோ.பிரன்ஹாம்." என்று நீங்கள் கூறலாம். 157 “யார் என்ன கூறினாலும் அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை, அந்த மனிதனை எவரும் மிஞ்ச முடியாது. அவர் எந்த ஒரு தவறும் செய்ததை என் வாழ்நாளில் நான் கண்டதேயில்லை." ஆனால் அதற்கு தேவனுடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது. (சகோ.பிரான்ஹாம் தன் விரலை சொடுக்குகிறார்.- ஆசி.) ஒரே ஒரு தேவை மாத்திரமேயுண்டு. 158 உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆட்டுக்குட்டி சாகாமல், இரத்தமாகிய அடையாளத்தை நீங்கள் வாசல் நிலைக்கால்களில் பூச முடியாது. ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டது என்பதற்கு உறுதியான அடையாளமே அந்த இரத்தம் கொல்லப்பட்டதாக மற்றவரை நம்பச் செய்வதல்ல; அந்த ஆட்டுக்குட்டி நிச்சயமாக மரித்தது. 159 உங்களுடைய ஆட்டுக்குட்டியானவர் மரித்தார் என்பதற்கு உறுதியான அடையாளம் பரிசுத்த ஆவியாயுள்ளது. அந்த அடையாளத்தை நீங்கள் உங்கள் மீது பெற்று இருக்கின்றீர்கள், ஏனென்றால் அவருடைய சொந்த ஜீவன் உங்களுக்குள் இருக்கின்றது. புரிகிறதா-? அதை பெற்றது போல் பாசாங்கு செய்வது அல்ல, அது பாவனையான ஒன்று அல்ல. அதில் போலிக்கு எவ்வித இடமுமில்லை. அது நிச்சயமாக அங்குள்ளது. நீங்கள் அதை அறிந்துள்ளீர்கள். நீங்கள் அதை அறிந்து உள்ளீர்கள். உலகம் அதை அறிந்துள்ளது. அடையாளம் அங்கு உள்ளது. 160 ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. ஒரு வேத மாணாக்கனாக இருக்கலாம்... அவ்வாறு இருக்கலாம்.. சபையின் ஒரு நல்ல அங்கத்தினனாக இருக்கலாம். அவர் ஒரு நல்ல நபராக இருக்கலாம். ஒரு ஸ்தாபனத்தின் தலைவராக அவர் இருக்கலாம். ரோமாபுரியின் தலைமை மத குருவாக இருக்கலாம். அவர் யாராயிருக்கிறார் என்று எனக்கு எனக்குத் தெரியாது. ஆயினும் அதனால் அதனால் எந்த ஒரு காரியமும் இல்லை . 161 ஆனால், இஸ்ரவேல் ஜனங்கள் சபைக்கு முன்னடையாளமாய் இருந்தனர், சரியாக அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு முன்னடையாளமாய் இருந்தனர் என்று எந்த வேதமாணாக்கனும் அறிவான். அந்த தேசத்தை நோக்கியே அவள் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறாள். 162 ஆனால் சாயங்கால நேரத்தில் பிரயாணத்தில் அவர்களுக்கு தீர்மானிக்கப் பட்ட ஒரு காரியம் தேவைப்பட்டது. அவன் எவ்வளவு தான் யூதராக இருந்தாலும், எவ்வளவு நன்றாய் பயிரிட்டாலும், எவ்வளவு தான் தங்கள் சுற்றத்தாரை பேணிப் பாதுகாத்தாலும், அவர் எவ்வளவு தான் செய்திருந்தாலும், எவ்வளவு தான் ஒரு நல்ல உறுப்பினராக இருந்தாலும், எவ்வளவாக தசமபாகம் செலுத்தினாலும் இந்தக் காரியங்கள் யாவும் அருமையாய் இருந்தன. இவை எல்லாம் சரியே. அவர் நல்லவர் என்று ஜனங்களால் அங்கீகரிக்கப்படுகிறவர். ஆயினும் இரத்தம் என்னும் அடையாளம் இராமற்போனால், அவர் அழிந்து போவார். 163 ஓ. இங்கு வந்துள்ளவரின் மனதிலும், இந்த ஒலிநாடாவை கேட்பவரின் மனதிலும் இதைப் பதியச் செய்ய தேவன் எனக்கு உதவி செய்வாராக. 164 நீங்கள் ஒருக்கால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து இருக்கலாம், நீங்கள் பிசாசுகளைத் துரத்தியிருக்கலாம். நீங்கள் அந்நிய பாஷை பேசியிருக்கலாம், அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் கூச்சலிட்து இருக்கலாம், ஆவியில் நடனமாடி இருக்கலாம். ஆனால் அடையாளம் இல்லாமல் அவ்வாறு செய்திருக்கலாம். நீங்களோ, “என்னால் அதைச் செய்ய முடியுமா-?" என்று கேட்கலாம். 165 உங்களால் முடியும் என்பதாக பவுல் கூறியுள்ளான். "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும்; என் சரீரத்தை சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும்; மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசம் உள்ளவனாய் இருந்தாலும் எனக்குப் பிரயோஜனம் ஒன்றும் இல்லை," என்று அவன் கூறியிருக்கிறான். அவைகளின் பேரில் சார்ந்து இராதேயுங்கள். அடையாளம் அவசியமாயுள்ளது. நீங்கள் எவ்வளவாக நற் காரியங்களைச் செய்த போதிலும் அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், தேவ கோபாக்கினை விழும் போது, அது அடையாளத்தை மாத்திரமே அங்கீகரிக்கும். 166 கேட்கப்பட்ட கிரயம் செலுத்தப்பட்டது என்பதற்கு அதுவே ஒரு அடையாளம். இயேசு கிறிஸ்துவின் ஜீவனே கிரயமாகச் செலுத்தப்பட்டது, அவர் தமது ஜீவனைக் கொடுத்தார். அவருடைய ஆவி நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய அடையாளமாகத் திரும்பவும் உங்கள் மேல் வந்திருக்கிறது. அந்த அடையாளத்தை நீங்கள் தினந்தோறும், இரவும் பகலும் உங்களோடு கொண்டு செல்கின்றீர்கள், வெறுமென ஞாயிறன்று மாத்திரமல்ல, எல்லா சமயங்களிலும் நீங்கள் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். "நான்... அந்த இரத்தம் உங்களுக்கு ஒரு அடையாளமாய் இருக்கும்." 167 நீங்கள், "நான் இன்னமும் விசுவாசிக்கிறேன். நான் ஒரு விசுவாசி” என்று கூறலாம். அது சரிதான். ஆனால் நீங்கள் அடையாளத்தைப் புறக்கணித்தால், அப்பொழுது எப்படி நீங்கள் ஒரு விசுவாசியாக இருக்கப் போகிறீர்கள்-? அது உங்களுக்கு விரோதமாய் பேசுகின்றதே: பாருங்கள், அது உங்கள் சாட்சிக்கு விரோதமாக, நீங்கள் செய்வதற்கு எதிராய்ப் பேசுகின்றதே. 168 வேத மாணாக்கன், நல்ல நபர், சபை அங்கத்தினர்; நீங்கள் யாராய் இருந்தாலும் அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. ஆம், ஐயா. உங்கள் தகப்பனார் ஒருக்கால் பிரசங்கியாக இருக்கலாம். உங்கள் தாயார் ஒரு பரிசுத்தவாட்டியாக இருக்கலாம். ஒருகால் அதெல்லாம் சரி தான். அவர்கள் தங்களுக்கு மாத்திரமே உத்தரவு சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றனர். நான் முன்பு உங்களிடம் கூறினது போல்... 169 ஜனங்கள் தேவனை ஒரு நற்குணமுள்ள கனத்த வயோதிபப் பாட்டனாராகக் கருதி, அவருக்கு ஒரு கூட்ட பேரப் பிள்ளைகளை இருப்பதாக கருதி “ரிக்கிகள்" (Rickys) “எல்விஸ்" (Elvis) போன்ற பேரப் பிள்ளைகள் இருக்கின்றனர் என்றும், அவர்களில் தீமையொன்றும் இல்லையென்றுமே "நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்." 170 தேவன் அப்படிப்பட்டவரல்லவே-! அவருக்குப் பேரப் பிள்ளைகள் கிடையாது. அவர் பிதாவாயிருக்கிறார். நாம் மறுபடியும் பிறந்தாக வேண்டுமே-! அவர் பெரிய உருவம் கொண்ட, மிருதுவான குணம் படைத்த, தள்ளாடும் கிழவரல்ல. 171 அவர் நியாயத் தீர்ப்பு செய்யும் தேவனாய் இருக்கிறார். வேதம் அவ்வாறே உரைக்கிறது. அவருடைய கோபம் மிகவும் உக்கிரமானது. அதைக் காலால் மிதித்துப் போட்டு, உங்கள் பாவத்துடன் கூட உங்களை பரலோகத்திற்கு கொண்டு செல்ல அவர் வல்லவராய் இருக்கிறார் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம், அவர் அப்படிப்பட்டவராய் இருந்தால், இந்த எல்லா சாக்கு போக்குகளையும் அவர் அனுமதித்திருப்பாரே, அப்படியாயானால் ஏவாளையும் ஏற்றுக் கொண்டிருப்பாரே-! நீங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டும், இல்லையேல், நீங்கள்.... அழிந்து போவீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும்போது, அடையாளம் உங்கள் மேல் தங்கியிருக்கும். ஹூம், ஹூம். 172 அன்றிரவு, எந்த நேரமும் எகிப்தை தாக்குவதற்கு மரணம் ஆயத்தமாய் இருந்தது. அது ஓர் பயங்கரமான சமயம். அவர்களுடைய சடங்குகள், விருந்துகள், உபவாசங்கள். 173 தேவன் அவர்களை சந்தித்தார். அவர்கள் மத்தியில் தேவன் தம்முடைய மகத்தான அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பித்திருந்தார். அது என்ன-? இப்பொழுது ஒரு நிமிடம் நிறுத்துவோம். தேவன் தமது கிருபையை அவர்களுக்குக் காண்பித்தார். அவர், அவர்களுக்கு ஒரு தருணம் கொடுத்து இருந்தார். 174 அதை அவர்களால் மறுக்க முடியவில்லை. ஆயினும் அவர்கள், "அதெல்லாம் ஒன்றுமில்லை. அவை அர்த்தமற்றவை. அந்த நதியில் சிவந்த மண் ஊற்று சுரந்தது. அதனால் தான் அது இரத்தத்தைப்போல் சிவப்பாயிற்று" என்றனர். பின்பு கல் மழை பெய்தது. பின்னர் தவளைகள் தோன்றின. தேவன் ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணி, தம்முடைய வார்த்தையை தீர்க்கதரிசியின் வாயில் போட்டார். அவன் அதைப் பேசின போது, அது நிறைவேறினது. அதை அவர்கள் கண்டனர், அவர்களால் அதை மறுக்க முடியவில்லை . 175 மோசே வரக் கட்டளையிட்ட யாவும் தோன்றின. மோசே அதை தேவன் இடமிருந்து பெற்றுக் கொண்டான். ஏனெனில் அவன் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே பேசினான். அவர், "உன்னை நான் தேவனாக்குவேன்" என்றார். மோசே அவர்களுக்கு தேவனாய் இருந்தான். பாருங்கள்-? அவர்கள் வித்தியாசம் ஏதும் அறியாதிருந்ததால், கர்த்தர், "நீ தேவனாயிருப்பாய், ஆரோன் உனக்கு தீர்க்கதரிசியாய் இருப்பான்" என்றார். பாருங்கள் "நீ தேவனைப் போன்று இருப்பாய். நான் உன் சத்தத்தை உபயோகித்து, உன்னுடன் கூட சேர்ந்து சிருஷ்டிப்பேன். நான் பேசுவேன். ஜனங்கள் அதை மறுக்க முடியாது. ஏனெனில் அவர்கள் முன்னிலையில் அது நிறைவேறும். நீ கூறுகிற யாவும் நிறைவேறும்” என்றார். ஓ, என்னே-! "இவைகளை நான் உனக்குக் காண்பிப்பேன்.” என்னே-! எகிப்தியர் அவைகளைக் கண்டனர். அவர்கள் அதை சாயங்கால நேரத்திற்கு முன்னர் இல்லை சாயங்கால நேரத்தில் கண்டனர். 176 அவருடைய நன்மைகளை அவர்களுக்கு அவர் காண்பித்தார். அவரால் அதை எடுத்துப் போட்டு, சுகப்படுத்த முடிந்தது என்பதை அவர்களுக்குக் காண்பித்தார். 177 அங்கிருந்த மந்திரவாதிகளும் அதையே செய்ய முயன்றனர், போலியாட்கள். அவர்களை நீங்கள் எப்பொழுதும் அடையாளம் கண்டு கொள்ளலாம். அங்கு யந்நேயும் யம்பிரேயும் இருந்தனர். அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். ஆனால் உண்மையான காரியங்கள் நிகழ்ந்த போது, அவர்களால் அதைச் செய்யக் கூடாமற் போயிற்று. அது உண்மை. சிறிது காலம் அவர்கள் உடன் வந்தனர். ஆனால் அதற்குப் பின்னர் அவர்களுடைய மதிகேடு வெளிப்பட்டது. 178 கடைசிக் காலத்திலும் இதுபோன்றே சம்பவிக்கும் என்று வேதாகமம் கூறி உள்ளதல்லவா-? யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல." ஆனால் அவர்களுடைய மதிகேடு வெளிப்பட்டது. எனவே மறுபடியும் அதுவே சம்பவிக்கும். பாருங்கள்-? அது இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக்கிறது. "துர்புத்தியுள்ள மனுஷர்கள், சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பவர்கள்," அது உண்மை. அவர்களுக்கு சபைகள், மகத்தான காரியங்கள், பெரிய, உயர்ந்த, பெரிய அழகொப்பான காரியங்கள் இருக்கலாம். ஆனால் முடிவில் அந்த மணி நேரம் வரும். 179 அந்த அடையாளத்தோடு உறுதியாக நில்லுங்கள். நாம் அவ்வாறு இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவருடைய வார்த்தையை உறுதியாய் பற்றிக் கொள்ளுங்கள். அதனின்று விலகச் செல்ல வேண்டாம். அதனோடு தரித்திருங்கள். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. 180 மரணம் அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தது. தேவன் அவர்களுக்கு இரக்கத்தை காண்பித்திருந்தார், வல்லமையையும் அடையாளங்களையும் காண்பித்திருந்தார். 181 இப்பொழுது அங்குள்ள அந்த கடிகார நேரப்படி நாம் ஓரிரண்டு நிமிடம் சற்று நிறுத்திக் கொள்வோம். கடைசி நாட்களில் என்ன திகழும் என்பதைக் குறித்து அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளதை நாம் நம்முடைய சிந்தைகளில் சிந்தனை செய்வோமாக. அதை நாமும் கூட பரிசோதித்து பார்க்க வேண்டியவர்களாய் இருக்கிறோம் அல்லவா என்று நான் வியப்புறுகிறேன். புரிகிறதா-? 182 அவர் இக்காரியங்கள் எல்லாவற்றையும் செய்திருந்தார், அதே சமயத்தில் அவர்கள் மனந்திரும்பவும், அந்நாளின் செய்தியை விசுவாசிக்க வாஞ்சை இல்லாமல் இருந்தனர். இவை அனைத்தும் அவர்கள் முன்னிலையில் பகிரங்கமாகக் காண்பிக்கப்பட்டு, உறுதியாக வெளிப்படுத்தப்பட்ட போதிலும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள இன்னமும் விரும்பவில்லை. 183 இவைகள் சம்பவிப்பதை நீங்கள் காணும் போது, அவை வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாயுள்ளன. நியாயத்தீர்ப்பு அந்தக் காரியங்களைப் பின் தொடரும். அது எல்லா காலங்களிலும் அதையே செய்துள்ளது. இம் முறையும் அது விதிவிலக்காக இருக்காது. புரிகிறதா-? நியாயத்தீர்ப்பு எப்பொழுதும் கிருபையைத் தொடர்ந்து வரும். கிருபை புறக்கணிக்கப்படும் போது, நியாயத்தீர்ப்பைத் தவிர வேறு ஒன்றும் விடப்பட்டிருக்கவில்லை. ஆகையால் அது எப்பொழுதுமே கிருபையைத் தொடர்ந்து வரும். 184 இப்பொழுதும் காட்சியில், ஆவிக்குரிய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தேவன் இடத்தில் இருந்து வரும் ஒரு அடையாளமாயுள்ளது. ஜாக்கிரதையாயிருங்கள். அதைக் கவனியுங்கள், பாருங்கள். கவனியுங்கள், ஆவிக்குரிய நிகழ்ச்சி ஒவ்வொன்றும், சம்பவிக்கிற ஒவ்வொன்றும் ஒரு அடையாளமாய் உள்ளது. நாம் எதேச்சையாக இங்கு வரவில்லை. இக்காரியங்கள் எதேச்சையாக நடைபெறவில்லை. அது ஒரு அடையாளம். நாம் விரைந்து பாதுகாப்பான ஸ்தலத்தை அடைய வேண்டுமென்பதற்கு இது ஒரு அடையாளமாயுள்ளது. நோவா தன்னுடைய சந்ததிக்கு ஒரு அடையாளமாயிருந்தான். எலியா அவன் உடையதற்கு ஒரு அடையாளமாக இருந்தான்; யோவான் அவனுடையதற்கு ஒரு அடையாளமாக இருந்தான். பாருங்கள்-? எல்லா காரியமும், இந்த மணி நேரத்தின் செய்தியும் ஒரு அடையாளம் ஆகும். இதை கவனியுங்கள். அது என்ன செய்கிறதென்று பாருங்கள்-? புரிகிறதா-? அது ஒரு அடையாளம். ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தமுண்டு. 185 வேறெந்த காலத்திலும் இத்தகைய மாதிரியான ஒரு செய்தி அளிக்கப்பட்டு இருக்க முடியாது. லூத்தரின் நாளில், இச்செய்தி தோன்றியிருக்க முடியாது; வெஸ்லியின் நாளிலும் இது தோன்றியிருக்க முடியாது; இது பெந்தெகொஸ்தே இனரின் நாளில் தோன்றியிருக்க முடியாது. அது தோன்றியிருக்கவே முடியாது, புரிகிறதா-? ஆயினும், அது அளிக்கப்படுமென்று வேதத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. புரிகிறதா-? நாம் முடிவிலே இருக்கிறோம். ஒன்றுமே சம்பவித்திருக்க முடியாது. இந்த மணி நேரம் வரை அது சம்பவித்திருக்க முடியாது. அது ஒரு அடையாளமாக சம்பவித்துக் கொண்டு இருக்கிறது. அடையாளம் என்றால் என்னவென்று வியப்புறுகிறீர்களா-? 186 ஓ, சிறு கூட்ட ஜனங்களே, என் சகோதரனே, என் சகோதரியே, விரைவாக அந்த அடையாளத்தின் (Token) கீழ் வந்துவிடுங்கள். பாருங்கள்-? அதற்குப் பதிலாக வேறெந்த ஈடையும் தெரிந்து கொள்ள வேண்டாம். வேண்டாம், வேண்டாம், அவ்விதம் செய்யாதீர்-! பாருங்கள்-? அதைப் பெற்றுக் கொண்டது போல் கற்பனை செய்யவேண்டாம். அந்த அடையாளம் உங்கள் மீது வந்து உள்ளது என்பதை உறுதியாய் அறியும் வரை அதில் நிலைகொள்ளுங்கள். கிறிஸ்துவின் சிந்தை (முழுமையாக உங்களுக்குள்) வந்து, உலகிலுள்ள அர்த்தமற்ற காரியங்கள் உங்களிலிருந்த எடுபட்டு, பாருங்கள், உங்கள் இருதயத்தின் வாஞ்சை முழுவதும் அவராக இருக்கும் வரைக்கும் அங்கேயே தரித்திருங்கள். பாருங்கள்-? அப்பொழுது, நீங்கள் அறிந்து கொள்வீர்கள், ஏதோக் காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இயேசு, "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன” என்று கூறியுள்ளார். பாவனை விசுவாசிகளையல்ல, ஆனால் விசுவாசிகளை, புரிகிறதா-? இப்பொழுது நாம் இதை எதேச்சையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் அவ்விதம் செய்யக் கூடாது. 187 இந்த மணி நேரத்தின் செய்தி சபைகளுக்கு ஒரு அடையாளம் (sign) ஆகும். ஜனங்களுக்கு அது அடையாளமாய் உள்ளது. நீங்கள் புரிந்து கொள்கின்றீர்களா-? [சபையார் "ஆமென்" என்கின்றனர்- ஆசி.] இந்த ஒலி நாடாவை கேட்பவர்களும், உலகின் பல்வேறு பாகங்களில் கேட்டவர்களும் கூட இதைப் புரிந்து கொள்வார்களென நான் நம்புகிறேன், பாருங்கள். பாருங்கள், இந்த மணி நேரத்தின் அடையாளம் இங்குள்ளது. நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய அடையாளம் இங்கே இருக்கின்றது. அது வேறெந்த காலத்திலும் வந்திருக்க முடியாது. 188 அந்த நேரத்திற்கான தேவனுடைய ஆயத்தங்களை கவனியுங்கள். இப்பொழுது, "அவையெல்லாம் நமக்கு திருஷ்டாந்தங்களாக சம்பவித்துள்ளன" என்று வேதம் உரைத்துள்ளது என்பதை நாம் அறிவோம், நீங்கள் பாருங்கள். கவனியுங்கள், எகிப்தை நியாயந்தீர்ப்பதற்கு முன்பாக, தேவன் முதலில் ஒரு ஆயத்தம் செய்தார். முதலில் அவர் என்ன செய்தார்-? அவர் தமது முறைகளை ஒரு போதும் மாற்றுவதில்லை. 189 முதலில் அவர் செய்த போது, தமது ஆயத்தத்தை அவர் செய்த போது, அவர் ஒரு தீர்க்கதரிசியை ஒரு செய்தியுடன் ஜனங்களிடையே அனுப்பினார். அவர் தம்முடைய ஜனங்களுக்கு செய்த முதல் காரியம் ஒரு செய்தியோடு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினதே ஆகும். 190 அவர் செய்த அடுத்த காரியம், இந்த தீர்க்கதரிசியை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அவர் ஒரு அடையாளமாக அக்கினிஸ்தம்பத்தை அனுப்பினார். 191 மூன்றாவது காரியமாக அவர் அனுப்பினது அடையாளமாயிருந்தது. அது முற்றிலும் உண்மை. அந்த அடையாளத்தின் அர்த்தமென்ன-? உறுதியாயிற்றே-! 192 முதலில் செய்தியுடன் அவருடைய தீர்க்கதரிசி. ஒரு- ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலம்... அவர் தம்மை தீர்க்கதரிசியுடன் அடையாளம் கண்டு கொண்டார். பின்பு, ஒரு அடையாளத்தை அவர்களுக்கனுப்பி, அவர்கள் இரத்தத்தின் கீழ் இருக்க வேண்டுமென்று கட்டளையிட்டு, அவர்களுக்குப் பதிலாக வேறொன்றின் மரணத்தை ஏற்றுக் கொண்டதன் அறிகுறியாக அந்த இரத்தத்தின் கீழாகும்படி ஒரு அடையாளத்தை அனுப்பினார். அவர் உங்களை நோக்கிப் பார்த்தார் என்பதற்கு அந்த இரத்தமே அடையாளமாயிருந்தது. நீங்கள் செய்தியைக் கேட்டு அக்கினி ஸ்தம்பத்தின் மேல் விசுவாசம் வைத்து அவர் அளித்த ஈடை ஏற்றுக் கொள்கின்றீர்கள். பின்பு உங்களுக்காக பிரிந்து சென்ற அந்த ஜீவனின் இரசாயனமாகிய இரத்தத்தின் கீழ் நீங்கள் வருகின்றீர்கள். என்னே-! என்ன ஒரு பரிபூரணம், என்ன ஒரு பரிபூரணமான காரியமாய் உள்ளது, பாருங்கள், நீங்கள் இரத்தத்தின் கீழ் இருக்கிறீர்கள். 193 இப்பொழுது நீங்கள் ஆவியின் கீழ் இருக்கிறீர்கள், பரிசுத்த ஆவியின் கீழ் இருக்கிறீர்கள். புரிகிறதா-? பார்த்தீர்களா-? இந்நாளுக்குரிய செய்தியை நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள். பாருங்கள், நீங்கள் அந்த அந்த அந்த அந்த அந்த வல்லமையை அந்த அந்த அந்த அக்கினி ஸ்தம்பத்தை விசுவாசிக்கின்றீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், பாருங்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். 194 இப்பொழுது, கவனியுங்கள். அதை வெறுமனே விசுவாசித்தால் மாத்திரம் போதாது. இல்லை அது இருக்கும் இடத்தைச்சுற்றி வந்தால் மாத்திரம் போதாது. அப்படிச் செய்தால், அது உங்களை மோசமான நிலைக்குக் கொண்டு சென்று விடும். “நன்மை செய்வதற்கு அறிந்தும் ஒருவன் நன்மை செய்யாமற் போனால் அது பாவமாகும்." பாருங்கள், அந்த எல்லைக் கோட்டு விசுவாசிகள், இயேசுவும் அதேக் காரியத்தைக் கூறினார். 195 எபிரெயர் 6-ம் அதிகாரம், "ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம் ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனி வரும் உலகத்தின் பெலன்களை ருசி பார்த்தும் மறுதலித்துப் போனவர்கள் தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமாணப்படுத்துகிறபடியால், மனந்திரும்புவதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். அவர்கள் தங்களைப் பரிசுத்தமாக்கின அந்த... உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்றெண்ணி.." இரசாயணமே அங்கே பரிசுத்தப்படுத்துகிறது. அது அடையாளம் அல்ல, ஆனால் இரத்தம் இப்பொழுது அடையாளமல்ல. ஜீவன் தான் இப்பொழுது அடையாளம். 196 அது ஒரு மிருகமாயிருந்ததால், ஜீவன் அதில் இருக்க முடியாது. அதன் இரசாயனமே அப்பொழுது அடையாளமாயிருந்தது. அந்த இரத்தத்தை அவர்கள் கதவுகளில் பூசவேண்டும். ஆனால் இப்பொழுதோ பரிசுத்தாவி அடையாளமாய் இருக்கின்றது. இன்னும் சிறிது நேரத்தில் அதை நாம் நிரூபிக்கும்படிப் பார்க்க அதனண்டை வரப் போகிறோம், பாருங்கள், ஜீவன் தான் அடையாளமாக இருக்கின்றது. 197 உங்கள் ஜீவன் போய் விட்டது. நீங்கள் மரித்தவர்களாக எண்ணப் படுகின்றீர்கள். உங்கள் ஜீவன் மரித்து விட்டது. நீங்கள் கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குள் மறக்கப்பட்டு, பரிசுத்தாவியினால் முத்தரிக்கப்பட்டிருக்கின்றீர்கள். கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே இப்பொழுது உங்களுக்குள் இருக்கின்றது. கிறிஸ்து, வேதாகமம், வார்த்தை ஒன்றாய் உள்ளது. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” அப்படியானால் நீங்களும் தேவனுடைய வார்த்தையும், தேவனும், கிறிஸ்துவும் ஒன்றே. "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." பாருங்கள்-? 198 மோசேயின் உதடுகளில் அவர் தமது வல்லமையைப் போட்டு அவன் தமது வார்த்தையுடன் அங்கு சென்று பேசச் செய்தார், தவளைகள் தோன்றின. பேசினான், தவளைகள் அகன்றன. பேசினான், பேன்கள் தோன்றின; பேசினான், பேன்கள் போன்கள் அகன்றன. ஆமென்-! 199 ஆனால் அப்பொழுது எல்லா இஸ்ரவேலருக்குமே அடையாளம் தேவைப் பட்டது. எல்லா இஸ்ரவேலருக்கும் இந்த அடையாளம் தேவைப்பட்டது. அந்த அடையாளத்தை நான் காணும் போது, நான் உங்களைக் கடந்து போவேன்." ஓ, என்னே, என்னே-! என்னே ஒரு உறுதி-! 200 எகிப்திலிருந்து வெளி வந்த இஸ்ரவேல் ஜனங்கள், இன்று உள்ளதற்கு முன் அடையாளமாகத் திகழ்கின்றனர். எகிப்து ஸ்தாபன சபைக்கும், இஸ்ரவேலர் மணவாட்டிக்கும் எடுத்துக் காட்டாயிருக்கின்றனர். இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு வெளி வந்தது போன்று, மணவாட்டியும் ஸ்தாபன சபையிலிருந்து வெளியே வருகின்றனர். பாருங்கள்-? ஏனென்றால், வெளியே வரவேண்டுமென்றால் அவர்கள் ஏதாவதொன்றில் அதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும். எனவே அது வெளிவர வேண்டியதாயிருந்தது, அது ஒரு மாதிரியாயிருந்தது. இன்றைய ஸ்தாபன சபை, உலகம் பாவம் என்னும் எகிப்தில் இருந்து கொண்டு, உங்களுடைய அடையாளத்தைக் குறித்து சற்றேனும் கவலை கொள்வதில்லை. அதை அவர்கள் நம்புவதும் கிடையாது. ஆனால் இஸ்ரவேலரோ அந்த அடையாளத்தை நேசித்தனர். ஏனெனில் அது அவர்களுக்கு இரட்சிப்பாயிருந்தது. ஓ-! ஓ, அது நமது இருதயங்களை மகிழ்ச்சியடைய செய்ய வேண்டும், நம்முடைய இருதயங்கள்... அவ்வாறு செய்ய வேண்டுமே...ஓ-! 201 சபையே, அதை பயன்படுத்து-! இப்பொழுது அதைச் செய்யத் தவற வேண்டாம். நீங்கள் இப்பொழுது அப்படி செய்வீர்களா-? சூரியன் அஸ்தமிக்கும் முன்பே அதை பெற்றுக் கொள்ளுங்கள். இரவும் பகலும் அயராது பாடுபட்டு அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். வேறொரு வாய்ப்பை எதிர்பார்க்க வேண்டாம், பிள்ளைகளே, அது கிரியை செய்யாது. அது கிரியை செய்யாது. நீங்கள் அடையாளத்தைப் பெற்றிருக்க வேண்டும்-! 202 நீங்கள், “நான் விசுவாசிக்கிறேன். ஆம், நான் செய்கிறேன். நான், ஆம், நான் செய்தியை விசுவாசிக்கிறேன்," எனலாம். அது நல்லது. ஆனால், அது அது நல்லது தான். 203 ஆனால் நீங்கள் அடையாளத்தைப் பெற்றிருக்க வேண்டுமே-! பிரான்ஹாம் கூடாரமே, நீங்கள் இதைக் கேட்கின்றீர்களா-? அந்த அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டுமே-! அது இல்லையென்றால், உங்களுடைய விசுவாசம் அனைத்தும் வீணாகும். பாருங்கள்-? நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழலாம். தேவனுடைய வார்த்தை கூறுவதற்கு நீங்கள் செவி கொடுக்கலாம். நீங்கள் சபைக்குச் செல்லலாம். நீங்கள் சரியான முறையில் வாழ முற்படலாம் அதெல்லாம் அருமையானது தான். ஆனால் அது மாத்திரம் போதாது. "அந்த இரத்தத்தை தான் காணும்போது," அதுவே அடையாளமாயிருந்தது. இங்கு அது அடையாளமில்லை.. 204 காரணம் என்னவென்றால், அவர் உண்மையாகவே இரசாயணத்தைக் காண வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அதன் ஜீவன் போய் விட்டிருந்தது. அது... மிருகத்தில் இருந்து சென்று விட்டது. அது ஒரு மிருகமாயிருந்தது. 205 ஆனால் இப்பொழுதோ அவருடைய இரத்தத்தில் அவருடைய சொந்த ஜீவன் இருந்தது. அந்த இரசாயணம் மாத்திரமே ஒரு அறிகுறியாய் இல்லை பரிசுத்தம் ஆகுதலின் ஒரு அடையாளமாயுள்ளது. ஆனால் அவருடைய ஜீவன் மாத்திரமே அடையாளமாகத் திகழ்கின்றது. விருத்தசேதனமின்றி, அடையாளமின்றி, நீங்கள் உடன்படிக்கையில் பங்கு கொள்ளவில்லையென்று அர்த்தமாகின்றது. இவை அனைத்தும் ஒன்றாகவே கிரியை செய்கின்றது. நீங்கள் தேவனுடைய வார்த்தை யினால் விருத்தசேதனம் செய்யப்படும் போது மாத்திரமே, தேவன் உடைய வார்த்தையை நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள். தேவனுடைய வார்த்தையை நீங்கள் விசுவாசித்தால், அப்பொழுது அந்த அடையாளம் உங்கள் மேல் வர வேண்டும். ஏனெனில், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தாவியின் வரத்தைப் பெறுவீர்கள்" என்று அவர் சொல்லி இருக்கிறாரே-! அங்கு தான் காரியமே உள்ளது. ஓ, என்னே-! 206 கவனியுங்கள், தம்முடைய வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்து ஜனங்களுக்கான ஆயத்தம். அவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள். முதலில் அவர் ஒரு கூட்டம் ஜனத்தைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கென ஒரு தேசத்தை அவர் ஆயத்தம் செய்திருந்தார். அவர் ஒரு தேசத்தை அவர்களுக்காக ஆயத்தம் செய்து இருந்தார். இப்பொழுது அந்த தேசத்தை அடைவதற்காக அவர்களுக்கு அங்கு ஒரு ஆயத்தத்தை அனுப்பினார். வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குரிய ஜனங்களுக்காகவே அனுப்பினார். அது அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த தேசத்திற்கு முன் குறிக்கப்பட்டு இருந்தவர்களுக்கு மாத்திரமே ஆனதாயிருந்தது, மணவாட்டி நாள். அவர் அதை எவ்விதம் செய்தார்-? அவர் ஒரு தீர்க்கதரிசியை ஒரு செய்தியுடன் அனுப்பி, ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் அதை அடையாளம் கண்டு கொள்ளச் செய்தார். அது சரியென்று ஜனங்கள் உறுதியாய் நம்புவதற்கான ஒரு அடையாளத்தை அவர்களுக்கு அளித்தார். அது உண்மை, அது தான் அவர்களுடைய ஆறுதலாயிருந்தது. 207 எகிப்தை விட்டு வெளி வந்த இஸ்ரவேல் ஜனங்கள், ஒரு மாதிரியாய் இருந்தனர். இது ஸ்தாபனங்களை விட்டு வெளியே வரும் சபைக்கு ஒப்புமை யாய் உள்ளது. இப்பொழுது எல்லா ஸ்தாபனத்தவரும் அல்ல, நான் மணவாட்டியை பொருட்படுத்தி கூறுகிறேன். புரிகிறதா-? ஸ்தாபனங்களைச் சாராமல் தனியாயிருக்கும் சிலரும் கூட ஸ்தாபனங்களைவிட மிக மோசமாக உள்ளனர். 208 இடப்பட்டுள்ள அடையாளத்தைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அந்த அடையாளம் தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றுடனும் இணங்குகிறது. பாருங்கள்-? அது நிச்சயம் இணங்க வேண்டும், ஏனெனில் அதுவே வார்த்தை யாய் உள்ளது. அது வார்த்தையில் இருந்த ஜீவன். இயேசு, "என்னுடைய வசனங்கள் ஆவிக்குரியதாய் இருக்கின்றன. அவைகள் ஜீவனாயும் இருக்கின்றன" என்றார். புரிகிறதா-? 209 இஸ்ரவேலரின் மத்தியில் மோசே மகத்தான அடையாளங்களுடன் தன் ஊழியத்தை ஆரம்பித்தபோது, நீங்கள் பாருங்கள், அவர்கள் விரைவில் எகிப்தின் எல்லா பாகங்களிலிருந்தும் புறப்பட்டு வந்து, தங்கள் சொந்த நாடாகிய கோசேன் நாட்டை அடைந்தனர். ஏனெனில், ஏதோ ஒன்று நிகழவிருக்கின்றது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஓ, என்னே ஒரு முன்னடையாளம்-! ஓ, அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர், தூரதேசத்திலிருந்து அவர்கள் வருகின்றனர் (அது சரி, நீங்கள் அந்தப் பாடலை கேட்டிருக்கிறீர்கள்) இராஜாவுடன் அவருடைய விருந்தாளி களாக விருந்துண்ண, இந்த யாத்தீரீகர்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்-! திவ்விய அன்பினாலே பிரகாசிக்கும் அவருடைய பரிசுத்த முகத்தைக் காணவும்; ஆசீர்வதிக்கப்பட்ட அவருடைய கிருபையில் பங்கு கொள்ளவும், அவர் கீரிடத்தில் இரத்தினங்களாக ஜொலிக்கவுமே ஓ, இயேசு சீக்கிரம் வருகின்றார், நமது சோதனைகள் அப்பொழுது ஓய்ந்துபோம். பாவத்தினின்று விடுதலை ஆக்கப்பட்டவர்களுக்காக ஓ, இந்த நொடியில் இயேசு வருவாரானால் எப்படி இருக்கும்-? ஓ, உங்களுக்கு அது மகிழ்ச்சியைக் கொண்டு வருமா-? அல்லது துக்கத்தையும், மனக்கசப்பையும் கொண்டு வருமா-? நம் கர்த்தர் மகிமையில் வரும் போது அவரை நாம் ஆகாயத்தில் சந்திப்போம். 210 அடையாளத்தை பகிரங்கமாகக் காண்பித்தல்-! "கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்." நிச்சயமாக-! நாம் அந்த நாட்களில் இருக்கிறோம். 211 ஜனங்கள் கோசேன் நாட்டில் ஒன்று கூடினர். அவர்கள் ஆயத்தப்பட்டனர். ஏதோ ஒன்று நிகழவிருக்கின்றது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள். அந்த விதமாய் இருந்தனர். 212 நீங்கள் வாத்துக்களை எடுத்துக் கொள்வீர்களானால், ஒன்று கூடும் சமயம் வரும் போது, வாத்துக்கள் எல்லாமே ஒன்றோடொன்று சேர்ந்து கொள்ளும். அது போன்று தேனீக்களும் கூட ஏதோ ஒரு உணர்வினால் ஒன்று கூடுகின்றன. அவ்வாறே பரிசுத்த ஆவியும் ஜனங்களை இழுத்து ஒன்று சேர்க்கின்றதே 213 ஓ, தேவனுடைய கோபாக்கினை விழும் சமயம் நெருங்கும் போது, நோவாவின் பேழையை, எல்லாம் ஜோடி ஜோடியாக அடைந்தன. வாத்துக்கள், ஆணும் பெண்ணுமாக; கூஸ் வாத்துக்கள் (Goose), ஆணும் பெண்ணுமாக; குதிரைகள், ஆணும் பெண்ணுமாக; ஏதோ ஒன்று அவைகளை இழுத்தது முன்குறிக்கப்பட்டவைகள். மற்றவைகளோ அழிந்து போயின. ஓ, மற்றவர் எல்லாரும் அழிந்து போயினர்-! உள்ளே செல்ல வேண்டுமென்ற உணர்வு கொண்டிருந்தவர் அனைவரும், அவர்களுக்கு பேழையானது ஆயத்தமாக்கப்பட்டு உள்ளது என்பதை அறிந்திருந்தனர். மழை வரப் போகின்றது என்பதன் ஒரு அடையாளமாக அந்தப் பேழை அமைந்திருந்தது. மழை வரப்போவதை அவர்கள் அறிந்திருந்தனர். மற்றவர் வேறெந்த அடையாளத்தைக் காண்பித்தாலும், மற்றவரின் கருத்து எதுவாயிருந்த போதிலும் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் அதை அறிந்திருந்தனர். 214 அவர்களுக்குள்ளிருந்த ஏதோ ஒன்று, "விரைவில் அதற்குள் சென்றுவிடு-! அதற்குள் நுழைந்து விடு-! ஏனென்றால் அது ஒன்றே பாதுகாப்பான ஸ்தலமாய் இருக்கப் போகிறது," என்றது. ஏனெனில் தேவன் ஒரு தீர்க்கதரிசியை ஆயத்தப்படுத்தினார். அவர் பேழையை ஒரு அடையாளமாக அளித்திருந்தார். அதற்குள் செல், மழை பெய்யப் போகிறது என்றார். மிருகங்கள் அங்கு ஜோடியாக உள்ளே சென்றன, எல்லா மிருகங்களும் ஜோடியாக பேழைக்குள் சென்றன. ஏனென்றால் அவைகள் பேழைக்குள் இருக்க வேண்டியதாயிருந்தது. மற்றவர் என்ன கூறினாலும் கவலைப்படவில்லை 215 அந்தப் பேழையின் வெளிப்புறத்தில் இருந்த யாவும் அழிந்து போயின. அவ்வாறே இரத்தமாகிய அடையாளத்திற்குப் புறம்பே இருந்த அனைவரும் ஒவ்வொருவரும் அழிந்து போயினர். அது போன்று, பரிசுத்த ஆவியாகிய அடையாளத்திற்குப் புறம்பே உள்ள ஒவ்வொருவரும் அழிந்து போவார்கள். 216 அவர்கள் எவ்வளவு தான் நல்லவராக இருந்த போதிலும், சபையின் அங்கத்தினராய் இருந்த போதிலும் அது ஒரு பொருட்டல்ல. நோவாவின் காலத்திலும் ஏராளமானவர் இருந்தனர். மோசேயின் காலத்திலும் ஏராளமானோர் இருந்தனர். ஆனால் இரத்தத்தை அடையாளமாகப் பூசத் தவறின ஒவ்வொரு மனிதனும் மாண்டு போனான். பேழைக்குள் பிரவேசிக்க தவறினவர்கள் மாண்டு போயினர். அவ்வாறே கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்காத அனைவரும், ஏனென்றால் அவரே பேழையாய் இருக்கிறாரே-! 217 "ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ண ப்பட்டு...'' என்று I-கொரிந்தியர் 12-ம் அதிகாரம் உரைத்து உள்ளது. காணக்கூடாத சபையல்ல; காணக் கூடாத ஸ்தாபனங்களல்ல; காணக் கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரம். ஆவி என்பது ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் உள்ளது, எனவே நாம் "ஒரே ஆவியால், அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு இருக்கிறோம். அப்பொழுது, அந்த அடையாளம் வாசலின் மேல் இருக்கிறது என்று அர்த்தம். ஏனெனில் அப்பொழுது நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள். அவரே உங்களுக்காக பலியாக செலுத்தப்பட்டார். அவர் நியாயத் தீர்ப்படைந்தார். தேவன் அதைக் காணும் போது, அவரால் வேறொன்றும் செய்ய முடியாது. அந்நிலையில் நீங்கள் பாதுக்காப்பான ஸ்தலத்தில் இருக்கிறீர்கள். ஏனெனில் தேவனும் கிறிஸ்துவும் ஒரே நபர் தான். பரிசுத்த ஆவியானவர் மாம்சமாகி நமது மத்தியில் வாசம் செய்தார். தேவன் தம்மையும் தமது பிள்ளைகளாகிய உங்களையும் அந்த சரீரத்தில் கொண்டிருக்கிறார். அங்கு தான் காரியமே உள்ளது. ஒரு இரசாயனம் அல்ல, பரிசுத்த ஆவியையே-! "நான் உங்களைக் கடந்து போவேன்." 218 எகிப்தின் எல்லா பாகங்களிலும் உள்ள இஸ்ரவேல் ஜனங்கள் அந்த அடையாளத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரே இடத்தில் கூடி வந்தனர். 219 அவர்கள் மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள், பெந்தெகொஸ்தேயினர், மற்றோர் இவர்கள் மத்தியிலிருந்து புறப்பட்டு வந்து அடையாளத்தின் கீழ் வருகின்றனர். அன்று சம்பவித்தது போலவே, இன்றும் சரியாக சம்பவிக்கின்றது. 220 ஒரு அக்கினி ஸ்தம்பமானது அங்கே பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு இருந்த போது அதைக் குறித்து ஒருவர் வேறொருவரிடம் கூறினார். அந்த வேறொருவர் அதைக் குறித்து மற்றொருவரிடம் கூறினார். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் யாவரும் ஒன்று கூடி வரத் துவங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் வரத் துவங்கி, அவர்கள் தேவனுடைய அடையாளத்தைக் கண்டனர். அவர்கள் “நியாயத்தீர்ப்பு சமீபித்துவிட்டது” என்று கூறினர். 221 அப்பொழுது தீர்க்கதரிசி அவர்களிடம், "தேவன் பேசினதை நான் கேட்டேன். ஒரு அடையாளம் உண்டாகி இருக்கும், நீங்கள் வாசலின் மேல் இரத்தத்தை பூச வேண்டும். நீங்கள் ஆட்டுக்குட்டியைக் கொன்று, அதன் இரத்தத்தை வாசலில் பூசுங்கள். அது அடையாளமாயிருக்கும். ஏனெனில், மரணம் தாக்க இருக்கிறது" என்றான். 222 அவருடைய ஊழியக்காரன் என்னும் முறையில் இதை நான் உங்களிடம் கூறட்டும். அடையாளம் வாசலின் மேல் இல்லாவிட்டால், ஆவிக்குரிய மரணம் சம்பவிக்கப் போகிறது. ஸ்தாபன சபைகள் அனைத்தும் உலக சபை ஆலோசனை சங்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லோரும் கத்தோலிக்க மார்க்கத்திற்கு திரும்பச் சென்று கொண்டு இருக்கிறார்கள். உண்மையான மறுபடியும் பிறந்தவர்கள் மாத்திரமே அதில் சேராமல் வெளியே தரித்திருக்கப் போகிறார்கள். 223 நினைவிருக்கட்டும், பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள் அதற்கு வெளியே இருக்கும் என்று எண்ண வேண்டாம். அவர்கள் ஏற்கனவே அதில் சேர்ந்து விட்டனர். ஆகவே, அவர்கள் மரித்து விட்டனர் என்பதை காண்பிக்கின்றன. அவர்கள் அழிந்து போயினர். அவர்கள் சத்தியத்தை தியாகம் செய்து விட்டனர். அதற்குள் திரும்பவும் சென்று விட்டனர். அவரை வாசலுக்கு வெளியே தள்ளி விட்டனர். ஆனால் அவரோ அடையாளத்திற்காகவே நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். ஏனெனில் அவர்கள் சார்ந்திருக்கின்ற ஒன்றே ஒன்று அந்நிய பாஷை பேசுதலாய் இருந்தது. 224 அந்நிய பாஷை பேசுதலில் நீங்கள் சார்ந்திருக்க வேண்டாம். வேறெதன் பேரிலும் நீங்கள் சார்ந்திராதேயுங்கள்; அந்த அடையாளம் தாமே இயேசு கிறிஸ்துவின் சொந்த ஜீவன் உங்களுக்குள் இருக்கட்டும். விருத்தசேதனம், அது இது என்பதல்ல. ஆனால் நீங்களும் கிறிஸ்துவும் ஒன்றாகும் வரைக்கும் உங்களை முழுவதுமாக விருத்தசேதனம் செய்யுங்கள். அப்பொழுது கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார், அவருடைய ஜீவன் உங்கள் மூலம் ஜீவிக்கிறது. 225 இப்பொழுது, எகிப்தின் எல்லா பாகங்களிலிருந்தும், இப்பொழுது, பாருங்கள். அவர்கள் என்ன செய்தனர் என்று நாம் பார்க்கும் போது, நேரம் நெருங்குவதை நாம் இப்பொழுது காணும் போது, நாமும் அதேக் காரியத்தை செய்ய வேண்டும் என்ற கட்டளை பெற்றிருக்கின்றோம். அது உங்களுக்குத் தெரியுமா-? தீர்க்கதரிசி என்ன கூறினான் என்று கவனியுங்கள். 226 அதை நாம் இப்பொழுது எபிரெயர் 10-ம் அதிகாரத்திலிருந்து வாசிக்கப் போகின்றோம். என்னுடன் நீங்கள் வாசிக்க விரும்பினால், நாம் தொடர்ந்து பிரசங்கிக்கும் முன்னதாக, ஓரிரண்டு வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். எபிரெயர் 10-ம் அதிகாரம், எபிரெயர் 10ம் அதிகாரத்தில் 26-ம் வசனம் முதல் நாம் வாசிப்போம், இல்லை, நான்... நாம் பார்ப்போம். ஆம், ஆம், ஐயா, எபிரெயர் 10-ம் அதிகரம் 26-ம் வசனம் பார்ப்போம். "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவம் செய்கிறவர்களாயிருந்தால்.... 227 நான் சரியான வசனத்தைப் படிக்கிறேனா என்று நாம் பார்ப்போமா-? ஆம். சரியான வசனம் தான். ஆம். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவம்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல் நியாயத் தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும் விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். இங்கே கவனித்துப் பாருங்கள்-! மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனை காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன், (அந்த இரத்தத்திலிருந்து வருகிறது) எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாய் இருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள். 228 ஊழியக்காரனே, அங்கத்தினரே, நல்லவரே, நல்லொழுக்கமுள்ளவரே, நீ யாராயிருந்தாலும், புகை பிடிக்கும் பழக்கத்தை தேவன் உன்னிலிருந்து எடுத்துப் போட்டார் என்பதை அறிந்திருக்கிறாய். ஸ்திரீகளே, அரைகால் சட்டை அணியும் பழக்கத்தையும், குட்டையான தலைமுடி வைத்திருக்கும் பழக்கத்தையும், மற்றெல்லா...தீய பழக்கங்களையும் தேவன் உங்களிலிருந்து எடுத்துப் போட்டார் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க நீங்கள் திரும்பிச் சென்று, உங்களைப் பரிசுத்தம் செய்து, உங்களை இம்மட்டும் கொண்டு வந்த உடன் படிக்கையின் இரத்தத்தை நீங்கள் அசுத்தமென்று எண்ணினால் 229 அந்த வேவுகாரரைப் போன்று, அவர்கள் எல்லை வரை வந்து கானான் தேசத்தைக் கண்டு, "சரி, அது அங்குள்ளது என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இடையூறுகள் அதிகம் இருக்கின்றனவே-! நாங்கள் அவர்களுக்கு முன்னால் வெட்டுக்கிளிகளைப் போல் அல்லவா இருக்கின்றோம்," என்றனர். அவர்கள் வனாந்திரத்தில் அழிந்து போனார்கள். எல்லைக் கோட்டு விசுவாசிகள். 230 அது வரை நின்று விட்டு, "நான் செய்தியை விசுவாசிக்கிறேன்," என்று கூறிவிடாதீர்கள். நீங்கள் செய்தியாளனுக்குக் கீழ்ப்படியுங்கள்-! கிறிஸ்துவுக்குள் வாருங்கள்-! நீங்களோ “சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்தையும் நான் விசுவாசிக்கிறேன்," என்று ஒருக்கால் கூறலாம். அது நல்லது தான். செய்தியை படிக்க முடிந்தால் மாத்திரமே போதாது. 231 நீங்கள் அடையாளத்தைப் பெற்று கொள்ள வேண்டுமானால், செய்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதை உங்கள் இருதயங்களில் ஏற்றுக் கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஜீவன் உங்களிலும் இருக்க வேண்டும், "நான் அதைக் காணும்போது, நான் உங்களைக் கடந்து போவேன்." 232 முடிவுகால பெரிதான அடையாளங்களை இன்றைக்கு பூமியில் நாம் காணும் போது, அதை உண்மையென்று நாம் அறிந்துகொள்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். நான் உங்களிடம் கொடுத்து வரும் இந்த செய்திக்காக அநேகக் காலம் நான் காத்திருக்க வேண்டியதாய் இருந்தது. பாருங்கள்-? நீங்கள் கடைசிக் கால அடையாளங்களைக் கண்டிருக்கிறீர்கள். நான் அதை உங்களுக்கு பிரசங்கித்து, அதைக் கிறிஸ்து கூறின ஒவ்வொரு காரியத்தைக் கொண்டு உங்களுக்கு காண்பித்திருக்கிறேன். அது சரி தானே-? [சபையார், "ஆமென்" என்கின்றனர்-ஆசி.) அதை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா-? ["ஆமென்") நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். அவைகளில் நிறைவேற்றப்படாமல் விடப்பட்டு உள்ளதாக நான் ஒன்றும் காணவில்லை. 233 நீங்கள், "மிருகத்தின் முத்திரையைக் குறித்து என்ன-?" என்று ஒருக்கால் கேட்கலாம். பரிசுத்தாவியைப் புறக்கணித்தவர்கள் ஏற்கனவே மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொண்டு விட்டனர். தண்டனை பின்பு வரும். புரிகிறதா-? 234 இஸ்ரவேல் நாட்டில், யூபிலி வருடத்தின் போது, எக்காளம் ஊதப்பட்டது. அப்பொழுது ஒவ்வொரு மனிதனும்... கிறிஸ்து அதைப் படித்தார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா-? அவர் அதில், ஒரு பாதியை மாத்திரம் படித்தார். ஏனெனில் அதில் பாதி மட்டும் அந்த நேரத்திற்குரியதாயிருந்தது. புரிகிறதா-? ''..இருதயம் நறுங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும்... கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப் படுத்தவும் என்னை அனுப்பினார்." மற்றொரு பாகத்தை அவர் ஒரு போதும்... அவர் ஒரு போதும் படிக்கவில்லை. அவர் புஸ்தகத்தைச் சுருட்டி வைத்து விட்டார், ஏனென்றால் அது இந்நாளுக்கானதாய் இருக்கிறது. புரிகிறதா-? அவருடைய நாளின் பாகமாயிருந்த அந்த பாகத்தை மாத்திரமே, அவர் படித்தார். 235 இன்று அவர் அதைத் தான் செய்யப் போகிறார். அதைத்தான் அவர் தமது அபிஷேகிக்கப்பட்ட ஆவியின் மூலம் இன்று சபைக்கு உரைக்கிறார். இதுவே நேரம். இதுவே சமயம். ஜனங்களே, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 236 என்னே-! நாம் மகத்தான் முடிவின் நேரங்களையும், சிகப்பு விளக்குகள், எங்கும் பிரகாசிப்பதையும் காண்கிறோம். இயற்கை அந்த சிவப்பு வெளிச்சத்தை விட்டு விட்டுப் பிரகாசிக்கச் செய்கின்றது. சமயம் நெருங்கிவிட்டது. அந்த ஒளி ஸ்தாபன சபையின் மேல் விழுந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அவள் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டு விட்டாள். "காலம் சமீபித்துவிட்டது. அவள் உலகப் பிரகாரமாக இருக்கின்றாள், நாம் அதை ஆகாயங்களிலும், சமுத்திரத்தின் மீதும், தேசங்களின் மீதும், மற்ற எல்லா இடங்களிலும் காண்கிறோம். சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் நாம் காண்கிறோம். அடையாளங்கள்-! 237 பரிசுத்த ஆவியின் முடிவு கால அடையாளங்கள் ஜனங்களின் மீது திரும்பவுமாக வந்திருப்பதை நாம் காண்கிறோம். லோத்தின் நாட்களில் நடந்தது போல, அவ்வமயம் பரிசுத்த ஆவியானவர் எவ்விதம் மானிட சரீரத்தின் மூலம் கிரியை செய்தார்-! அது மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். இக்காலத்தில் தேவன் தமது மணவாட்டியின் மூலம் தம்மை, தம்மையே வெளிப்படுத்தி அதே அடையாளத்தைக் காண்பிக்கிறார். இந்தக் கடைசி நாட்களில் அது போன்றே நிகழும் என்று இயேசு கூறினார். நாம் அதைக் காண்கிறோம். அதே அக்கினி ஸ்தம்பத்தை நாம் கண்கூடாகக் காண்கிறோம். விஞ்ஞானம் கூட அதைக் குறித்த புகைப்படங்களை எடுத்துள்ளது. முடிவு கால அடையாளங்கள் சமீபித்து விட்டதை நாம் காண்கிறோம். அவை இங்கு உள்ளன என்று நாம் அறிந்து இருக்கிறோம். 238 ஆகவே பிறகு, இதைக் காண்கையில், நீங்கள் என்னை விசுவாசிப்பிர் களானால்-! நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை என்றால்; அந்த அடையாளங்களை ஆவது விசுவாசியுங்கள், வார்த்தையை விசுவாசியுங்கள், ஏனெனில் நான் உங்களிடம் என்னக் கூறிக் கொண்டு இருக்கின்றேனோ, அதைக் குறித்து தான் அவைகளும் பேசுகின்றன. நான் உங்களிடம் சத்தியத்தை உரைக்காமல் போனால், இந்த அடையாளங்கள் மாறுத்தரம் தராது. தேவன் ஒரு பொய்யை ஒரு போதும் பேசினதே இல்லை. தேவன் எப்பொழுதும் சத்தியத்தையே பேசுகிறார். நான் உங்களிடம் சத்தியத்தை எடுத்துரைக்கிறேன் என்று இந்த தேவனுடைய வார்த்தைகள் சாட்சி பகருகின்றன. நான் பிரசங்கிக்கும் என் செய்தியைக் குறித்து சாட்சி கொடுப்பவை அவைகளே. அன்று ஆற்றங் கரையிலே பிரதியட்சமாகி, "உன்னுடைய செய்தி கிறிஸ்து வின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாயிருக்கும்" என்றுரைத்த அந்த தேவ தூதன் மாத்திரமல்ல; கிரியைகளும் கூட சாட்சி பகருகின்றன. தேவதூதன் உரைத்தது உண்மையென்று உங்களால் விசுவாசிக்க முடியவில்லையென்றால், கிரியைகளையாவது விசுவாசியுங்கள், ஏனெனில் கடைசி காலத்தில் இந்தக் காரியங்கள் சம்பவிக்கும் என்று வேதம் உரைத்துள்ளது. சாட்சி கொடுப்பவை அவைகளே. என் வார்த்தைகளைக் காட்டிலும், அல்லது மற்றவர்களின் வார்த்தைகளைக் காட்டிலும் அதிக சத்தமாக பேசுபவை அவைகளே. அது அவருடைய வார்த்தை. இக்காலத்தைக் குறித்து அவை சாட்சி பகருகின்றன. 239 இந்த மகத்தான பயங்கரமான முடிவு கால அடையாளங்கள் ஜனங்களின் மீதும், இக்கால அடையாளங்கள் பூமியின் மேலும் இருப்பதை நாம் காண்கிறோம். தேசங்களிடையே சஞ்சலங்களை நாம் காண்கிறோம். 240 இஸ்ரவேல் தன்னுடைய தாய் நாட்டில் இருப்பதை நாம் காண்கிறோம். ஆறுமுனை கொண்ட தாவீதின் நட்சத்திரம் உலகிலேயே மிகவும் பழமையான அந்த கொடி அங்கு பறந்து கொண்டிருக்கிறது. இஸ்ரவேல் ஒரு நாடாகிவிட்டது. அவளுக்கு ஒரு அரசாங்கம் இருக்கின்றது. அவளுக்கு சொந்த ஜனங்கள் இருக்கின்றனர். அவள் 'நாடுகளின் சங்கத்தில்' (League of Nations) உறுப்பினராக இருக்கிறாள். அவள், அவள் இந்த எல்லாக் காரியங்களையும் உடையவளாய் இருக்கிறாள். அவள் ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினராக இருக்கிறாள். அவளுக்கு சொந்த நாணயம், மற்றெல்லாம் இருக்கிறது. இயேசு, "இவைகள் எல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்த சந்ததி ஒழிந்து போகாது” என்று கூறினார். இஸ்ரவேல் ஒரு நாடாக ஆன அந்த இரவே, கர்த்தருடைய தூதன் அங்கு எனக்குப் பிரத்தியட்சமானார் என்பது நினைவிருக்கட்டும். அது உண்மை. நாமனைவரும் இக்கட்டத்தை அடைந்திருக்கிறோம். 241 ஒவ்வொரு காரியமும் சரியாக சத்தியத்தையே சுட்டிக் காண்பித்துள்ளது. நான் உங்களிடம் பொய் சொல்லியிருக்கவில்லை. உங்களிடம் நான் உண்மையே கூறியிருக்கிறேன். நான் உண்மையே உங்களிடம் கூறினேன் என்று தேவனும் சாட்சி பகர்ந்துள்ளார். இப்பொழுது, நான் உங்கள் சகோதரன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் ஒரு மனிதன், பாருங்கள். உங்களைப் போல நானும் ஒரு சாதாரண மனிதனே. ஆனால் யாராவது ஒருவர் இச்செய்தியைக் கொண்டு வர வேண்டும்; யாராவது ஒருவர் அதை எடுத்து உரைக்க வேண்டும். இது என்னுடைய தெரிந்து கொள்ளுதல் அல்ல; அவருடைய தெரிந்து கொள்ளுதல். நான் உங்களுக்கு சத்தியத்தை எடுத்து உரைத்தேன். அது உண்மை என்று அவர் சாட்சி பகர்ந்துள்ளார். [சபையார் ஆமென்” என்கின்றனர்.- ஆசி.) 242 இந்தக் காரியங்களை இன்று நாம் புவியில் காண்கையில் ஓ, ஜனங்களே, இதுவே கடைசி மணி நேரமாய் உள்ளது. அந்த அடையாளத்தை கூடுமான அளவிற்கு உங்கள் மேல் விரைவில் பெற்றுக் கொள்ளுங்கள்; அல்லது நீங்கள் அந்த அடையாளத்திற்குள் புகுந்து கொள்ளுங்கள். அந்த அடையாளத்துக்குள் புகுந்து கொள்ளுங்கள். நாம் அந்த மகத்தான முடிவின் அடையாளத்தைக் காண்கையில், காலம் சமீபித்து விட்டது, “காலம் சமீபித்துவிட்டது" என்றே அது நம்மை எச்சரித்துக் கொண்டிருக்கிறது. 243 ஓ, இதை பயபக்தியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் ஒருவரிலொருவர் அன்பு கூர வேண்டும். ஓ, என்னே-! நாம் அன்பில் அவ்வாறு நிலைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு விரோதமாக ஒருவர் ஒரு போதும் தீமையாகப் பேச வேண்டாம். யாராவது ஒருவர் தவறு செய்தால், உடனே அவருக்காக ஜெபம் செய்யுங்கள். நாம் இவ்விஷயத்தில் தேவனுடன் ஒன்றுபட வேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம் சகோதரரும் சகோதரிகளுமாய் இருக்கிறோம். ஓ, தேவ பக்தியாய் ஜீவியுங்கள், தேவனுடைய குமாரத்திகளைப் போல ஜீவியுங்கள், தேவனுடைய குமாரர்களைப் போல ஜீவியுங்கள். இனிமையாகவும், தயவாயும், தாழ்மையாகவும் ஜீவியுங்கள். 244 உங்கள் சிந்தையில், உங்களுடைய எண்ணத்தில் எவ்வித பொல்லாங்கும் நுழைய வேண்டாம். அதை அகற்றி விடுங்கள். அது கதவைத் தட்டினால், துரத்திவிடுங்கள். உங்கள் அடையாளத்தைக் காண்பியுங்கள். "நான் இரத்தத்தின் கீழ் இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே நடந்து செல்லுங்கள். 245 நினைவிருக்கட்டும், பெண்களில் சிலர் உங்களை அணுகி, "ஹே, கெர்ட்டி, லில்லி, நீங்களெல்லாரும் வாருங்கள். நாங்கள் இன்றிரவு விருந்திற்குச் செல்லப் போகிறோம்” என்று கூறுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். 246 "-ஹூம், நான் இரத்தத்தின் கீழ் இருக்கிறேன். நான் அடையாளத்தின் கீழ் இருப்பதால், நான் இங்கேயே தங்கியிருப்பேன். என் நேசம் என் சிருஷ்டிகரின் பேரில் உள்ளது. இன்றிரவு மரணமானது தேசத்தில் இருக்கின்றது" என்று கூறி விடுங்கள். 247 இன்று மரணம் தேசத்தில் இருக்கின்றது. நியாயத்தீர்ப்பு காத்துக் கொண்டு இருக்கிறது. அதுவே நிலுவையில் இருந்துகொண்டிருக்கிறது. அணுகுண்டுகளும், ஹைட்ரஜன் குண்டுகளும், எல்லாவிதமான அழிவும் தேசங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன. 248 தேவனும் தமது சபையை அழைத்து, எல்லாவற்றையும் அவளுக்குக் காண்பித்துக் கொண்டு வருகிறார். நாம் ஆட்டுக்குட்டியானவரை சில காலம் நம்மிடம் வைத்துக் கொண்டு, அவர் என்ன செய்கிறார் என்றும், அவருடைய தன்மை என்ன என்றும் நாம் கவனித்துக் கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுதுதோ அந்த அடையாளம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அது நிச்சயம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அந்தக் காரியம் மாத்திரமே உள்ளது. “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், அவன் தேவன் உடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்," நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர வேண்டும். விசுவாசிகள் தங்களை உலகத்தினின்று வேறு பிரித்துக் கொள்ள வேண்டும். இதை முக்கியமற்றதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 249 இப்பொழுது, இதை ஒலிநாடாவில் கேட்டுக் கொண்டிருக்கிற ஜனங்களே, பெண்களே, ஆண்களே, நீங்கள் ஒரு நிமிடம் செவி கொடுங்கள். நீங்கள் எப்பொழுதாவது என்னை விசுவாசிக்க வேண்டுமென்று விரும்பினால், நீங்கள் இப்பொழுதே என்னை விசுவாசியுங்கள். 250 நீங்கள் ஒருவருக்கொருவர் வம்பு பண்ணுவதை விட்டு விடுவதற்கான நேரம் இதுவே ஆகும். வேதாகமத்தின் செய்தியை விசுவாசியுங்கள்-! இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்-! ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து, ஒருவரை ஓருவர் கனம் பண்ணுங்கள். மனிதரே, உங்கள் மனைவிகளுக்கு மரியாதை செலுத்துங்கள். உங்கள் வீட்டிலுள்ளவர்களையும் மதியுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஒன்று சேர்த்து ஒற்றுமைப்படுத்துங்கள். ஏனெனில் ஆட்டுக்குட்டி முழு குடும்பத்திற்குமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நபருக்காக மாத்திரமல்ல. முழு குடும்பமும் கொண்டு வரப்பட வேண்டும். ஒவ்வொன்றும் கொண்டு வரப்பட வேண்டும். நாம் ஒருவரோடு ஒருவர் அன்பு கூர வேண்டும். விசுவாசிகள் உலகினின்று தங்களை வேறு பிரித்துக் கொள்ள வேண்டும். 251 கவனியுங்கள், செய்தியைக்குறித்து பேசுவதற்காக அவர்கள் ஒன்று கூட வில்லை. அவர்கள் இரத்தத்தை, அடையாளத்தை பூசுவதற்காக ஒன்று கூடினர். 152 அதைத் தான் நீங்களும் செய்ய வேண்டும். போதகர் நெவில் அவர்களே, சுபையோரே தர்மகர்த்தாக்களே, மூப்பர்களே, சகோதரர்களே, உலகத்தின் மதிகேட்டையும், மற்றெல்லாவற்றையும் நாம் தள்ளிவிட வேண்டிய சமயம் வந்து விட்டது. நாம் அதை போதிய அளவில் கண்டிருக்கிறோம் என்பது உறுதி. நிச்சயமாகவே இப்பொழுது அடையாளம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அடையாளம் இல்லாவிடில் நீங்கள் அழிந்து போகப் போகிறீர்கள். நீங்கள் அழியத் தான் வேண்டும், அது ஒன்று மாத்திரமே நடக்கும். 253 ஓ, நீங்கள், “அதை நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுவதற்காக ஒன்றுகூடி வரவில்லை. அடையாளத்தின் கீழ் வாருங்கள்; அதற்குள் நுழைந்து கொள்ளுங்கள். (ஒரு வானொவி ஒலிபரப்பு சிற்றலை சத்தம் கேட்கின்றது-ஆசி.] அதை எப்படிச் செய்வது-? ஒரே ஆவியினாலே நாம் இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்கு உள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு இருக்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். புரிகிறதா-? அந்த அடையாளத்தின் கீழிராமல் புறம்பேயுள்ளவர்களுக்கு அவர் பொறுப்பல்ல. 254 யார் அங்கு பேசினது-? (யாரோ ஒருவர், “அது வானொலி சிற்றலை வரிசை சகோ.பிரன்ஹாம்' என்று கூறுகிறார்-ஆசி.] மேலே சிற்றலையில் இருந்து வருகிறதா-? ["ஓலிப் பெருக்கியில் இருந்து வந்தது"] ஒலிப்பெருக்கியின் மூலமாகவா. அவர்கள் அங்கே அதை வைத்துள்ளார்களா-? யாரோ பேசுவதைக் கேட்டேன். ("சகோ.பிரன்ஹாம், அங்கிருந்து வந்த ஒரு சிற்றலை வரிசை ஒலிபரப்பு என்று நான் நம்புகிறேன்."] சிற்றலை வரிசை ஓலிபரப்பா, ஆம், ஓ, அவர்கள் அதை இணைத்துள்ளார்கள். நான் நினைக்கிறேன். ஓ கார்களுக்காகவா-? என்னை மன்னியுங்கள், யாரோ ஒருவர் ஏதோ ஒன்றைக் கூறினார் என்று எனக்குத் தெரியும். என்னிடம் ஏதோ ஒன்றைக் கூற ஒருவர் விரும்பினார் என்று நான் நினைத்தேன், அவர்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் பாருங்கள், அதனால் தான் நான் - நான் செய்ததைக் கூறினேன், நீங்கள் சுற்றிலும் பார்த்ததை நான் கண்டேன். ஒரு சத்தத்தை நான் கேட்டேன். யாரோ ஒருவர் ஒன்றைக் கூற எழுந்தார் என்று நினைத்தேன், அது என்னவென்று எனக்குத் தெரியாது. இப்பொழுது உமக்கு நன்றி. ஆனால், நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அதன் கீழ் வாருங்கள், 255 இஸ்ரவேலர், “நாம் எல்லாரும் இன்றைக்கு கோசேன் நாட்டுக்குச் செல்வோம். நாம் கோசேன் நாட்டிற்கு செல்வோம். நீங்கள் உங்களுடைய ஒட்டகத்தின் மேல் ஏறி வாருங்கள், நாங்கள் காளை-வண்டி கட்டிக் கொள்கிறோம். நாங்கள் ஜோன்ஸ் குடும்பத்தினரையும், கோல்ட் பெர்க் குடும்பத்தினரையும் ஏற்றிக் கொண்டு நாங்கள் எல்லோருமாக கோசேன் நாட்டுக்கு வருகிறோம். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? மோசே இன்றைக்குப் பேசப்போகிறார்." என்று கூறுவதற்காக ஒன்று கூடவில்லை. அதற்காக அல்ல. இல்லை-ஐயா, சகோதரனே. இரத்தத்தின் கீழ் வருவதற் காகவே அவர்கள் ஒன்று சேர்ந்தனர். ஆம், உண்மையாகவே. அதைக் குறித்து பேசுவதற்கல்ல. அதற்குள் நுழைந்து கொள்ளவே-! 256 அவர்களில் ஒருவர், “திரு. கோல்ட் பெர்க் அவர்களே, இது சத்தியம் என்று உண்மையாகவே எனக்குத் தெரியும்." என்று கூறியிருக்கலாம். 257 "ஆம், சகோதரனே, இது சத்தியமென்று நான் விசுவாசிக்கிறேன். அது சத்தியம் என்று நான் அறிவேன்” என்றெல்லாம் கூறி இருக்கலாம். “திரு.லெவின்ஸ்கி அவர்களே, இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்-?” என்று கேட்டிருக்கலாம். 258 "அது முற்றிலும் சத்தியமாயிற்றே-! யேகோவா, தேவனின் வல்லமை பேசுவதைக் கண்டேன். அந்த தேசத்தில் தவளைகள் தோன்றினதை நான் கண் கூடாகக் கண்டேன். மோசே அதைக் கூறும் வரைக்கும் ஒன்றும் சம்பவிக்க வில்லை என்பதை நான் அறிவேன். அது யேகோவா தேவனின் செயல் என்று நான் அறிவேன்." இப்பொழுது அதெல்லாம் அருமையானது தான். "நீங்கள் விருத்த சேதனம் பண்ணப்பட்டிருக்கிறீர்களா-?" “ஆம், ஐயா-!” “நீர் விசுவாசியா-?" “ஆம், ஐயா-!” 259 ஆனால் போதகர் மோசே அன்று பேசின போது, அந்த நாளில் அவர், "நீங்கள் இரத்தத்தின் கீழ் வரவேண்டும். ஏனென்றால் தேவன், 'இரத்தமே ஒரு அடையாளமாயிருக்கிறது' என்று கூறினார். அது ஒரு அடையாளமே-! என்று பிரசங்கம் செய்வதை அவன் கேட்டான். நீ எவ்வளவு தான் விசுவாசித்தாலும், நீங்கள் எவ்வளவு தான் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அது தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த ஒரு உடன்படிக்கை, அது தான் உடன்படிக்கை. ஆயினும் நீ இரத்தத்தின் கீழ் வரவேண்டும். அதுவே ஒரு அடையாளம். ஏனென்றால் அவர், இரத்தத்தை காணும் போது, நான் கடந்து போவேன்.' என்று கூறியிருந்தார். இஸ்ரவேலனாய் இருந்தாலும் அல்லது யாராய் இருந்தாலுமே-!" 260 அது ஸ்தாபனத்தை சேர்ந்தவனோ அல்லது சேராதவனாயிருந்தாலும் சரி; நீ இரத்தத்தின் கீழ் வரவேண்டும். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேயினன், ஸ்தாபன மற்றவன், நீ யாராய் இருந்தாலும் அது தனிப்பட்ட நபருக்கானதாய் உள்ளது. நீங்கள் இரத்தத்தின் கீழ் வர வேண்டும். இப்பொழுது அதைக் குறித்து பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். எனக்கு செவி கொடுங்கள். எனக்கு செவி கொடுங்கள்; கர்த்தரின் நாமத்தில் எனக்கு செவி கொடுங்கள். புரிகிறதா-? இரத்தத்தின் கீழ் நீங்கள் வர வேண்டுமே-! 261 அவ்விதம் இரத்தத்தின் கீழ் வராத நபருக்கு அவர் பொறுப்பாளியல்ல. இரத்தத்தின் கீழ் வராத யாவரும் மாண்டு போவார்கள் என்று அவர் வெளிப்படையாய்க் கூறினார். 262 அவருடைய சொற்களை நான் உபயோகிக்கலாமா-? "கிறிஸ்துவுக்கு புறம்பே உள்ள அனைவரும் அழிந்து போவார்கள்." நீங்கள் எப்படி கிறிஸ்துவுக்குள் நுழைந்து கொள்ள முடியும்-? 1-கொரி: 12 ஒரே ஆவியினாலே. 263 கைகுலுக்குதலினாலல்ல; ஒரே அங்கத்தினனாக ஒரே ஸ்தாபனத்தில் சேர்வதனால் அல்ல. அப்படி செய்யவே அவர்கள் முயல்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்யலாம். 264 ஆனால் நாம் "ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்." "வானத்திலிருந்து வருகிற தூதன் வேறெந்த சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்,” என்று பவுல் கூறி இருக்கிறான். இதுவே செய்தி. கிறிஸ்துவுக்குள் வாருங்கள். 265 பாருங்கள். அடையாளத்துக்கு வெளியே இருந்த எந்த நபருக்கும் தேவன் பொறுப்பாளியல்ல. எந்த நபருக்கும், அவர் பெரியவரோ, சிறியவரோ, கீர்த்தி வாய்ந்தவரோ, கீர்த்தியற்றவரோ, ஏழையோ, பணக்காரனோ, அடிமையோ, சுயாதீனனோ, ஆணோ, பெண்ணோ, அது யாராயிருந்தாலும் தேவன் யாருக்கும் பொறுப்பாளியல்ல. உடன்படிக்கை அடையாளத்தின் கீழில்லாத யாருக்குமே அவர் பொறுப்பாளியல்ல. அவர் பொறுப்பாளியே அல்ல. 266 நீங்களோ, ஆனால் கர்த்தாவே, நான் இதை செய்திருக்கிறேன். நான் பிசாசுகளைத் துரத்தினேன் கர்த்தாவே, நான் இதைச் செய்தேன் அல்லவா-? நான்... நான் சுவிசேஷத்தைப் பிரசங்கம் செய்தேன்," என்று கூறலாம். 267 அவரோ, "அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்; நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" என்பார். அவர் அடையாளத்தை மாத்திரமே அங்கீகரிக்கிறார். 268 நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா-? ஆமென்-! என்று சொல்லுங்கள். [சபையார், "ஆமென்" என்கின்றனர் ஆசி.) எனவே, இப்பொழுது அது உங்களைப் பொறுத்தது. அவர்... 269 அன்றொரு நாள் காட்டில் நான் உட்கார்ந்து கொண்டிருந்த போது, அந்த பையங்கள், "இரண்டு நாளாயிற்றே. உங்களுக்கு வேட்டை எதுவும் கிடைக்க வில்லையே...'' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு அணில் கூட நான் சுட்டிருக்கவில்லை . "அதன் காரணம் என்ன-?" என்றேன். பாருங்கள், அதுதான் இதுவாயிருந்தது. புரிகிறதா-? 270 அவர், “அவர்களின் மீது பொறுப்பை சுமத்து, அதைக் குறித்து நீ என்னிடம் பேசினாய்" என்றார். பாருங்கள்-? இப்பொழுது அது உன் தொடையின் மீது உள்ளது. அது உன்னுடையது. 271 பரிசுத்த ஆவியின் உடன்படிக்கையைத் தவிர வேறொன்றையும் அவர் அங்கீகரிக்கமாட்டார். நீங்கள் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டு, அந்த சரீரத்திற்குள் அபிஷேகம் பண்ணப்பட்டாலொழிய, அந்த உடன்படிக்கையை நீங்கள் பெற முடியாது. அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். 272 ஒரு போலியான காரியத்தை நீங்கள் கொண்டிருக்கலாம். நீங்கள் உற்சாக முற்று மேலும் கீழும் குதித்து, அந்நிய பாஷை பேசி, ஆவியில் நடனமாடலாம். அதற்கும் இதற்கும் எவ்வித தொடர்புமில்லை. நான் கூறுவதை கர்த்தரின் நாமத்தில் கேளுங்கள். தேவன் அதை அங்கீகரிக்கிறதில்லை. அஞ்ஞானிகளும் கூட அதைச் செய்கின்றனர். மந்திரவாதிகள் அதைச் செய்கின்றனர். 273 நீங்களோ, "நான் ஒரு மேதை. நான் இதை, அதைச் செய்கிறேன், அல்லது மற்றதைச் செய்கிறேன்" என்றெல்லாம் கூறலாம். நீ எந்த அளவு மேதையாய் இருந்தாலும் தேவன் கவலைப்படுகிறதில்லை. பிசாசும்கூட அப்படிப்பட்டவை களைச் செய்கின்றான். பாருங்கள். 274 அவர் அடையாளத்தை மாத்திரமே அங்கீகரிக்கின்றார். இதுவே இந்த மணி நேரத்தின் செய்தியாயுள்ளது-! இதுவே இந்த நாளின் செய்தியாயுள்ளது. இதுவே இக்காலத்தின் செய்தியாயுள்ளது-! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அதை ஏற்றுக் கொள்ளுங்கள். 275 அதற்கு பதிலாக வேறெந்த ஈடையும் ஏற்றுக் கொள்ளாதீர். சில சமயங்களில் பிசாசு அதை உங்கள் மேல் சுமத்துவான். உதாரணமாக ஒரு மனிதனுக்கு மனைவி இருக்க, அவன் வேறொரு பெண்ணை நேசிப்பது, அல்லது இது போன்ற வேறு ஒழுக்கமற்ற காரியங்களில் ஈடுபடும்படி அவன் செய்வான். அது உண்மை அன்பல்ல. அது பிசாசினால் உண்டானது. அது அவனுடைய கிரியைகளாகும். அது ஏதோ ஒன்றை உங்கள் கரத்தில் அளிக்க அவன் முயற்சிக்கிறான், ஒன்று கூடி மது அருந்தி, களிப்படைதல் போன்ற செயல்கள். “எனக்கு குடிபோதை தோன்றுகின்றது. நான் வெளியே போய், மது அருந்தி விட்டு, கவலைகளை மறந்து விடுவேன்" என்கின்றனர். அது மரணமாகும். 276 தேவனே உங்களுடைய சந்தோஷமாயிருக்கிறார். தேவன் உங்களுடைய பெலனாய் இருக்கிறார். செய்தியை அறிந்து கொள்ளுதல். சத்தியத்தை அறிந்து கொள்ளுதல்; அதுவே இப்பொழுது நம்முடைய தேவையாயுள்ளது. அவரே என்னுடைய எல்லா தேவையுமாய் இருக்கிறார். எனக்குத் தேவையான எல்லாக் காரியங்களும் அவருக்குள் இருக்கிறது. அதுவே நமது பெலன். "கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும்." கிறிஸ்தவர்களே, உங்கள் மகிழ்ச்சிக்காக அவரை நோக்கிப் பாருங்கள். உங்கள் பெலனுக்காக அவரை நோக்கிப் பாருங்கள். உங்கள் சந்தோஷத்திற்காக அவரை நோக்கிப் பாருங்கள். அவரே என்னுடைய சமாதானம். அவரே எனது சந்தோஷம். அவரே என் நேசம். அவரே என் ஜீவன். அதுவே வாசலின் மேலுள்ள அடையாளம், உடன்படிக்கை. 277 அடையாளத்தின் கீழிராத எந்த ஒரு நபருக்கும், அவர் பொறுப்பல்ல, எந்த ஒரு நபருக்கும், நீங்கள் யாராயிருந்தாலும் சரி, அவர் பொறுப்பல்ல. 278 குடும்பம் ஒருமித்து அதன் கீழ் வந்தது என்பது நினைவிருக்கட்டும். ஓ, என்னே-! ஓ, நினைவு கூருங்கள்-! 279 நீங்களோ, "ஓ, என் தகப்பனார் ஒரு பிரசங்கியார். என் சகோதரன்-! என்னுடைய போதகர்-! என்னே.." என்று கூறலாம். அது உண்மையாயிருக்கலாம். ஆனால் உன்னைக் குறித்து என்ன-? 280 அந்த அடையாளம் பகிரங்கமாகக் காட்டப்பட்ட போது மாத்திரமே பாதுகாப்பாய் இருந்தது, என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மனிதன் இங்கே அதன் கீழிருந்து கொண்டு, அவன் மகன் தெருவில் நடந்து கொண்டு இருப்பானானால், அது மகனுக்கு ஆபத்தை விளைவிக்கும். அவன் இறந்து போவான். அவன் தகப்பனாரோ பாதுகாக்கப்படுவார். அதற்கு மாறாக, அந்த மகன் இங்கே அதன் கீழிருந்து கொண்டு, அவன் தகப்பனார் தெருவில் நடந்து கொண்டிருந்தால், அவர் இறந்து போவார். அடையாளம் மாத்திரமே முக்கியம் வாய்ந்தது. அந்த அடையாளத்தை நான் காணும் போது, நான் உங்களைக் கடந்து போவேன். அந்த ஒரு காரியம் மாத்திரமே, உண்டு. 281 நீங்கள், "என் மகன் ஒரு பிரசங்கி” எனலாம். தாய்மார்களாகிய நீங்கள், "எனக்குச் சிறந்த பையன் அல்லது சிறந்த பெண் இருக்கின்றனர். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் மிகவும் இனிய குணம் படைத்தவர்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள்-! அவர்கள் மிகவும் கீழ்ப்படிதலுள்ளவர்கள்” என்கின்றீர்கள். தாயே, உன்னைக் குறித்து என்ன-? 282 அவ்வாறே பெண்களாகிய நீங்களும், “என் தாயார் மிகவும் இனிய தன்மை வாய்ந்தவர்கள். சகோ.பிரான்ஹாமே, அவர்கள் மரிக்க நேரிட்டால், நிச்சயம் பரலோகத்திற்கு செல்வார்கள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் உண்மையில் அவர்கள் அடையாளத்தைப் பெற்றிருக்கின்றார்கள்,” எனலாம். ஆனால் சகோதரியே உன்னைக் குறித்தென்ன-? முழு குடும்பமும் அதன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். 283 நீங்கள் களைப்புற்றிருக்கின்ரீர்களா-? [சபையோர், "இல்லை" என்கின்றனர்.- ஆசி.] நான் 12 மணி. அப்படியே ஒரு நிமிடம் வேண்டுமானால் அத்துடன் முடித்து கொண்டு, இன்றிரவு நான் இதை தொடர்ந்து பிரசங்கிக்கலாம். (“இல்லை.") ஆனால் நீங்கள் நீங்கள் சற்று நேரம் நீங்கள் அமர்ந்திருந்தால், நான் இப்பொழுது துரிதமாக முடித்து விடுவேன். ["ஆமென்”) உங்கள் மனதில் இதைப் பதிய வைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ஏனென்றால் இப்பொழுது நீங்கள் இதைக் குறித்த அபிஷேகத்தின் கீழ் இருக்கும் போதே, இப்பொழுதே நீங்கள் அதைப் புரிந்துகொண்டால் நலமாயிருக்கும் என்று நான் கருதுகின்றேன். ["ஆமென்”) 284 அடையாளம் பகிரங்கமாகக் காண்பிக்கப்படுகின்ற போது மாத்திரமே-! முழு குடும்பமும் இரத்தமாகிய அந்த அடையாளத்தின் கீழ் வரவேண்டும். தகப்பனார், தாயார் அனைவரும். நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்கும் கூட பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களும் இரட்சிக்கப்படுவதை நான் காண வேண்டும். நான் இன்றைக்கு எனக்கும் கூட பிரசங்கித்துக் கொண்டு இருக்கிறேன். புரிகிறதா-? எனக்கும் சகோதரர் இருக்கின்றனர். எனக்கு ஒரு சகோதரி உண்டு. அருமையானவர்கள் எனக்கு இருக்கின்றனர். அவர்கள் இரட்சிப்படைவதையும் கூட காண வேண்டுமென்றே நான் நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் அந்த அடையாளத்தை பகிரங்கமாக காண்பிக்காவிட்டால் மடிந்து போவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு உயிர்த்தெழுதல் இராது. அது உண்மை. அவர்கள் தொலைந்து விட்டனர். அடையாளம் காண்பிக்கப்படுகின்ற போது மாத்திரமே-! 285 கவனியுங்கள், யோசுவா, அதை மாத்திரம் படிக்க நமக்கு சமயமிருந்தால் நலமாயிருக்கும். அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். யோசுவா 2-ம் அதிகாரம், அந்த விசுவாசிக்கின்ற புறஜாதி வேசி, ராகாப். 286 ஓ, இப்பொழுது 9 மணியாக இருந்திருந்தால் நலமாயிருக்கும். இந்த பாகத்தை எடுத்து, அது அங்கு எப்படி இருந்தது என்று உங்களுக்கு நான் காண்பிக்க விரும்புகிறேன். பாருங்கள். [சபையார் "நேரத்தை எடுத்துக் கொள்ளு ங்கள்" என்று கூறுகின்றனர்.- ஆசி.) 287 இந்த வேசி, புறஜாதி கவனியுங்கள், அவளுடைய குடும்பம் முழுவதுமே. அவள் ஒரு விசுவாசியாயிருந்தாள். அவளுடைய குடும்பம் முழுவதுமே அந்த அடையாளமாகிய சிவப்பு நூல் கயிற்றின் கீழ் வரவேண்டியதாய் இருந்தது. அவர்கள் அதன் கீழ் வரவேண்டியதாயிருந்தது இல்லையேல் அவர்கள் மடிந்து போயிருப்பார்கள். தேவ கோபாக்கினையைக் குறித்து அவர்கள் கேள்விப்பட்டு இருந்தனர். தேவனுடைய அற்புதங்களும், அடையாளங்களும் அவருடைய ஜனங்களின் மத்தியில் செய்யப்பட்டன என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். அந்த அடையாளத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாயிருந்தனர். ராகாபும் கூட அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. தேவனுடைய அழிக்கும் தூதன் வந்து கொண்டிருந்தான். அவர்கள் அதை அறிந்திருந்தனர். யோசுவா தான் அந்தத் தூதனாய் இருந்தான். அவர்கள் வரிசையில் இருந்தனர். 288 அவ்வாறே உலகிலுள்ள ஒவ்வொரு தேசமும் தேவனுடைய நியாயத் தீர்ப்பின் வரிசையில் உள்ளதே-! 289 இந்த வேசி, அவள் அதைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள். "விசுவாசம் கேள்வியினாலே வரும்." அவள் "முழுதேசமும் உங்களைக் குறித்து கலக்கம் அடைந்துள்ளது” என்றாள். அது உண்மையே. 290 இப்பொழுது அதற்கான ஒழுங்குகள் செய்வதற்காக அங்கு அனுப்பப்பட்ட வேவுகாரரை, அவர்களை அவள் கனம் பண்ணினாள். அவள் இரட்சிப்படைய விரும்பினாள். அவள், “உங்கள் தேவனே தேவன் என்பதை நான் அறிவேன். அவர் மகத்தான காரியங்களை செய்துள்ளார் என்பதை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் உங்களுக்கு என்ன செய்தாரென்று நான் அறிவேன். அவர் மற்ற தேசங்களுக்கு என்ன செய்தாரென்றும் நான் அறிந்திருக்கிறேன். அவரை ஏற்றுக் கொள்பவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் என்பதையும், அவரை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிப்பவர் நிர்மூலம் ஆக்கப்படுவார்களென்றும் நான் அறிந்து உள்ளேன். நான் உயிரோடிருக்க விரும்புகிறேன்” என்றாள். ஓ, என்னே-! அது தான் முக்கியம். “நான் உயிரோடிருக்க விரும்புகிறேன்.” ஏனென்றால் அவர்கள்... 291 கவனியுங்கள், தேவன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை எரிகோ கேள்விப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் அந்த எச்சரிப்பிற்கு செவி கொடுக்க விரும்பவில்லை. 292 அவ்வாறே, தற்பொழுது தேவன் செய்து வரும் மகத்தான காரியங்களைக் குறித்து கேள்விப்படாத ஸ்தாபனம் இந்நாட்டில் இல்லவே இல்லையெனலாம். ஆயினும் அந்த எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. 293 அவர் செய்திருந்த அவருடைய மகத்தான வல்லமையும் அடையாளங்களும் வெளியரங்கமாய் காண்பிக்கப்பட்டிருந்தன. அவர்கள் உலர்ந்த தரையின் மேல் நடந்து செல்வது போல், சிவந்த சமுத்திரத்தைக் கடந்து சென்றனர். அவர் தவளைகள், பேன்கள், வண்டுகள் போன்றவைகளைத் தமது தீர்க்கதரிசியின் மூலம் தமது வார்த்தையினாலே அவைகளை சிருஷ்டித்தார். அவை யாவும் இரகசியமாய் இருக்கவில்லை. அவர்கள் அதை அறிந்திருந்தனர். 294 ராகாப், "நான் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அவிசுவாசி களுடன் கூட அழிந்து போக நான் விரும்பவில்லை. இல்லை, ஐயா," என்றாள். நியாயத் தீர்ப்பு அதைத் தொடர வேண்டியதாயிருந்தது என்பதை அவள் அறிந்து இருந்தாள், ஏனென்றால் அவர்கள் சரியாக நியாயத் தீர்ப்பின் வரிசையில் இருந்தனர். அவள் அதை அறிந்திருந்தாள். ஆகையால் அதனின்று தப்பிக்க தூதர்கள் அவளுக்கு ஒரு வழியை வகுத்துக் கொடுத்தனர். 295 அவர்களுடைய மகத்தான சொந்த ஸ்தாபனமாகிய எரிகோ, தேவனுடைய கோபாக்கினைக்கு எதிர்த்து நிற்கக் கூடும் என்று ஒருக்கால் நினைத்திருக்க வேண்டும், பாருங்கள், அவர்களுடைய சொந்த மகத்தான ஸ்தாபனம். 296 இன்றைக்கும் அவ்வாறே அநேகர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். "ஓ, தேவன் நிச்சயமாக அவ்விதம் செய்யமாட்டார்" என்று அவர்கள் கருதுகின்றனர். சாத்தானும் ஏவாளிடம் அதைத் தான் கூறினான். "ஓ, தேவன் நிச்சயமாக செய்ய மாட்டார்" என்றான். அவர் நிச்சயம் செய்வார். ஏனெனில் அவர் செய்வதாக கூறி உள்ளார், பாருங்கள், அது அவருடைய வார்த்தையாயுள்ளது. ஆம், ஐயா. 297 "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்-!" "மறுபடியும் பிறந்தவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும்." பாருங்கள்-? "அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்." போன்றவை, பாருங்கள். சரி, அதைச் செய்ய விரும்பினால், ஓ-! 298 என்ன சம்பவித்தது-? இப்பொழுது அவர்கள் ஒரு வீட்டிற்குள் அடைக்கப் பட்டனர். "அங்கு எவ்வித எழுப்புதலும் உண்டாகப் போவதில்லை." "எங்கள் ஸ்தாபனம் இத்தகைய கூட்டங்களை ஒழுங்கு செய்யாது." "எங்கள் மத்தியில் இப்படிப்பட்ட அர்த்தமற்ற காரியங்கள் நிகழ நாங்கள் அனுமதிக்கமாட்டோம்." "நீங்கள் யாரும் அந்த கூட்டத்திற்கு போகக் கூடாது என்று நான் உத்தரவு இடுகின்றேன்." ஓ-! எரிகோ, சரியாக ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்ட வரிசையில் இருந்து கொண்டிருந்தது. 299 ஆனால் ஒலிநாடாவைப் போட்டுக் காண்பிக்கும் பையன்கள் சிலர் முன் குறிக்கப்பட்ட வித்துக்காக அங்கு நழுவிச் சென்றிருக்க வேண்டும். அவர்கள் மெல்ல நழுவி அவள் வீட்டிற்குச் சென்று சில ஒலிநாடாக்களைப் போட்டு காண்பித்து இருப்பார்கள். அப்பொழுது அவள் செய்தியைக் கேட்டு ஏற்றுக் கொள்ள, தன் சொந்த வீட்டையே ஒரு சபையாக ஆக்கினாள். 300 அவர்கள் அப்படியே செய்தியைப் பெற்று விட்டனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எப்படியோ செய்தி முன் குறிக்கப்பட்ட வித்திடம் சேர்ந்து விட்டது. அது எப்படி அங்கு சென்ற அடைந்தது என்று நமக்குத் தெரியாது, அவர்கள் அநீதி உள்ளோரோடு அழிந்து போகக் கூடாது என்பதற்காக, அது எப்படியோ அவர்களை அடைந்து விட்டது. தேவன் அதை இன்றைக்கும் பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஆம், எப்படியோ அது மெல்ல நழுவி உள்ளே சென்றுவிடுகிறது. எப்படியென்று நமக்கே தெரியவில்லை. அவர்கள் கூட்டங்கள் ஒழுங்கு செய்ய மாட்டார்கள். ஆனால் ஒரு சில முன்குறிக்கப்பட்ட வித்துக்கள் அங்குள்ளன. 301 வேதத்தை அறிந்த எவரும், அந்த வேசி முன்குறிக்கப்பட்டவள் என்பதை அறிந்து உள்ளனர். அவள் நிச்சயமாகவே முன்குறிக்கப்பட்டவள்-! அவள். வேதம், "அவள் விசுவாசிக்காதவர்களுடன் அழிந்து போகவில்லை" என்று உரைத்துள்ளது. அது உண்மை. ஆனால் அந்த மணி நேரத்தின் செய்தியை அவள் விசுவாசித்தாள். 302 தேவன் தமது தூதர்களின் மூலம் அவளுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்திருந்தார். அவர், "ஒரு ஒரு சிவப்பு நூல் கயிற்றை எடுத்து அதை ஜன்னலில் தொங்க விடுங்கள்" என்றார். நினைவிருக்கட்டும் மேலும் அந்த தூதர்கள், "இந்த சிவப்பு கயிற்றை எங்களை இறக்கி விட்ட ஜன்னலிலே நீ கட்டாவிட்டால் நாங்கள் ஆணைக்கு நீங்கலாயிருப்போம்" என்றனர். "அந்த சிவப்பு கயிற்றைக் கட்டின வீட்டிற்கு நீ வெளியே இருந்தால், நாங்கள் பொறுப்பல்ல” என்றனர். ஓ, என்னே-! "ராகாபே, இங்குள்ள ஒவ்வொரு முன் குறிக்கப்பட்ட வித்தினிடமும் நீ சென்று அவர்களைத் தேடிக் கண்டு பிடி. உன் தகப்பனாரை, தாயாரை இங்கு கொண்டு வா. ஏனெனில் நாங்கள் சற்று முன்பு தான் எகிப்தில் அந்த பலியின் கீழ் இருந்து விட்டு, இப்பொழுது வெளியே வந்து இருக்கிறோம். அந்த அடையாளத்தின் கீழிராத அனைத்துமே அழிந்து போயின. ராகாபே, உனக்கு ஒரு அடையாளத்தைத் தருகிறேன். அது ஒரு அடையாளமாய் இருக்கிறது. நான் கர்த்தரின் நாமத்தினாலே இதை உரைக்கிறேன். கூறுகிறபடி நீ அதை தொங்க விடுவாயானால், நலமாயிருக்குமே-! நான் அந்த தூதனோடு நெருங்கி தொடர்பு கொண்டிருக்கிறேன். நான் கோபாக்கினையின் தூதனாகிய யோசுவாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். அவன் அழித்துப் போடுகிற தேவனுடைய செய்தியாளனாய் இருக்கிறான். நான் அவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன், ஒரு அடையாளம் இருக்க வேண்டுமென்று அவன் அறிவான். அந்த அடையாளமாகிய சிவப்பு கயிற்றை நீ அங்கு தொங்க விடு. அப்பொழுது நீ பாதுகாப்பாய் இருப்பாய் என்று உறுதி கூறி, உனக்கு ஆணை இட்டுத் தருகிறேன்” என்றனர். அந்த அடையாளத்தின் கீழிருப்பவர் அனைவரும் உயிரோடு இருப்பவர்கள் என்றும், அதற்கு வெளியே இருப்பவர் அழிந்து போவார்கள் என்றும் தேவனும் கூட ஆணையிட்டுக் கொடுத்தார். 303 இப்பொழுது, அதே ஆணை இன்றைக்கு உண்டு, அதே காரியம், பாருங்கள், செய்தியை விசுவாசிக்காதவர்களுடன் கூட நீ அழிந்து போக விடமாட்டேன்.” அவர்கள்..... 304 ராகாப் தேவனுடைய கிரியைகளைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள், அவள் அதை விசுவாசித்தாள். ஆனால், கிட்டத்தட்ட, அவள். அவளும், அவளுடைய தகப்பனாரும், ஓரிரண்டு சகோதரர்களும், வேறு சிலர் மாத்திரமே அந்த முழு பட்டிணத்திலும் இதை விசுவாசித்தனர். 305 அது எவ்வளவு சொற்பப் பேர் என்று பார்த்தீர்களா-? இங்கொன்றும் அங்கொன்றுமாக, ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு சிறு குடும்பம் மாத்திரமே வெளி வந்தது. அதுசரியா-? [சபையார் "ஆமென்" என்கின்றனர்-ஆசி.) இப்பொழுது சரியாக, இங்கே நாம் உண்மையானவைகளைப் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் முன்னடையாளம் என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ளப் போவதாய் இருந்தால், நீங்கள் முன்னடையாளம் என்னவென்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நிழல் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும், அப்பொழுது நீங்கள் உண்மையான காரியம் எப்படி காணப்படப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். புரிகிறதா-? 306 அவருடைய வல்லமை அங்கு வெளிப்படுத்தப்பட்டது. நியாயத்தீர்ப்பு விழ ஆயத்தமாய் உள்ளது. அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமானால், விசுவாசிக்க வேண்டும். ஆம், ஐயா. இந்த சிறிய... 307 இந்த நபர்கள், இந்தத் தூதர்கள் எரிகோவுக்குச் சென்று, விசுவாசித்த முன் குறிக்கப்பட்ட வித்துக்களைப் பிடித்துக் கொண்டனர். ராகாபும், இந்த தூதர்களை ஏற்றுக் கொள்வதற்காகவே, தன் வீட்டை ஒரு சபை ஆக்கிக் கொண்டாள். அவர்கள் இந்த செய்தியாளர்களை அவர்களுடைய சபைகளில் அனுமதிக்க மாட்டார்கள். இல்லை, ஐயா. புரிகிறதா-? ஆதலால் அவள்... 308 உங்களையும் அவர்கள் அனுமதிக்க மாட்டர்கள். இதைக் குறித்து நீங்கள் ஏதாகிலும் கூற முயன்றால், உங்களையும் உதைத்துத் துரத்தி விடுவார்கள். ஆம். புரிகிறதா-? அவளுடைய பட்டணத்தில் விசுவாசித்தவர் அனைவரையும் அந்த அடையாளத்தின் கீழ் கொண்டு வந்தனர். 309 இன்றைக்கும் நாம் அதையே சரியாக செய்ய வேண்டும். நீங்கள் நேசிப்பவர் யாராகிலும் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்பினால், இப்பொழுதே அவர்களை உள்ளே கொண்டு வருவது மேலானதாய் இருக்கும். புரிகிறதா-? 310 தேவ கோபம் அந்த பெரிய பட்டணத்தை அழித்த போது, ஜன்னலில் கட்டப்பட்டிருந்த அந்த அடையாளம் அவளுடைய வீட்டாரைப் பாதுகாத்தது. ஆமென். என்ன-? அந்த அடையாளமே அவளுடைய அடையாளத்தின் மேல் இருந்தது.... இல்லை பட்டணத்தின் மற்ற பாகங்கள் தரை மட்டும் குலுங்கின போது, அந்த அடையாளம் அவள் வீட்டின் மேல் இருந்தது. அது என்ன-? அது என்ன-? யோசுவா தேவனால் அனுப்பப்பட்ட செய்தியாளன். தேவன் தாமே தம் உடைய செய்தியாளனுடைய செய்தியை அங்கீகரித்தார். ஆமென். அது இதை நிரூபித்தது. அது இதை நிரூபித்தது விட்டது. அவர்கள் செய்தியை அடையாளம் கண்டு கொண்டனர். அவர் தம்முடைய செய்தியாளனுடைய செய்தியை அங்கீகரித்தார். பட்டணத்தின் இதர பாகங்கள் குலுங்கி விழுந்த போது, ராகாப் வாசலில் கட்டின அந்த சிவப்பு கயிறு என்னும் அடையாளம் அங்கு நின்று கொண்டு இருந்தது. மற்றவை யாவும் விழுந்து போயின. 311 அப்பொழுது சங்காரத் தூதர்கள் பட்டணத்திலுள்ள அனைவரையும் சங்காரம் செய்து எல்லாவற்றையும் அழித்துப் போட்டனர். ஒரு பொருளும் கூட அழிக்காமல் விடப்படவில்லை. ஒருவன் ஒரு பொருளை அந்த ஸ்தாபனத்தில் இருந்து எடுத்துக் கொண்ட காரணத்தால், அத்துடன் அவன் அழிந்து போக நேர்ந்தது. பட்டணத்திலுள்ள எல்லாவற்றையுமே அவர்கள் அழித்து போட்டனர், அந்த பட்டணத்தைக் கட்ட முயற்சி செய்யும் எந்த மனிதனும் சபிக்கப்படக் கடவன்” என்று யோசுவா சபித்தான். அவன் அதின் அஸ்திபாரத்தைப் போகிற போது, தன் மூத்த குமாரனை சாகக் கொடுக்கக்கடவன் என்றான். தேவன் அந்த விதமாக அதை சபித்துப் போட்டார். கிருபை, இரக்கம் என்னும் செய்தியைப் புறக்கணித்த அந்த பெரிய பட்டிணம் சபிக்கப்பட்டது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தனர். 312 இன்றும் அநேகர் அது போன்றே, "நான் இன்னின்ன சபையைச் சேர்ந்தவனாய் இருப்பதால், நான் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு இருகிறேன்" என்று நினைக்கின்றனர். அத்தகைய அர்த்தமற்ற காரியத்தை நீங்கள் விசுவாசிக்காதீர்கள். 313 "இரத்தம் உங்களுக்கு அடையாளமாயிருக்கும்." பரிசுத்தாவி இப்பொழுது உங்களுக்கு அடையாளமாயிருக்கும். இரத்தத்தில் இருந்த அவருடைய ஜீவன். 314 அதேக் காரியம், நாம் அதை சிந்தித்துப் பார்ப்போமாக, எகிப்தில் அவர்கள் உபயோகித்த அதே அடையாளத்தை, எகிப்தில் இருந்த அதே ஜீவ அடையாளம், எகிப்தில் இருந்த தேவன் அதே அடையாளத்தையே அங்கு உபயோகித்தார். யோசுவா இயேசுவுக்கு ஒரு பரிபூரண முன்னடையாளமாய் இருக்கிறான். அவன் தான் அனுப்பிய செய்தியாளர்கள் பிரசங்கித்த அந்த அடையாளத்திற்கு உண்மை உள்ளவனாய் இருந்தான். யோசுவா, அவன் கூறும் போது, அவன், "அந்த வீட்டையும் அதற்குள் இருக்கும் யாதொன்றையும் தொட வேண்டாம். அது கர்த்தருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது” என்றான். ஆமென்-! 315 ஒரு புறஜாதி, ஒரு வேசி, தெருவில் திரிபவள், ஆனால் அவள் அதைக் கேட்டு விசுவாசித்து, அந்த அடையாளத்தைப் போட்டுக் கொண்டாள். 316 நீங்கள் எவ்வளவு தான் பாவத்திற்குள்ளாக இருந்தாலும் பரவாயில்லை, என்ன காரியம் செய்திருந்தாலும் பரவாயில்லை. அதற்கும் இதனோடு எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. நீ அந்த அடையாளத்தை உன்மேல் போட்டுக்கொள். அது உனக்காகவே உள்ளது. உன் இருதயத்தில் ஏதோ ஒன்று உன்னை இழுப்பதாக உணர்வாயானால் அது உனக்காகவே உள்ளது. நீங்கள் அந்த அடையாளத்தைப் போட்டுக் கொள்ளுங்கள். ஆகவே அந்த மகத்தான யோசு... 317 யோசுவா என்னும் சொல், "யேகோவா என் இரட்சகர்" என்றும் அர்த்தம் கொண்டது. இயேசு என்பதற்கும் "இரட்சகர்" என்று அர்த்தம். யோசுவா, அவன் தன் செய்தியாளர்களை அறிந்திருந்தான் 318 அந்தச் செய்தியாளர்கள் திரும்பி வந்து, "உங்கள் கட்டளைக்கு கீழ்ப் படிந்தோம்," என்றனர். அவர்கள், "நாங்கள் ஒலி நாடாக்களைப் போட்ட போது, உங்களுக்குத் தெரியுமா, செய்தியை விசுவாசித்த ஒரு ஸ்திரீயை கண்டு பிடித்தோம். எனவே அந்த சிவப்பு அடையாளத்தின் கீழ் வருபவரெல்லாம் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதே அதன் அர்த்தம் என்று நாங்கள் அவளிடம் கூறினோம். இப்பொழுது நாங்கள் அதை பிரசங்கித்திருக்கிறோம். யோசுவாவே, நீர் அதைக் கனப்படுத்துவீரா-?” என்று கேட்டனர். "அதைச் செய்யத்தான் நான் உங்களை அனுப்பினேன்” ஆமென். 319 ஆகவே அப்பொழுது, தேவன் அதை கனப்படுத்தினார். எனவே அந்த வீடு மாத்திரம் ஒரு போதும் அதிரவில்லை. அந்த முழு பட்டணத்தையும் அழிக்க அப்பொழுது யோசுவா அங்கு நின்று சைகைக் காண்பித்த போது, ராகாபும் அவளுடன் இருந்த எல்லா ஜனங்களும் எவ்வித கவலையும் இன்றி அவர்களுடைய உடைமைகளுடன் கூட அமர்ந்திருந்தனர். ஆமென்-! ஆமென்-! அந்த வீட்டிலிருந்த எல்லா உடைமைகளும் பாதுகாப்பாக இருந்தன. அவர்கள் அங்கேயே அமைதியாக நின்றிருந்தனர். என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. அங்கு யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, அவர்களால் அமைதியாக வேதாகமத்தைப் படித்துக் கொண்டிருக்க முடிந்தது. 320 ராகாப் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பின்பு, ஒரு இராணுவ தளபதியை மணந்து கொண்டு, பெத்லெகேமுக்கு வந்தாள். அவளுடைய பாகம் அவளுக்கு அங்கு அளிக்கப்பட்டது. அவள் ஒரு மகனை பெற்றெடுத்தாள், அவள் ஒரு புகழ் வாய்ந்த மகனை ஈன்றாள். அந்த புகழ் வாய்ந்த மகன் வேறொரு கீர்த்தி வாய்ந்த மகனைப் பெற்றான். அந்த மகன் மற்றொரு புகழ்வாய்ந்த மகனைப் பெற்றான், இப்படியாக முடிவில் அந்த மகத்தான கீர்த்தி வாய்ந்த மகன் அந்த வம்சத்தில் தோன்றினார். ஓபேத் மூலமாக, ஈசாய், இவர் மூலமாக தாவீது, வெவ்வேறு தலைமுறைகளில் அந்த வம்சத்தில் தோன்றினார். அது உண்மை. வேசியாகிய ராகாப் செய்தி கொண்டு வந்த தூதனை விசுவாசித்தாள், அவள் அடையாளத்தை பகிரங்கமாகக் காண்பித்தாள். அவளுடைய வீட்டார் காக்கப்பட்டனர். இல்லையேல் அவள் இருந்த இடத்திலேயே அவள் அழிந்து போயிருப்பாள். 321 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஓ, இந்த அடையாளம் என்னவென்பதை நீங்கள் கண்டு கொண்டீர்களா-? எகிப்தில் அதன் கீழ் இருந்தவர் அனைவரும் காக்கப்பட்டனர். எரிகோவிலும் அதன் கீழ் இருந்த அனைவரும் காக்கப்பட்டனர். இன்றும் அந்த அடையாளத்தின் கீழ் வரும் அனைவரும் காக்கப்படுவார்கள். இரத்தத்திற்கு, ஆட்டுக்குட்டியின் இரத்தம் இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாக உள்ளது. 322 எபிரெயர்.13:10 மற்றும் 20 வசனங்களில் உள்ளன. அதை படிக்க இப்பொழுது எனக்கு சமயமில்லை. அதைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் அதை வாசிக்கப் போகிறேன். அது "நித்திய உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நித்திய உடன்படிக்கை" என்று அழைக்கப்படுகின்றது. ஆம், ஐயா-! “நித்திய உடன்படிக்கை." 323 அது ஏன் "நித்திய உடன்படிக்கை" என்று அழைக்கப்படவில்லை-? ஏனெனில் அது நித்தியமாய் இருக்காது. நாம் மீட்கப்பட்டவுடன் அது முடிவு பெறுகின்றது. அது என்றென்றும் என்பதாய் உள்ளது, அதன் பொருள் என்னவெனில், "ஒரு காலவரையளவு உண்டாயிருக்கும்." அதாவது காலம் என்பது இருக்கும் வரை என்பதாகும். வேறொன்று இருக்காது. சமயம் முடிவடையும் தருணத்தில் நமக்கு ஒரு உடன்படிக்கை அவசியம் இராது. ஆனால் அது வரைக்கும் நமக்கு ஒரு உடன்படிக்கை அவசியம் 324 இப்பொழுது, கவனியுங்கள், எபிரெயர் 13:10-20, ஒரு "நித்திய உடன்படிக்கை." தேவனுடைய இரத்த சம்பந்தமான வாக்குத்தத்தம் நம்மை பாவத்தினின்று விடுதலை ஆக்குகிறது. ஆமென்-! அவரிடத்தில் பாவமேயில்லை. பாவம், சுயம், மாம்சம். 325 அவருக்கு ஆராதனை செய்து, அவர் வாக்குத்தத்தம் செய்து உள்ள வல்லமையைத்தெரிவியுங்கள். தேவனுடைய இரத்த சம்பந்தமான, அடையாளம் சம்பந்தமான உடன்படிக்கையில் உள்ள ஜனங்கள், இயேசு கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டவர்களாய், "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்" என்னும் நிலையை அடைவார்கள். அந்த உடன்படிக்கையை வெளிப்படையாகக் காட்டவேண்டும். புரிகிறதா-? 326 புதிய ஏற்பாடு-! ஏற்பாடு என்பது உடன்படிக்கை என்று அர்த்தம் கொள்கிறது. அது சரிதானே, வேதபண்டிதர் வேயில்-? ஏற்பாடு என்பது உடன்படிக்கை என்று பொருள்படுகிறது. புதிய ஏற்பாடு என்பது "புதிய உடன்படிக்கையை" பொருட் படுத்துகிறது. பழைய ஏற்பாடு என்பது பழைய, ஆட்டுக்குட்டியின் கீழ் இருந்தது ஆகும், அதனுடைய ஜீவன் விசுவாசியின் மேல் திரும்ப வர முடியாது. புதிய ஏற்பாடு என்பது தேவ ஆட்டுக்குட்டியாகும், அவருடைய ஜீவன் நம் மேல் திரும்பவும் வரும். இரத்தத்தின் ஜீவன்-! பாருங்கள்-? இரத்தமே புதிய ஏற்பாட்டில் ஜீவனாயிருக்கிறது. பாருங்கள், தேவ ஆட்டுக்குட்டியில் இருந்து ஜீவன் கிடைக்கின்றது. அது புதிய ஏற்பாட்டை, புதிய உடன்படிக்கையைப் பொருட்படுத்துகிறது. 327 "அந்த நாட்களுக்குப் பின்பு, என்னுடைய பிரமாணங்களை அவர்கள் உடைய மாம்சமான இருதயங்களில் கற்பலகைகளில் எழுதுவேன்" என்றார். பாருங்கள்-? பாருங்கள்-? "கற்பலகைகளின் மேலல்ல; ஒரு ஆட்டுக்குட்டியின் இரத்தம், அது முன்பு உண்டாயிருந்தது. ஆம், நான் அந்த இரத்தத்தை இங்கே பூசி இருக்கிறேன். இப்பொழுது அது என்ன செய்யும் என்று சொல்கிறது என்பதல்ல. ஆனால் உங்கள் இருதயங்களாகிய கற்பலகைகளில் எழுதுவேன், பாருங்கள், ஆவியின் உடன்படிக்கையை நான் ஜனங்களோடு பண்ணுவேன்." 328 அது அவருடைய வல்லைமையை விளங்கப் பண்ணுகிறது. "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான்” என்று யோவான் 14:12 உரைக்கின்றது. 329 புதிய ஏற்பாடு "புது உடன்படிக்கையாய்" உள்ளது, புது ஜீவன். இயேசு நமக்காக தேவன் கேட்டிருந்த எல்லா தேவைகளையும் சந்தித்தார் என்பதையே காண்பிக்கிறது. நம்மை உண்மையான தேவனுடைய குமாரரும் குமாரத்திகளு மாய் ஆக்கி, இரத்தத்தின் கீழ் ஆக்கினைத் தீர்ப்பே இல்லாமல் செய்து விட்டார். 330 ரோமர்.8:1, "கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" என்று கூறுகிறது. அதை வெறுமென விசுவாசிக்கிறவர்கள் அல்ல, "கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாய் இருந்து, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கிறவர்கள். என் வார்த்தை ஆவியாயும் ஜீவனாயுமிருக்கிறது" பாருங்கள்-? ஓ அதிலிருந்து ஒரு பொருளைத் தெரிந்து கொண்டு, இரண்டு மணி நேரம் நிலைத்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்-! ஆனால் நாம் இதை துரிதமாக முடிப்போம். நீங்கள் பாருங்கள். 331 ஆக்கினைத் தீர்ப்பில்லை; பாவத்தினின்று விடுதலை; இவ்வுலக கவலைகளி னின்று விடுதலை, ஆக்கினைத் தீர்ப்பில்லை. ஏன்-? "ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்களுக்கே." அங்கு தேவ ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்பட்டுள்ளது. பரலோகத்தின் தேவன் உங்களை உங்களுடைய... ஏற்றுக் கொண்டு விட்டார். அவருடைய ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் தேவனுடைய குமாரரும் குமார்த்திகளுமாய் இருக்கிறீர்கள். 332 உங்கள் குணாதிசயம் அப்பொழுது தேவனுடைய குணாதிசயமாய் உள்ளது. அது என்ன-? ஒரு சிறு தற்காலிகமான காரியமா-? இல்லை, ஐயா. தேவன் நியாயத் தீர்ப்பின் தேவனாயிருக்கிறார். அவர் திருத்தும் தேவனாயிருக்கிறார். அது சரியான வரிசையில் அமைந்திருக்க வேண்டும். வேறேதும் அதைச் செய்யாது. அவ்விதமான தன்மையாய் நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் பிதாவாகிய தேவனின் தன்மையாய் இருக்கிறீர்கள். புரிகிறதா-? 333 என்ன-? ஜீவன் இரத்தத்திற்காக ஜீவன் (அது) எடுக்கப்பட்டதைக் கவனியுங்கள். புரிகிறதா-? ஜீவன் தாமே எடுக்கப்பட்டது. புரிகிறதா-? ஜீவன், அது இரத்ததிற்காக எடுக்கப்பட்டது. புரிகிறதா-? பழைய ஏற்பாட்டின் காலத்தில் இரத்தம் பூசப்பட்ட போது, அந்த மிருகத்தின் ஜீவன் திரும்பவும் விசுவாசியின் மேல் வர முடியவில்லை. ஆனால் ஜீவன்.... 334 ஆனால், பாருங்கள், ஒரு சாதாரண மனிதனல்ல, மிக, மிக, மிக, மிகச் சிறந்த மனிதன். பாருங்கள்-? அதன் மூலமாக, மனிதர் வெறும் மனிதராக மாத்திரம் இராமல், தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாகின்றனர். மிக, மிக, மிக, மிகச் சிறந்த அவருக்குள் இருந்த ஜீவன், உங்கள் மேல் திரும்பவும் வருகிறது; பாவியாக இருப்பதில் இருந்து இவ்வுலக காரியங்களிலிருந்து, ஒரு சபை அங்கத்தினனிலிருந்து, ஸ்தாபனத்திற்கு செல்கிறதிலிருந்து மாற்றுகிறது. ஒரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக, பரிசுத்தாவியினால் நிரப்பப் பட்டவனாக, பட்டரைக்கல்லிலிருந்து தீப்பொறி பறப்பது போல், தேவன் உடைய ஜீவன் உங்களிலிருந்து பாயும்படி செய்கிறது. நீங்கள் அப்பொழுது நற்குணம், அன்பு, சாந்தம் போன்ற பண்புகள் கொண்டவர்களாய் நடந்து, பரிசுத்தாவி அசைவாடும் போதே பேசுகிறீர்கள். ஓ, என்னே-! அங்கு தான் காரியம். (என்ன-?) நீங்கள் செய்தியைக் கேட்டு, அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டு, "நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறேன்" என்னும் ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியைப் பெற்றிருக்கிறீர்கள். எனவே எவ்வித ஆக்கினைத் தீர்ப்பும் இல்லை. 335 “நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் வேண்டிக் கொள்கிறதெதுவோ.. " பாருங்கள், நமக்குத் தெரியும். ஆனால் நம் இருதயத்தில் பாவம் குடி கொண்டிருந்தால், அது நம்மை குற்றவாளி என்று தீர்க்கிறது. அப்படியானால், இப்பாதையில் செல்ல நாம் நாம் முதலில் புறப்படவும் முடியாது. புரிகிறதா-? நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக வேண்டும். அதற்கு ஒரே ஒரு வழி நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாகி, அவருக்குள் நுழைந்து கொள்ளுதலாகும். பாவத்திற்கான மூடுதல் ஒன்று மாத்திரமே உண்டு, அது கிறிஸ்துவாய் இருக்கிறது. 336 இரத்த உடன்படிக்கையை நினைவு கூருங்கள். அடையாளமில்லாமல் அந்த இரத்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்படமாட்டாது. உங்களால் முடியாது, நீங்கள் அங்கீகரிக்கப்படமாட்டீர்கள். நீங்களோ, "நான் நான் பல காரியங்களிலிருந்து பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறேன்," என்று கூறலாம். அது அடையாளமல்ல. ஆவியே அடையாளம். கிறிஸ்துவின் ஆவி உன்மேல் தங்கியிருக்க வேண்டும். அதை விசுவாசியுங்கள்-! 337 இப்பொழுது, கவனியுங்கள், தேவனுடைய வார்த்தை ஒரு வாக்குறுதியை நமக்கு நிச்சயமாய் அளிக்கிறது. அந்த வேதவாக்கியங்கள் அனைத்தையும் நான் குறித்துக் கொண்டு வந்திருக்கிறேன். வேண்டுமானால் நாள் முழுவதும் இவைகளின் பேரில் பிரசங்கம் செய்து கொண்டே இருக்கலாம். பாருங்கள்-? தேவனுடைய வார்த்தை நமக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கிறது. ஏனென்றால் அது வாக்குத்தத்தம். தேவனுடைய வார்த்தை ஒரு வாக்குத்தத்தம். வார்த்தை தேவனாயிருக்கிறது. அந்த வார்த்தை நாமமாகவும் ஆகிவிடுகின்றோம். "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்...'' அப்பொழுது பாருங்கள், நாம் ஒரு பெரிய குடும்பமாக ஆகிவிடுகின்றோம். பாருங்கள்-? அது நமக்கு உறுதியை அளிக்கிறது. காரணம் ஏன்-? ஏனெனில் அது நமது ஒரு பாகமாக ஆகிவிடுகின்றது. பாருங்கள்-? பாருங்கள்-? பாருங்கள், அது நமது ஒரு பாகமாக ஆகிவிடுகிறது. என்னே ஒரு பொருள்-! சரி, அந்த வாக்குத்தத்தை அது நமக்கு உறுதிப்படுத்துகிறது. 338 கிரயம் செலுத்தப்பட்டு விட்டு, அது அங்கீகரிக்கப்பட்டது என்பதன் அறிகுறியாக அடையாளம் அமைந்துள்ளது. ரயில் கட்டணத்தை செலுத்தாமல் நீங்கள் "அடையாளச் சீட்டை," வாங்க முடியாது. அதை நீங்கள் செலுத்தப் போகிறதற்கான ஒரே வழி கட்டணத்தை செலுத்துவதாகும். அது சரி. எப்படி-? அதை விசுவாசியுங்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தை அனைத்துக்கும் முழுவதுமாக கீழ்ப்படிவதன் மூலமே நீங்கள் அந்த அடையாளத்திற்கு உரிமையாளராவீர்கள். முழுவதுமாக கீழ்ப்படிதல், உங்கள் ஸ்தாபனம் எவைகளுக்குக் கீழ்ப்படிகின்றதோ, அந்த பாகத்திற்கு மாத்திரமல்ல, ஆனால் முழு வார்த்தைக்கும் கீழ்ப்படிதல். தேவனுடைய வார்த்தைக்கு முழுமையாக கீழ்ப்படிய வேண்டும். அது கிறிஸ்துவாய் உள்ளது. அது உங்களை கிறிஸ்துவுக்குள் கொண்டு வருகிறது. 339 இப்பொழுது உங்களுடைய மற்றெல்லா பாகங்களும் அவருக்குள் இருந்து, உங்கள் கால்கள் மாத்திரம் வெளியே தொங்கிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்-? உங்களுடைய மற்றெல்லா பாகங்களும் அவருக்குள் இருந்து, உங்கள் கரங்கள் மாத்திரம் வெளியே தொங்கிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்-? நம்முடைய எல்லா பாகங்களும் உள்ளே இருந்து, இருதயம் மாத்திரம் வெளியே இருந்தால் எப்படியிருக்கும்-? பாருங்கள்-? பாருங்கள்-? அப்படி என்றால், உங்கள் இருதயம் இன்னமும் உலகத்தில் இருக்குமே-! பாருங்கள்-? ஆனால் நாமோ அப்படிச் செய்வதில்லை. 340 முழுமையாக, முற்றிலுமாக கீழ்ப்படிதல் என்பது உங்களையும் தேவனுடைய வார்த்தையையும் ஒன்றாக இணைந்து விடுகின்றது. அதன் ஒவ்வொரு பாகத்தையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். வார்த்தை முழுவதும் உங்களுக்குள் இருக்கிறது. அப்பொழுது அது உங்கள் மூலம் அது கிரியை செய்வதை நீங்கள் கவனிக்கிறீர்கள். 341 மற்ற அவிசுவாசிகள் செய்கிறவிதமாக அப்பொழுது உங்களால் செய்ய முடியாது. புரிகிறதா-? நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள். யார் என்ன கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது உங்களை ஒரு போதும் தொட முடியாது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கின்றீர்கள். நீங்கள் முடிந்தளவு பாதுகாப்பாய் இருக்கின்றீர்கள். 342 மரணம் உங்கள் கதவைத் தட்டும் போது, அதற்கு பிடியே கிடையாது, பாருங்கள், இல்லவே இல்லை. ஏன்-? நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று அந்த இடத்தை அடைகின்றீர்கள். 343 அப்பொழுது வயது என்பதற்கு எவ்வித அர்த்தமுமில்லை. வயது என்னும் வரம்பை நீங்கள் கடந்து விடுகின்றீர்கள். நீங்கள் அவருக்குள் இருப்பதால், நித்தியத்தில் இருக்கின்றீர்கள். அவர் நித்தியமானவர். எனவே நீங்கள் வாலிபர் ஆனாலும், வயோதிபரானாலும், நடுத்தர வயதுள்ளவரானாலும் அல்லது நீங்கள் எதுவாய் இருந்தாலும், அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறது இல்லை. நீங்கள் அழகாயிருந்தாலும், அசிங்கமாயிருந்தாலும், குட்டையாக இருந்தாலும் பருமனாயிருந்தாலும், அல்லது நீங்கள் எப்படியிருந்தாலும், அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. அது ஒன்றையும் செய்கிறதில்லை. 344 நீங்கள் அங்குமிங்கும் சென்று, இந்த மற்ற காரியங்களையும் செய்வது இல்லை. ஏனெனில் நீங்கள், நீங்கள் அவையனைத்தையும் கடந்து விட்டீர்கள். நீங்கள் மரித்துவிட்டீர்கள். உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே கூட தேவனுக்குள் மறைந்து இருக்கிறது. நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் நடந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் காணக்கூடிய ஒரே ஒரு இலக்கு இயேசு கிறிஸ்துவாகும். அவ்வளவு தான். அதனண்டை மாத்திரமே நீங்கள் நடக்கிறீர்கள். ஓ, என்னே-! நாம் வழக்கமாக பாடும் அந்த சிறு பாடலைக் குறித்து வியப்பொன்றுமில்லை. நான் பரலோக புறாவுடன் நடந்து கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு நாளும் என் வழியை அன்பினால் நிரப்பும்; நான் எப்பொழுதும் ஒரு பாடலோடும், புன்னகையோடும் செல்வேனாக, என்னை நிரப்பும்... 345 நான் உங்கள் சகோதரனாயிருக்கட்டும். ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கிறிஸ்து கூறினதற்கு நான் மாதிரியாக ஜீவிக்கட்டும். நான் ஒரு சகோதரனுக்கு ஒரு சகோதரனாகவும், ஒரு சகோதரிக்கு ஒரு சகோதரனாகவும் இருக்கட்டும். ஊழியர்களுக்கு நான் ஒரு - ஒரு ஊழியனாக இருக்கட்டும். உதாரணங்களுக்கு நான் ஒரு உதாரணங்களாக இருக்கட்டும். இந்த வார்த்தை கிறிஸ்துவே என்று நான் உலகிற்கு காட்டட்டும். நான் அதைச் செய்ய முடிந்த ஒரே வழி அவருக்குள் வருவதன் மூலமேயாகும். ஏனென்றால் நானாக இதைச் செய்ய முடியாது. நீங்களாகவே அதை செய்ய முடியாது. ஆனால் வார்த்தையும் நீங்களும் ஒன்றானால், அப்பொழுது அது தாமே வெளிப் படையாய் ஜீவிக்க வைக்கும். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நடமாடும் நிருபங்களாக இருக்கின்றீர்கள். ஒவ்வொரு வார்த்தைக்கு கீழ்ப்படியச் செய்ய உங்கள் மேல் அவர் முற்றிலுமாக ஆதிக்கம் செல்த்துகிறார். 346 அவர் இந்த விதமாக உங்களிடம் வந்து, “நான் இதைச் செய்ய விரும்புகிறேன்,” என்று கூறினால், நீங்கள், "வேண்டாம், வேண்டாம். நான் அதை விசுவாசிப்பதில்லை," என்று கூறுவீர்களானால், பாருங்கள், நீங்கள் அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையில் இல்லை. புரிகிறதா-? 347 இப்பொழுது கவனியுங்கள். தேவனுடைய வார்த்தை அனைத்திற்கும் முற்றிலுமாக கீழ்ப்படிதலே அடையாளத்திற்கு நம்மை உரிமையாளர்கள் ஆக்குகின்றது. நாம் ஜெபம் செய்யும் போது, அந்த அடையாளத்தையும் நாம் நமது ஜெபத்துடன் சமர்ப்பிக்க, அதைப் பெற்றிருக்க வேண்டும். 348 நீங்களோ, "கர்த்தாவே, நான் ஜெபம் செய்கிறேன், ஆனால் என்னிடம் உண்மையாகவே அடையாளமில்லை," என்று சொல்வீர்களானால், நீங்கள் அதை விட ஜெபத்தை நிறுத்தி விடுவது மேலானது. பாருங்கள்... முதலில் சென்று அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். பாருங்கள், ஏனெனில் அந்த அடையாளத்தை மாத்திரமே அவர் அங்கீகரிப்பார். புரிகிறதா-? ஆம், ஐயா. 349 நாம் ஜெபம் செய்யும் போது, அந்த அடையாளத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். "கர்த்தாவே, நான் முற்றிலுமாக உமக்கு கீழ்ப்படிகிறேன். என் பாவங்களுக்காக நான் மனந்திரும்பியிருக்கிறேன். நீர் என்னை மன்னித்துள்ளீர் என்பதை நான் உணருகிறேன். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞான ஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறேன். பரிசுத்தாவி என் மேல் உள்ளது. கர்த்தாவே, உமது மகிமைக்காக குறிப்பிட்ட காரியம் எனக்கு தேவைப்படுகிறது. அதற்காக உம்மிடம் விண்ணப்பிக்கிறேன். அது இப்பொழுது என்னுடையது," என்று ஜெபம் செய்யுங்கள். அப்பொழுது ஏதோ ஒன்று அங்கு நங்கூரமிடப்படுகின்றது. "வ்யூ- வ்யூ," அது உங்களுக்கு சொந்தமாகிவிடுகின்றது. அது முடிவுற்று விட்டது. அப்பொழுது அது முடிவுற்று விட்டது. அது அப்பொழுதே முடிவுற்று விட்டது. அது தீர்க்கப்பட்டு விட்டது. "நான் இதற்காக கேட்கிறேன். நான் அதற்காக கேட்கிறேன். நான் அதை பெற்றுக் கொள்ள வேண்டும். புரிகிறதா-? புரிகிறதா-? அது உம்முடைய மகிமைக்காக எனக்கு வேண்டும்." புரிகிறதா-? அது தான். அப்பொழுது அவர் அதை உங்களுக்கு தருகிறார். அது அப்பொழுது உங்கள் உடையதாகி விடுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். அவ்விதமாகத் தான் நாமும் நமது பிள்ளைகளும் மற்றவரும் அந்த இரத்தத்தை பூசிக் கொள்ள வேண்டும். அதை விசுவாசியுங்கள். அவ்வளவு தான். சரி 350 அப்பொழுது அவர் என்ன செய்கிறார்-? உங்கள் ஜெபத்துடன் அந்த அடையாளத்தையும் நீங்கள் சமர்ப்பிக்கும் போது, தேவனுடைய வார்த்தை முழுவதிற்கும் கீழ்ப்படியும் நிலைக்கு நீங்கள் வந்து விட்டீர்கள் என்பதை அது காண்பிக்கிறது. நீங்கள் அடையாளத்தைப் பெற்றிருக்கும் போது, தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றிற்கும் நீங்கள் கீழ்ப் படிந்திருக்கின்றீர்கள் என்பதையே அது காண்பிக்கின்றது. அப்பொழுது நீங்களும் வார்த்தையும் ஒன்றாகி விடுகின்றீர்கள். அப்பொழுது நீங்கள் எதுவாய் இருக்கின்றீர்களோ அதையே கேட்கின்றீர்கள். புரிகிறதா-? பார்த்தீர்களா-? ஏன்-? அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்ளுகிறீர்கள். 351 நீங்கள் உங்கள் கையிடம், "கையே, எனக்குக் கீழ்ப்படிய வேண்டும். அந்தக் கைக்குட்டையை எடு” என்று இந்தவிதமாக கட்டளையிட்டால், அது அப்படியே செய்கின்றது. பாருங்கள், அந்தக் கை எனக்குக் கீழ்ப்படிகின்றது. ஏன்-? ஏனெனில் அது என்னுடைய ஒரு பாகமாக இருக்கின்றது. புரிகிறதா-? 352 அவ்வாறே நீங்களும் தேவனுடைய வார்த்தையும் ஒன்றாகி விடும் போது, ஒவ்வொரு வாக்குத்தத்தமும், தேவனுக்கு மகிமை-! ஒவ்வொரு வாக்குத் தத்தமும் உங்களுக்கு உரியதாகி விடுகின்றது. அது உங்களுக்குக் கீழ்ப் படிகின்றது. நீங்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ, அதை கவனத்துடன் செய்து வருகின்றீர்கள். உங்கள் கையை நெருப்பில் போட முடியுமா என்று அறிந்து கொள்ள, "நான் அதை செய்து பார்க்கிறேன்" என்று கூறுகிறதில்லை. ஓ இல்லவே இல்லை. புரிகிறதா-? ஆனால் அந்த நெருப்பில் உள்ள ஒரு பொருளை வெளியே எடுக்க வேண்டுமானால், அப்பொழுது என் கை எனக்குக் கீழ்ப்படிகின்றது. பாருங்கள்-? பாருங்கள்-? அது சரி. பாருங்கள், எனவே நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறீர்கள். 353 அதன் காரணமாகவே பரிசுத்தாவியானவரும் சில காரியங்களை மாத்திரமே செய்கின்றார். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா-? ஏனென்றால் சில... நீங்கள்... தேவனுடைய ஊழியக்காரன், அதைக் கொண்டு தன்னை பெரியவனாக காண்பித்துக் கொள்வதில்லை, நீங்கள் பாருங்கள், அது தான் இது. அப்படியானால் அது வேடிக்கை காட்டுவதாய் உள்ளது. 354 நாம் ஜெபம் செய்யும் போது அடையாளத்தையும் சமர்ப்பிக்கிறோம். நாம் முழுவதுமாக கீழ்ப் படிந்துள்ளோம் என்பதை அது காண்பிக்கிறது. 355 பவுல், "இரத்தம் பேசுகிறது" என்று நமக்குச் சொல்லுகிறான். அதாவது இரத்தம் தானாகவே பேச முடியாது என்பதை எவரும் அறிவர். ஏனெனில் அது ஒரு இராசயாணம் மாத்திரமே, அது சரியா-? எத்தனை பேர் அதை அறிந்து இருக்கிறீர்கள்-? [சபையார் “ஆமென்” என்கின்றனர்- ஆசி.) ஆனால் இரத்தம் பேசக்கூடும் என்பதையும் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்-? [ஆமென்) நீங்கள் அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால், ஆதியாகமம்.4:10. தேவன் காயீனிடம், "உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே-?" என்று கேட்டார். பின்பு அவர், "அவனுடைய இரத்தம் உனக்கு எதிராக பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது” என்றார். அது சரியா-? அவனுடைய இரத்தம் பேசுகின்றது. அல்லேலூயா-! தேவன், "அவன் எங்கே-?" என்று கேட்டார். காயீனோ, "என் சகோதரனுக்கு நான் காவலாளியோ-?" என்றான். 356 அவர், “அவனுடைய இரத்தம் என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. அவனுடைய இரத்தம் என்னை நோக்கிக் கூப்பிடுகிறது" என்றார். அது ஒரு அடையாளம். ஆபேல் கொல்லப்பட்டான் என்பதற்கு அது ஓர் அடையாளம். அவனுடைய இரத்தம் காயீனுக்கு விரோதமாக கூப்பிட்டது. 357 இப்பொழுது, அது ஆதியாகமம் 4:10-லும், அதன் பின்னர் எபிரெயர் 12:24 லும் தொடர்ந்து வாசிக்கலாம். எபிரெயர்.10, 12:4-ல் "ஆபேலின் இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளை பேசுகிற இயேசுவின் இரத்தம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 358 பாருங்கள், ஆபேல், அவன் ஒரு நீதிமானாயிருந்தான். அவர் மரித்தான். அவன் குற்றமற்றவனாக மரித்தான். ஏனென்றால் அவன் அந்த வழியில் இருந்தான். அவன் பெற்றிருந்த உண்மையான வெளிப்பாட்டிற்காக நின்று கொண்டிருந்த அந்த வழியில் இருந்தான். அவன் பேசினான். அவனுடைய இரத்தம் கூப்பிட்டது. நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் காயீனுக்கு விரோதமாக கூப்பிட்டது. 359 ஆனால் இயேசுவின் இரத்தமோ கூப்பிடுவது மாத்திரமல்லாமல், அது மீட்கவும் செய்தது. ஆமென்-! "ஆபேலின் இரத்தத்தைக் காட்டிலும் அது மேலானவைகளை பேசுகின்றது." அது உங்களை குமாரரும் குமாரத்திகளுமாகச் செய்கின்றது. அது தேவனுடைய கோபத்தினின்று உங்களை மறைக்கிறது. பாருங்கள்-? ஆபேலின் இரத்தம் காயீனை மறைக்க முடியவில்லை. ஆனால் இயேசுவின் இரத்தமோ அதைச் செய்ய முடியும். ஆமென்-! 360 எனவே, பண்டைய காயீனே, இன்றைக்கு வெளியே வா, தேவனுடைய வார்த்தையை நீ துன்புறுத்தி, "அற்புதங்களின் நாட்கள் முடிவடைந்து விட்டது" என்றும், "இவை அர்த்தமற்றவை" என்று கூறினால்... 361 அது கூப்பிடுகிறது, நீங்கள் பாருங்கள். இயேசுவின் இரத்தம் கூப்பிடுகிறது, ஆனால் நீங்கள் அதை ஏற்றுக் கொண்டால், அதில் மன்னிப்பு உண்டு. நாம் அதன் பேரில் இன்னும் சிறிது நேரம் பேசி தரித்திருக்க முடிந்தால் நலமாய் இருக்கும். பாருங்கள் "இயேசுவின் இரத்தம் நன்மையானவைகளைப் பேசுகின்றது." 362 பாதுகாப்பிற்காக விசுவாசியுங்கள்.அதை பெற்றுக்கொள்ளுங்கள், பாருங்கள், விசுவாசியுங்கள். அதற்காக நீங்கள் விசுவாசிக்க வேண்டும். பாருங்கள், உங்களுடைய சொந்த பாதுகாப்பு உங்களுக்கு வேண்டும், உங்களுடைய பாதுகாப்பிற்காக நீங்கள் விசுவாசித்து, பின்பு முழு குடும்பத்திற்காகவும் அந்த அடையாளத்தை பூண்டு கொள்ளுங்கள். புரிகிறதா-? நீங்களோ, "நான் எப்படி செய்ய முடியும்-?" என்று கேட்கலாம். அதை உரிமை கோருங்கள்-! அது உங்கள் மீது கிரியை செய்யும் போது, நீங்களும் வார்த்தையும் ஒன்றாகி விடுகின்றீர்கள், ஆமென்-! ஆமென்-! புரிகிறதா-? பாருங்கள். அது உங்கள் இருவருக்காகவும் கிரியை செய்கின்றது. நீங்களும் வார்த்தையும் ஒன்றாயிருக்கிறீர்கள், பின்பு அதை உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள், உங்களுடைய அன்பார்ந்தவர்கள் மீது அதை வையுங்கள். 363 ராகாப் செய்தது போல், அவள் அந்த அடையாளத்தை தன்னுடைய தகப்பனாரின் மீது வைத்தாள். அவள் அதை தன்னுடைய தாயாரின் மீது வைத்தாள், அவள் அதை தன்னுடைய சகோதர, சகோதரிகளின் மீதும் வைத்து, அவர்கள் அனைவரையும் உள்ளே கொண்டு வந்தாள். 364 நீங்கள் அதை வைத்து, "கர்த்தாவே, என் மகன் பின்னே நான் செல்கின்றேன். என் மகள் பின்னால் நான் செல்கின்றேன். நான் அவளை உரிமைகோருகிறேன்-! சாத்தானே, நீ அவளை கட்டவிழ்த்துவிடு. நான் அவள் பின்னால் வருகிறேன். என்னுடைய அடையாளத்தை, பரிசுத்தாவியை வைக்கிறேன். ஓ, எனக்குள் வாசம் செய்யும் பரிசுத்தாவியே, என் மகளை அங்கே பிடித்துக் கொள்ளும். என் மீது உள்ள உம்முடைய அபிஷேகத்தோடு இப்பொழுது நான் அவளிடம் செல்கிறேன்," என்று வேண்டுதல் செய்யுங்கள். அவர் அதைச்செய்வார். ஆமென். 365 அதைத் தான் எகிப்திலும் அவர்கள் செய்தனர். அதைத் தான் எரிகோவிலும் அவர்கள் செய்தனர். 366 நீங்கள் வேறொரு வசனத்தையும் படிக்க வேண்டும், அது அப்.16:31. பவுல் சிறைச் சாலைக்காரனிடம், "நான் இந்த மணிநேரத்தின் செய்தியாளன் என்பதை விசுவாசிப்பாயாக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்'' என்று சொன்னான். அது சரியா-? உங்கள் வீட்டாருக்காக நீங்கள் விசுவாசியுங்கள். அவர்கள் அனைவரையும் அடையாளத்தின் கீழ் கொண்டு வாருங்கள். "இப்பொழுது பரலோகத்தின் தேவன் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அது நியாயத் தீர்ப்பிற்கு முன்பாகும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-?” “ஆம்-! நான் என்ன செய்ய வேண்டும்-?" 367 அப்பொழுது அவன், “எழுந்து ஞானஸ்நானம் பெற்றுக்கொள்” என்றான். பவுல் சிறைச் சாலைக்காரனை அழைத்துச் சென்று, அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான், மேலும், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று அவனிடம் கூறினான். 368 யாரை விசுவாசிக்க வேண்டும்-? உங்கள் வீட்டாருக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அந்த அடையாளத்தை உங்கள் வீட்டாரின் மீது போடுங்கள். 369 நீங்கள் அதை உங்களுடைய வீட்டாரின் மீது போடும் போது, அப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன-? வீட்டில் காணப்படும் எல்லா குப்பையையும் அகற்றுங்கள். எல்லாக் குட்டைப் பாவாடையும், அரைக்கால் சட்டையும், சீட்டுக் கட்டையும், சிகெரட்டுகளையும், தொலைக்காட்சிகளையும், இது போன்ற எல்லாவற்றையும் வாசலுக்கு புறம்பே தூர எறியுங்கள். ஏனெனில் நீங்கள் அடையாளத்தைப் போடும் போது, இந்தக் காரியங்களை அது சகித்துக் கொள்ளாது. ஆம், ஐயா. அவையனைத்தையும் அகற்றுங்கள். நடனங்களையும், விருந்துக் களியாட்டங்களையும், சுழன்று ஆடும் ராக் அண்டு ரோல் நடனங்களையும், கீழ்த்தரமான செய்தித்தாள்களையும், அந்த விதமான உலகக் காரியங்கள் அனைத்தையும் வாசலிலிருந்து அப்புறப்படுத்தி, உதைத்துத் தள்ளி விட்டு, "இங்கே சுற்றியுள்ள இந்த இடத்தை நாங்கள் சுத்தமாக்குகிறோம்" என்று கூறுங்கள். 370 யாக்கோபு செய்தது போன்று, அவன் மனைவியிடமும் மற்றவர்களிடமும், "உங்கள் ஆடைகளை துவைத்து சுத்தம் பண்ணுங்கள். அன்னிய தேவர்களை அகற்றி விடுங்கள்" என்றான். ஆமென்.... 371 யோசுவா யோர்தானைக் கடப்பதற்கு முன்பு என்ன சொன்னான் என்று உங்களுக்கு தெரியுமா-? அவன், "உங்கள் ஆடைகளை துவைத்து சுத்தம் பண்ணுங்கள். உங்கள் மனைவிகளிடம் சேராதிருங்கள், ஆயத்தப்படுங்கள். மூன்று நாட்களுக்குள் நாம் யோர்தானைக் கடந்து விடுவோம்" என்று சொன்னான். ஆமென். அவன் ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான், அடையாளத்தைப் போட்டுக் கொண்டிருந்தான். ஆமென்-! அதுதான். 372 ஆயத்தமாகுங்கள் அடையாளத்தைப் போடுங்கள். விசுவாசியுங்கள், சுத்தப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளும், உங்கள் குடும்பமும், உங்களுடைய அன்பார்ந்தவர்களும், அதை உங்களில் காணட்டும். அது உண்மை. அது பலனை உண்டு பண்ணும். ஆம் ஐயா-! 373 ஆகையால் சீரிய யோசனையோடும், விசுவாசத்தோடும் ஜெபத்தில் அந்த அடையாளத்தைப் போடுங்கள்; அன்புடன் அதைச் செய்யுங்கள். அப்பொழுது அது நிறைவேறப்போகிறது, அது நிறைவேறப்போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவ்வளவு தான். நம்பிக்கையோடு அந்த அடையாளத்தைப் போடுங்கள், அது உதவப் போகிறது என்று விசுவாசியுங்கள். நீங்கள் அந்தப் பிள்ளையுடன் பேசும் போது, உங்களுடைய கணவனிடத்தில் பேசும் போது, உங்கள் மனைவி இடத்தில் பேசும் போது, இந்த அன்பார்ந்தவரிடம் பேசும் போது, அது உதவி செய்யப் போகிறது என்று விசுவாசியுங்கள். அப்படியே அங்கே நின்று, "கர்த்தாவே, அவர்களை நான் உரிமை கோரியிருக்கிறேன். அவர்கள் என்னுடையவர்கள். கர்த்தாவே, உமக்காக நான் அவர்களைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன்," என்று சொல்லுங்கள். 374 அதைப் போட்டு, உங்களை சுற்றிலும் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள், அவர்கள் அதற்குள் அப்படியே வந்து விடுவார்கள். புரிகிறதா-? ஓ, நீங்கள், நீங்கள், நீங்கள் அந்த அடையாளத்தை பெற்றிருந்தால், உங்களைச் சுற்றிலும் ஒரு நல்லதொரு சூழ்நிலை உருவாக்கிக் கொள்வீர்களானால், அப்பொழுது நீங்கள் நடந்து செல்லும் போது, நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று ஜனங்கள் அறிந்து கொள்வார்கள். நீங்கள் அவர்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைக் கூற வேண்டுமென்பதை அவர்கள் விரும்புவார்கள். உங்கள் வார்த்தையை அவர்கள் நம்புவார்கள். நீங்கள் என்ன கூறினாலும், அவர்கள் அதைப் பற்றிக் கொள்வார்கள். புரிகிறதா-? அது தான். 375 அந்த அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் அதனுடன் நடந்து செல்லுங்கள். உங்கள் வீட்டாரை உரிமை கோருங்கள். இப்பொழுதே நீங்கள் அதைச் செய்ய வேண்டும். இது சாயங்கால நேரமாயிருக்கிறது. இப்பொழுது நீண்ட நேரமாக நீங்கள் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது இது சாயங்கால நேரம். அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளும் சமயம் இதுவே. இந்நாட்களில் ஒன்றில் கோபாக்கினை தாக்கும். அப்பொழுது அது மிகவும் காலதாமதமாயிருக்கும். புரிகிறதா-? நம்பிக்கையுடன் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். 376 நீங்கள் அதை படிக்க வேண்டுமென்று விரும்பினால், இங்குள்ள ஒன்றை வாசியுங்கள், நீங்கள் அதைக் குறித்து வைத்துக் கொள்ள விரும்பினால், நாம் இதை வாசிப்பதற்காக எபேசியர் 2:12 என்று என்னுடைய வேதத்தில் குறித்து வைத்துள்ளேன். கவனியுங்கள், இப்பொழுது எபேசியர் 2:12-ல், நீங்கள் அதை வாசிக்கும் போது, அது இதைக் கூறுகிறது, "நான் செத்த கிரியைகளை சேவிப்பதில்லையென்றும், ஜீவனுள்ள கிரியைகளைக் கொண்டே ஜீவனுள்ள தேவனை நாம் சேவிக்கிறோம் என்று அது குறிப்பிடுகின்றது." ஆமென். ஓ, என்னே-! ஓ, ஜீவனுள்ள கிரியைகள், ஜீவனுள்ள அடையாளங்கள். நீங்கள் ஜீவனுள்ள அடையாளங்களில் விசுவாசங் கொண்டுள்ளீர்களா-? [சபையார் "ஆமென்" என்கின்றனர். - ஆசி.) வேண்டுமானால் எபிரெயர் 9:11-14-கை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஜீவனுள்ள அடையாளங்கள், ஜீவனுள்ள கிரியைகள், அவைகளைப் பொருத்திக் கொள்ளுங்கள். 377 செத்த பிரமாணங்களையல்ல. “என் மகனை ஒரு சபைக்கு கொண்டு சென்று, அவனை அதில் சேர்க்க பிரயாசப்படுவேன்,” என்று நீங்கள் கூறலாம். 378 இங்கே ஒரு நல்ல கிறிஸ்தவ பையன் ஒரு நல்ல நண்பன். பழைய நண்பன், ஒரு உண்மையானவன். அவன் இங்கு வந்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டான். அவனுடைய தாயார் அவனிடம், "நீ ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இருந்திருந்தால், நீ ஒரு பெரிய சபைக்கு சென்று இருந்து இருக்கலாம் என்றே நான் விரும்புகிறேன்" என்று கூறினாளாம். பார்த்தீர்களா-? பாருங்கள், அவன் பழைய செத்த பிரமாணங்களையும் மற்றக் காரியங்களையும் விரும்பவில்லை. புரிகிறதா-? 379 நாம் செத்த பிரமாணங்களையும், செத்த தெய்வங்களையும் ஆராதிப்பது இல்லை. ஜீவனுள்ள தேவனையே நாம் ஆராதிக்கிறோம். அவருடைய இரத்தம் அங்கு சிந்தப்பட்டது. நாமும் கூட ஜீவிக்க வேண்டுமென்று கருதி அந்த அடையாளம் நம்மீ து பொருத்தப்பட்டது. ஆமென். ஆம் ஐயா-! 380 சில செத்த பிரமாணங்களை சேவிக்க வேண்டாம். அடையாளம் ஒன்று இருக்கின்றது என்பதையே கூட அவர்கள் மறுதலிக்கின்றனர். "அற்புதங்களின் நாட்கள் முடிவடைந்து விட்டது என்றும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற அப்படிப்பட்ட காரியமும் கிடையாது” என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஏன் அதைப் போன்ற ஸ்தாபனங்களைச் சேர வேண்டும்-? புரிகிறதா-? அப்படிச் செய்ய வேண்டாம். 381 அடையாளத்தைப் பெற்றுக் கொண்டு, அதன் பின்னர், ஜீவனுள்ள கிரியைகளுக்காக, ஜீவனுள்ள அடையாளங்களுக்காக "ஜீவனுள்ள தேவனை சேவியுங்கள்." அந்த அடையாளத்தை உங்கள் மீது பெற்றுக் கொண்டு, பிணியாளிகளை சொஸ்தமாக்குதல், மரித்தோரை உயிரோடெழுப்புதல், வரப் போகும் காரியங்களை முன்னறிவித்தல், அந்நிய பாஷை பேசுதல், வியாக்கியானித்தல், ஒவ்வொரு முறையும் பிழையற்ற வியாக்கியானம் அளித்தல் போன்ற அடையாளங்களை உடையவராயிருங்கள். மேலும் தீர்க்க தரிசனங்கள், இந்த ஒரு குறிப்பிட்ட காரியம் சம்பவிக்கும் என்று கூறுதல், வானத்திலும், பூமியிலும் அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைக் காணுதல், ஆமென். என்ன நிகழப் போகின்றது என்று வேதம் கூறுகின்றதோ, அடையாளத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். 382 செத்த கிரியைகளைக் கொண்ட சபைகளுக்குப் போய், அவைகளில் சேர்ந்து கொள்ள வேண்டாம். ஏனெனில் அடையாளம் என்ற அப்படிப் பட்டக் காரியங்களில் கூட அவர்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அதை விசுவாசிக்கும் நாமோ, அது உண்மையென்று அறிவோம். ஆமென். அவர்களோ, "அடையாளம், என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அது, ஓ, ஓ, அது அர்த்தமற்றவை. அவர்கள் அங்கே பேசுகிற காரியமோ பைத்தியமாய் உள்ளது. ஏன், அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. பெண்களே, ஏன், ஓ, நீங்கள் இப்படி உடை உடுத்தி இருக்கிறீர்கள்-? வேதம் அவ்வாறு உரைத்துள்ளதால் அவ்வாறு உடுத்துகிறீர்கள். உங்களுடைய தலைமுடியை ஏன் வளர்த்து இருக்கிறீர்கள்-?" வேதம் அவ்வண்ணமாய் உரைத்துள்ளது. 383 அதுவே, அது தான் அந்த வித்தியாசங்கள். பாருங்கள். “அவைகளைத் தொடாதே, தீண்டாதே, ருசி பாராதே." அவர் தேவனாயிருக்கிறார். புரிகிறதா-? இப்பொழுது அது ஏதோ ஒரு காரியத்தைப் பொருட்படுத்துகிறது. 384 இப்பொழுது, அது பைத்தியக்காரத்தனம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை என்று விசுவாசிக்கும் நாமோ, அது அவருடைய ஜீவனுள்ள பிரசன்னம் என்று நாம் அறிந்திருக்கிறோம், அவர் பூமியில் இருந்த போது அவர் செய்த அதே காரியங்களை மீண்டும் இப்பொழுது செய்கிறார் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆமென். 385 “ஓ”, “அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தைக் காண்பதாக கற்பனை செய்கின்றனர்” என்று அவர்கள் கூறுகின்றனர். ஓ, இல்லை-! ஓ, இல்லை-! நாங்கள் எதையும் கற்பனை செய்கிறதில்லை. 386 பவுலும் கூட அதைக் கற்பனை செய்ததாக அவர்கள் எண்ணினர். அவ்வாறே இஸ்ரவேல் ஜனங்களும் கற்பனை செய்ததாக எகிப்தியர் எண்ணினர். ஆனால் அதுவோ அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழி நடத்திச் சென்றது. ஆம், ஐயா-! நாம்... 387 எபிரெயர்.13:8, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும், மாறாதவராய் இருக்கிறார்," என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் அதைக் குறித்துக் கொள்ளுங்கள், பாருங்கள், அதாவது அவர் மாறாதவராய் இருக்கிறார்." அது அதுவல்ல அதுவல்ல... அவர்களோ அதை கற்பனையென்று அழைக்கின்றனர். 388 நான் இந்த வேத வாக்கியங்களை இங்கு குறித்து வைத்திருப்பதனால் அது வேதாகமத்தில் எங்குள்ளது என்று என்னால் அறிய முடிகிறது. எனவே அந்த பாகத்திற்கு நான் வேகமாய்ச் செல்ல முடிகிறது. புரிகிறதா-? 389 அது அவருடைய ஜீவனுள்ள பிரசன்னம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனென்றால் அவர் முன்பு செய்தவைகளையே இன்று ஆவியின் ரூபத்தில் செய்கிறார். இப்பொழுது அது உங்கள் ஸ்தாபன பிரமாணங்களுக்கும், ஸ்தாபனங்களுக்கும் வழி நடத்தினால், அது கிறிஸ்துவினால் உண்டானதல்ல என்பதை நாம் உடனே அறிந்து கொள்ளலாம். அது சரியா-? [சபையார், "ஆமென்" என்கின்றனர் ஆசி.) நான் உங்களை ஒரு ஸ்தாபன உபதேசத்திற்கோ அல்லது வேறு எதற்கோ வழி நடத்தினால், நான் ஸ்தாபனத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒருவனாய் இருப்பேன். ஆனால் நான் உங்களுக்கு உங்களுடைய பிரமாணங்களைக் கொண்டு வரவில்லை. நான் உங்களுக்கு ஸ்தாபனங்களைப் பற்றிப் போதிக்கவில்லை. ஆனால் தேவனுடைய வார்த்தையை நான் உங்களுக்கு போதிக்கிறேன். அது வெளிப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் உயித்தெழுந்த வல்லமையாய் உள்ளது. அது எனக்கு மாத்திரமல்ல. அதை விரும்பும் யாவருக்கும் உரியது. புரிகிறதா-? அதாவது நீங்கள்.... 390 நீங்கள் என் சகோதரர். நான் ஒரு மகத்தான நபரல்ல. நீங்கள் ஒரு சிறிய நபருமல்ல. நாம் அனைவரும் தேவனில் சிறியவர்களாகவே இருக்கிறோம். புரிகிறதா-? நாம் அவருடைய சிறு பிள்ளைகளாய் இருக்கிறோம். நாம் உண்மையாகவே அறிந்திருக்க வேண்டியவைகளை நமக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர் விரும்புகிறபடி அவர் நம்மை விட்டு விடுகிறார் என்பதை அறிவோம். ஆனாலும் அவருடைய ஆசீர்வாதங்களில் சிலவற்றை நாம் அறிந்து இருப்பதனால் அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இதை நான் எனக்கென்று வைத்துக் கொள்ளாமல், நான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். புரிகிறதா-? நீங்கள் அதற்குள் இருக்க வேண்டும் என்றும், நீங்கள் இந்த அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் பெறாமலிருந்தால். உங்களில் அநேகர் உங்களில் அநேகர் அதை ஏற்கெனவேப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் உங்களில் சிலர் அதைச் செய்யாமலிருந்தால்.... 391 பாருங்கள், நான் ஒலிநாடாவைக் கேட்டவர்களிடத்திலும் கூட பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். உங்களில் அநேகர் இதை... இதை இந்த சபைக்கு இங்கு நான் கூறவில்லை. நாமெல்லோரும் வெளியே வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த ஒலிநாடாவை கோடிக்கணக்கானவர் கேட்கலாம். பாருங்கள். இது ஒரு ஊழியம். யாராகிலும் ஒருவர் இந்த ஒலிநாடாவுடன் மெல்ல நழுவி எரிகோவை அடையலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இச்செய்தி அங்கு செல்லும் போது, அந்த முன்குறிக்கப்பட்ட வித்தை அது பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பாருங்கள், ஏனெனில் கோபாக்கினையோ வந்து கொண்டு இருக்கிறது. 392 இது ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேவன் தம்முடைய வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட வார்த்தையின்படி இயேசுவை உயிரோடு எழுப்பினார் என்பதை நிரூபிக்கின்றது. "இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது. எகிப்து, எரிகோ இவை இன்னும் கொஞ்சக் காலத்திலே என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள், "நான்," "நான்" உங்களோடு கூட இருப்பேன். நான் என்பது எப்பொழுதுமே குறிப்பிடப்படுகிற தனிப்பட்ட பிரதிபெயர், பாருங்கள். "நானே அந்த அடையாளம். என் உயிர்த்தெழுதலே அடையாளமாயுள்ளது. நான் செய்யும் கிரியைகள் உங்களை கண்டு பிடித்து, என்னை உங்களுக்குள் அடையாளம் கண்டு கொள்ளச் செய்யும்." 393 சாயங்கால செய்தி சென்று கொண்டிருக்கும் போது, "லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவே, மனுஷ குமாரன் வருகையிலும் நடக்கும்." 394 ஏனெனில், “சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். சாயங்கால நேரத்தின் போது வெளிச்சம் தோன்றும்." ஓ, தேவனுக்கு மகிமை-! நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து ஓடி மதிலைத் தாண்ட முடியும் என்பது போன்ற உணர்வு எனக்கு தோன்றுகிறது. புரிகிறதா-? பார்த்தீர்களா-? “சாயங் காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” அது சரி. தீர்க்கதரிசி அவ்விதம் கூறியுள்ளார். 395 “நான் உங்களோடு கூட இருப்பேன். நான் லூத்தரின் காலத்தில் இருப்பேன். நான் வெஸ்லியின் காலத்தில் இருப்பேன். நான் பெந்தெகொஸ்தேயின் காலத்தில் இருப்பேன். ஆனால் சாயங்கால நேரத்தின் போது, வெளிச்சம் உண்டாகும்." ஸ்தாபனங்கள் அனைத்தும் ஒளி மங்கிப் போகும். அப்பொழுது அடையாளம் பொருத்தப்படும். அது வரைக்கும் இருதயத்தில் உத்தமமாய் இருந்தவர் அனைவரும், நீங்களில்லாமல் அவர்கள் பூரணராக முடியாது. ஆனால் உங்களுக்குள்... 396 அது காலைக் கொண்டு செல்ல தலையானது செல்ல வேண்டியது போன்றே உள்ளது. கையைக் கொண்டு செல்ல, தலையே செல்ல வேண்டும். இருதயத்தைக் கொண்டு செல்ல தலை தான் செல்ல வேண்டும். வாயைக் கொண்டு செல்ல தலையே செல்ல வேண்டும். பாருங்கள், தலை தான் செல்ல வேண்டும். 397 இப்பொழுது இரத்தம் வீட்டு வாசலின் நிலைக் கால்களிலும், பாருங்கள், மேற் சட்டத்திலும் தெளிக்கப்பட்ட காலத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். “அந்த இரத்தத்தை ஒரு அடையாளமாயிருக்கிறதை நான் காணும்போது, நான் உங்களைக் கடந்து போவேன்.' 398 இப்பொழுது என்னால் முடிந்தளவு நான் துரிதமாக முடிக்க முயல்வேன். இன்னும் 5-நிமிடங்களில் அல்லது 10 நிமிடங்களில் நாம் முடித்து விடுவோம். 399 தேவன் இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதை இது நிரூபிக்கின்றது. நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா-? (சபையார், "ஆமென்" என்கின்றனர். - ஆசி.) இன்றைக்கு அவர் நம் மத்தியில் உயிரோடு இருக்கிறார். 'நான்' என்று சொன்ன அந்த கிறிஸ்து. உலகத்தின் முடிவு பரியந்தம் நம்முடன் கூட இருக்கிறார் என்று அவ்வாறே அவர் முடிவாக கூறியுள்ளார். அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின்படி, "நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களுடன் கூட இருப்பேன்” என்றார். அவர் அதை வாக்கு அளித்துள்ளார். "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்." நமக்கு அது அர்த்தமற்றதாக இருக்கவில்லை. அது அடையாளம். அது தான் அடையாளம். 400 நாம் இந்த புனிதமான இரத்த பலியை ஏற்றுக் கொள்கிறோம். நாம் அவருடைய பரிசுத்தமாக்கப்பட்ட இரத்தத்தை ஏற்றுக் கொள்கிறோம். அவர் நமக்கு ஜீவனை, அடையாளத்தை, அவருடைய வாக்குத்தத்தின் ஒரு முத்திரையை அளிக்கிறார். எபேசியர் 4:30, "இரத்தத்தை துக்கப்படுத்தாதிருங்கள் என்றா கூறியுள்ளதா-? இல்லையே. நீங்கள்... தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்" என்று உரைத்துள்ளது. (சபையார் "முத்தரிக்கப்பட்ட” என்கின்றனர் ஆசி.) உடன்படிக்கைப் பண்ணப்பட்டுள்ளது, எடுத்துப்போட நீங்கள் உடன் படிக்கைப் பண்ணப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தான் ஒரு அடையாளம், பரிசுத்த ஆவியே அந்த முத்திரையாய் இருக்கும். ஏதோ ஒரு காரியம் ஒரு முத்திரையினால் முத்தரிக்கப்படும் போது, அந்த முத்திரையை நீங்கள் உடைக்காது இருப்பது மேலாகும். நீங்கள் அதை உடைக்க முடியாது, தேவனுடைய முத்திரையை நீங்கள் உடைக்க முடியாது. புரிகிறதா-? ஏன் என்றால் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கு என்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." மீட்கப்படும் நாளன்று சரீரம் உயிரோடெழுந்திருக்கிறது. 401 அது ஒரு வித்து, அந்த வித்து நித்திய ஜீவனைக் கொண்டு உயிர் பெறுகின்றது என்பதற்கு அது அடையாளமாயுள்ளது. "ஸோயீ, என்னுடைய சொந்த ஜீவன்-!' நான் அதைக் கடைசி நாளில் எழுப்புவேன்." நீங்கள் நடந்து செல்லும் போது, கிறிஸ்துவின் ஜீவன் உங்களுக்குள் இருக்கிறதென்றும், நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள் என்னும் நம்பிக்கையும் பெற்று இருக்கிறீர்கள். "நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, விசுவாசிகளாகிய நம்மை இயேசு உயிரோடெழுப்பும் நாள் வரைக்கும் பரிசுத்தாவியினால் முத்தரிக்கப்பட்டு இருக்கிறோம். "ஓ, என்னே-! அடையாளத்தை தரித்துக் கொள்ளுங்கள். அது நமக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் பலியே ஜீவனை நமக்களிக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அது அவ்விதமே செய்கிறது. அப்பொழுது அது நமக்கு அந்த அடையாளத்தை அளிக்கிறது. அந்த அடையாளத்தை நாம் தரித்துக் கொள்கிறோம், அது முத்திரையாய் உள்ளது. நீங்கள் அதில் பங்கு கொள்பவராக இருங்கள். என்ன மகத்தான ஒரு காரியம்-! நாம் அதில் பங்கு கொண்டு, இந்த ஒரே ஆவியினாலே புராண.. இல்லை காணக்கூடாத சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு இருக்கிறோம். 402 நான் கூறின புராணம் என்ற அந்த வார்த்தை சரிதானா-? இல்லை, காணக்கூடாதது. காணக்கூடாத சரீரம், காணக்கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரம். பாருங்கள். பரிசுத்தாவியானவர், "நீ அதை தவறாக கூறிக்கொண்டு இருக்கிறாய்" என்று என்னிடம் கூறினார். பாருங்கள். ஒரு ஊமையைப் போன்ற எனக்கு, ஆனால் அவரோ, "நீ அதை தவறாக கூறிக்கொண்டிருக்கிறாய்” என்றார். நான், "புராணம்" என்று கூறிவிட்டேன் அது காணக்கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரம், பாருங்கள், காணக்கூடாத இயேசு கிறிஸ்துவின் சரீரம். நான்... நமக்கு கல்வி அவசியமில்லை . நமக்கு பரிசுத்தாவியே அவசியம். அவர் ஒருவரே நமக்கு அவசியம். பாருங்கள்-? அவர் ஒருவரே அவசியம். ஆம், பாருங்கள். அது எங்கோ எவருக்கே இடறலாய் இருந்திருக்கலாம். சில கல்வி அறிவுள்ளவர் களுக்கு அவ்வாறு இருந்திருக்கலாம், இப்பொழுது அதை அவர் சரியான விதத்தில் புரிந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன். காணக்கூடாத சரீரம்-! அது ஏதோ ஒரு காரனத்திற்காகவே இருக்கும். இல்லையென்றால் அவர் இவ்விதம் கூறி இருக்கமாட்டார். புரிகிறதா-? இப்பொழுது அவர் இங்கு இருக்கிறார். அவர் இங்கே பிரசங்க பீடத்தில் இருக்கிறார். அவர் அங்கு இருக்கிறார். அது அவர் தான். புரிகிறதா-? வ்யு-! 403 அவருக்குள் மரணம் என்பது கிடையாது. அவருக்குள் துக்கம் என்பது கிடையாது. அவருக்குள் களைப்பு என்பது கிடையாது. அவருக்குள் பாவம் என்பது கிடையாது. அவருக்குள் வியாதி என்பது கிடையாது. அவருக்குள் மரணம் என்பது கிடையாது. நாம் அவருக்குள் இருக்கிறோம். சாத்தான் உங்களுக்கு வியாதி போன்ற ஏதோ ஒன்றை உங்களிடத்தில் கொடுக்க முயன்றால், அப்பொழுது உங்கள் அடையாளத்தை எடுத்துக் கொண்டு, அதை தரித்துக் கொள்ளுங்கள். ஓ, என்னே-! உங்களுடைய அடையாளத்தை எடுத்து அதைத் தரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிரயத்திற்குக் கொள்ளப்பட்ட இயேசு கிறிஸ்துவின் ஒரு பொருளாய் இருக்கிறீர்கள். கிரயம் செலுத்தப்பட்டு விட்டது என்பதற்கு அறிகுறியாக அடையாளம் இருக்கிறது. சாத்தான் உங்களிடம் "நீ மரிக்கும் போது, நீ இழக்கப்படுவாய்” என்கிறான். 404 நீங்களோ அவனிடம், “நீ கூறுவது தவறு. நான் ஒரு பொருள் கிரயத்துக்கு பெற்றுள்ளேன். நானே கிரயத்திற்கு கொள்ளப்பட்ட ஒரு பொருளாயிருக்கிறேன். நான் அடையாளத்தை வைத்துள்ளேன்" என்று கூறுங்கள். "அடையாளம் என்பது என்ன-?” 405 அது என்ன என்பதை சாத்தான் அறிந்துள்ளான். அவனை ஏமாற்ற முயல வேண்டாம். அது என்ன என்பதை அவன் அறிவான். இப்பொழுது, இந்த போதகரில் சிலரிடம் நீங்கள் இதைக் குறித்து பேசும் போது, அவர்கள் உங்களோடு வாக்கு வாதம் செய்யக்கூடும். ஆனால் சாத்தான் ஒருக்காலும் வாக்கு வாதம் செய்யமாட்டான். அவனோ அதை நன்கு அறிந்துள்ளான். புரிகிறதா-? ஓ , ஆம், இயேசுவை சோதிக்க அவன் வந்த போது, இரண்டு மூன்று முறை அவன் தவறு செய்து விட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சாத்தான் அறிந்து உள்ளான். அந்த அடையாளத்தை அவனுக்குக் காண்பியுங்கள். அவன் பறந்தோடிப் போவான். ஆம். 406 காரணம், அது என்ன-? அது முத்தரிக்கப்பட்ட ஒரு பொருள். அவன் அதை உடைத்துத் திறந்து, அதிலிருந்து சரியில்லாத ஒன்றைத் தர முடியாது. "உன்னுடைய கரங்களை அதிலிருந்து எடுத்துவிடு-! நான் முத்தரிக்கப்பட்டு இருக்கிறேன்" என்று கூறுங்கள். ஓ. என்னே-! ஒரு முத்தரிக்கப்பட்ட பொருள்-! ஆம், ஐயா. நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள். அவருடைய வாக்குத் தத்தத்தின் பேரில் உங்களுக்குள்ள அசைக்க முடியாத விசுவாசத்தின் மேல் அந்த அடையாளத்தை வைத்து விடுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டுச் செல்வதைக் கவனிப்பீர்கள். "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." புரிகிறதா-? பார்த்தீர்களா-? அந்த அடையாளத்தை தரித்துக் கொள்ளுங்கள். அதற்காகவே அது உள்ளது. உங்களை சோதிப்பதற்காகவே சாத்தான் இருக்கிறான். அவன் எகிப்திலும் சோதிப்பதற்காகவே இருந்தான். 407 ஏன், உங்களுக்குத் தெரியுமா-? அந்த நாளிலே அந்த ராகாப், அந்த வேசி. அந்த வேசி, சிகப்பு கயிற்றை அங்கு தொங்க விட்ட போது, எரிகோவின் இராணுவ வீரர்கள் சிலர் அவளை ஏளனம் செய்து, "அந்த பைத்தியக்கார ஸ்திரீ அங்கு இருக்கிறாளே-! அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. பாருங்கள், அவள் எதை தொங்கவிட்டிருக்கிறாள் ஹா ஹா ஹா. ஏன்-? இப்படிப்பட்ட ஏதாகிலும் ஒன்றை இதற்கு முன்பு நீங்கள் கேட்டதுண்டா-? ஏன்-? அது ஒன்றுமில்லை' என்று அங்குள்ள வேத பண்டிதர் ஜோனிஸ் கூறினாரே-!" என்று கூறி இருப்பார்கள் என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அது முக்கியம் வாய்ந்ததாய் இருந்தது, ஏனெனில் தேவனால் அனுப்பப்பட்ட செய்தியாளன் அந்த செய்தியைக் கொண்டு வந்து, அவர்களிடம் கூறினார். 408 அவ்வாறே எகிப்தியர்களும், "பைத்தியம் பிடித்துள்ள அந்த பரிசுத்த உருளுபவரின் செயலைப் பாருங்கள். அவர்கள் இரத்தம் பூசுகின்றனர். ஹ,ஹா-! அதைக் கழுவுவது அவர்களுக்கு சிரமமாய் இருக்குமல்லவா-? ஓ, என்னே-! எவ்வளவு அழகான வீடுகள். அவர்கள் இரத்தத்தால் மூடுகின்றனரே-! ஓ, என்ன ஒரு துர்நாற்றம்-! இன்னும் சில நாட்களில் பயங்கரமான துர்நாற்றம் உண்டாகும் என்று நான் பந்தயம் கட்டுகிறேன். அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்தாது. ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா-? பரிசுத்த பிதா இன்னார் இன்னார் அவ்வண்ணமாய்க் கூறினார்" என்று சொல்லியிருப்பார்கள் என்பதனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? ஆனால் அது முக்கியம் வாய்ந்த செயலாக இருந்தது. அவ்வாறே அமைந்திருந்தது. அது ஒரு காரியத்தை பொருட்படுத்தினது. 409 விசுவாசிக்கின்ற நமக்கும் அது ஒரு காரியத்தைப் பொருட்படுத்துகிறது. பாருங்கள்-? இந்த வார்த்தையில் நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத உங்கள் விசுவாசத்தை நினைவு கூருங்கள். இப்பொழுது, நீங்கள் இனி மேல் ஏவாளைப் போலல்ல. பாருங்கள்-? தேவனுடைய வார்த்தையை சந்தேகித்து, சாத்தனுடன் ஒப்புரவாகுபவரில் நீங்கள் ஒருவரல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். புரிகிறதா-? ஏவாள் சாத்தானிடம், "கர்த்தர் இவ்விதம் கூறியுள்ளாரே” என்றாள். 410 அதற்கு சாத்தான், ஆனால், உனக்குத் தெரியுமா, உன்னைப் போன்ற ஒரு அருமையான நபருக்கு அதைப் போன்ற ஒரு காரியத்தை கர்த்தர் நிச்சயம் செய்யமாட்டார். ஓ, நீ மிகவும் அழகாயிருக்கிறாய். அவர் அவ்வாறு செய்ய மாட்டார்” என்றான். ஓ, ஆம், அவர் செய்வார். அவர் அதைச் செய்வதாக கூறினார். 411 “என் தகப்பனார் ஒரு ஊழியக்காரர், நானும் ஒரு ஊழியக்காரராய் இருந்து வருகிறேன்." என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அடையாளம் இல்லா விட்டால் நீங்கள் இழக்கப்படுவீர்கள். அடையாளம் இல்லா விட்டால் கோபாக்கினை உங்கள் மேல் தங்கியிருக்கும். பாருங்கள், அவ்வளவு தான். புரிகிறதா-? ஆம், அவர் அப்படிச் செய்வதாக கூறியுள்ளார். எனவே அவர் அதைச் செய்வார். அதுவே, அது தான் அதற்கு தீர்வாகிறது. அவர் அவ்விதம் செய்வாரென்று கூறுகிறார். ஓ, "அற்புதங்களின் நாட்களோ முடிவடைந்து விட்டது என்று நான் நம்புகிறேன்." 412 ஆம் அது முடிவடையவில்லையென்று அவர் கூறியுள்ளார். "நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறேன்" பாருங்கள். அவர் அவ்வாறே நிரூபித்து வருகிறார். 413 இப்பொழுது நமக்கு, நாம் அதை அறிவோம். அவர்களுக்கு, அவர்களோ அதை விசுவாசிப்பதில்லை. ஆனால் நாம் அதை விசுவாசிக்கிறோம். அது சாத்தியம் என்று நாம் அறிவோம். புரிகிறதா-? 414 நாம் அவருக்குள் இருப்பதால், நாம் வார்த்தையின் ஒரு பாகமாகி விடுகின்றோம். அப்பொழுது ஆவியாகிய அடையாளத்தை “நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” என்னும் தேவனுடைய வாக்குத் தத்தத்தின் மேல் நீங்கள் வைக்கிறீர்கள். 415 இன்றிரவு நடைபெறவிருக்கும் சுகமளிக்கும் ஆராதனைக்கு ஆயத்தம் ஆகுங்கள். பாருங்கள்-? அந்த அடையாளத்தை எடுத்து, தேவனுடைய வார்த்தையின் பேரிலுள்ள உங்கள் அசைக்க முடியாத விசுவாசத்தின் மேல் தொங்க விடுங்கள். நீங்கள் அவனைத் துரத்தி விடுவீர்கள். அதுவே, அந்தக் காரியமே அவனை வெளியே துரத்துகிறது. "ஏனென்றால் அவருக்குள் இப்படிப்பட்ட ஒன்றும் கிடையாது. 416 கடந்த சில வாரங்களில் நடந்த சில காரியங்களை, குறித்து நான் கண்டு இருக்கிறதைச் சற்று உங்களிடம் என்னால் சாட்சி பகர முடிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்-! பாருங்கள்-? பாருங்கள்-? ஓ, நான் எதைக் குறித்து சாட்சி பகரக் கூடும்-! 417 "இயேசு செய்த அற்புதங்களையெல்லாம் ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்" என்று லூக்கா கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்கள். 418 இந்த என் சொந்த ஊழியத்திலேயே அவர் செய்ய நான் கண்டுள்ளவைகளை எழுதி, பல புத்தகத் தொகுதிகளாக பீடத்தின் மேல் குவியல் குவியலாகக் குவித்தால், இடம் போதாது. என்னுடைய சொந்த ஊழியத்தில் அவர் செய்ய நான் கண்டு இருக்கிறவைகளை விவரமாக எழுதினாலும் இடம் போதாது. புரிகிறதா-? அவருக்கு தமது சொந்த ஊழியத்தைக் காட்டிலும் என்னுடைய ஊழியத்தில் அவருக்கு வெற்றி அதிகம். இப்பொழுது நினைவிருக்கட்டும், என்னைக் காட்டிலும் அவருக்கே வெற்றி. எனக்கல்ல அவருக்கே வெற்றி. மகிமை, அல்லேலூயா-! 419 நாசரேத்தில் அவர் செய்ததைக் காட்டிலும் ஜெபர்ஸன்வில்லில் அவருக்கு கூடுதல் வெற்றி. அவர் அந்தப் பொல்லாத பட்டனத்தில் செய்தது போல இந்த பொல்லாத பட்டணத்திலும் செய்தார். ஆமென்-! மகிமை-! காரணம், "அவரால் அங்கு அற்புதங்களைச் செய்ய முடியவில்லை; ஆனால் இங்கு அவரால் செய்ய முடிந்தது. முடிவில் அவர் இங்கு அவைகளைச் செய்தார். அவர் அதை இங்கு செய்தார். அதற்காக அவர் சிலரை எங்காவது நியமித்திருக்கலாம். ஆயினும், அந்த அற்புதங்களை, அவர், அவர் எப்படியாயினும் அவர்கள் மூலம் செய்தார். எனவே கப்பர்நகூம் இல்லை... இல்லை அல்லது நாசரேத்திலிருந்த, அவருடைய வெற்றியைக் காட்டிலும் இங்கு அவருக்கு வெற்றி அதிகம். இவ்வுலகில் அவர் இருந்த போது செய்த ஊழியத்தில் நிகழ்ந்த அற்புதங்களைக் காட்டிலும் இக்கூடாரத்தில் அவர் செய்த அற்புதங்களின் எண்ணிக்கை அதிகம். அது உண்மை. அவரே அவைகளைச் செய்தார். அப்படியிருக்க, இப்பொழுது உலகின் மற்ற பாகங்களில் நிகழ்ந்த அற்புதங்களைக் குறித்து என்ன-? ஓ, என்னே-! இப்பொழுது அவை எல்லாவற்றையும் அவரே செய்தார். 420 இப்பொழுது "அவர்" அவைகளைச் செய்தார் என்பது நினைவிருக்கட்டும். இப்பொழுது நான் அவைகளைச் செய்ததாக ஒரு போதும் கூறிக் கொள்ள வில்லை, பாருங்கள், இல்லை, ஏனெனில் நான் அவைகளைச் செய்யவில்லை. நான் செய்யவில்லை. நான் அவரை நேசித்து, என்னையே அவருக்கு ஒப்புவித்தேன். அவர் கூறினதை நான் உங்களுக்கு எடுத்துரைத்தேன். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களிடையே சென்று கிரியை செய்தார். எனவே அவர் கூறினதை அவர்கள் விசுவாசித்தனர். ஆகையால் அவர் கிரியை செய்தார். அவ்வளவு தான். 421 நாம் அனைவரையும் அதை விசுவாசிக்கச் செய்ய அவரால் முடிந்திருந்தால் நலமாயிருக்குமே-! இப்பொழுது நம் எல்லோரையும் அவர் விசுவாசிக்கச் செய்ய முடிந்திருந்தால், அவர், இப்பொழுது என்ன செய்வார்-? அப்பொழுது பட்டிணத்தை சுற்றிலும் பலவீனம் உள்ளவர் ஒருவராவது இருந்திருக்க மாட்டார்கள். அது உண்மை. அவர் எல்லோரையும் அதை விசுவாசிக்கச் செய்ய முடிந்திருந்தால், அவை யாவும் முடிவு பெற்றிருக்கும். புரிகிறதா-? 422 அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் பேரிலுள்ள உங்கள் அசைக்க முடியாத விசுவாசத்தின் மேல் உள்ள அந்த அடையாளத்தை பற்றிக் கொள்ளுங்கள், அப்பொழுது சாத்தான் உங்களை விட்டு போய்விடுவான். இப்பொழுது, நான் இப்பொழுது முடிக்கப் போகிறேன். 423 ஒரு சமயம் தேவன் வேறொரு அடையாளத்தை இவ்வுலகிற்கு தந்தார். அது ஒரு வானவில்லாய் இருந்தது. உங்களுக்கு அது நினைவிருக்கிறதா-? [சபையார், "ஆமென்” என்கின்றனர்.-ஆசி.) அந்த அடையாளத்துக்கு அவர் எக்காலத்தும் உண்மையாக இருந்து வந்துள்ளார். ஏனெனில் அவர் அதை ஒரு அடையாளமாக கொடுத்திருந்தார். இத்தனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த அடையாளத்தைக் காண்பிக்க அவர் ஒரு போதும் தவறியதேயில்லை. அது சரி தானே-? ஆமென்." ஏன்-? அவர் அதை கனப்படுத்தினார். அவர் அதைக் கொடுத்தார். அவர் இவ்வுலகை இனி ஒரு போதும் வெள்ளத்தினால் அழிப்பது இல்லை என்பதன் அறிகுறியாக அவர் உலகிற்கு ஒரு அடையாளத்தை அளித்தார். அந்த நாள் முதற்கொண்டு அவர் அந்த அடையாளத்தைக் காண்பித்துக் கொண்டே வந்துள்ளார். 424 காற்றிலுள்ள சில மூலப் பொருட்கள் வானவில்லைத் தோன்றச் செய்கின்றன. மழை பெய்து முடிந்தவுடன் சூரியன் உதயமாகும் போது, அந்த வானவில் காணப்படுகின்றது. சூரியன் மழை நீரை உலரச் செய்கின்றது. எனவே மழை பெய்து இப்பூமியை மறுபடியும் அழிப்பதற்கு அங்கு போதுமான அளவு தண்ணீர் இனிமேல் இருக்காது என்பதை நிரூபிக்கவே அவர் வானவில்லை அங்கு வைத்தார். அது அவருடைய உடன்படிக்கை. அது ஒரு அடையாளம். அவர் "அதை உங்களுக்கு ஒரு அடையாளமாகத் தருகிறேன்" என்று கூறினார். 425 அவருடைய அடையாளத்தை அவர் கனப்படுத்தினார். நோவாவின் நாட்களில் அவருடைய அடையாளத்தை அவர் கனப்படுத்தினார். இன்றைக்கும் அவர் அதைக் காண்பிக்கிறார். எகிப்தில் அவர் அவருடைய அடையாளத்தையும் கனப்படுத்தினார். எரிகோவிலும் அவர் அதைக் கனப்படுத்தினார். இன்றைக்கும் அவர் அதை கனப்படுத்துகிறார். அந்த அடையாளம் காணப்படும் போதெல்லாம் அவர் தம்முடைய அடையாளத்தை எப்போதுமே கனப்படுத்துகிறார். 426 இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அவர் அந்த அடையாளத்தைக் காண்பிப்பதில் அவர் விருப்பம் கொண்டு உள்ளார். அவர் அதை ஒரு போதும் மறப்பதே இல்லை. அவர் தம்முடைய அடையாளத்தை மறப்பது இல்லை. இப்பொழுதும் உலகம் எவ்வளவு தான் மாறின போதும், அந்த வானவில் இன்னமும் அங்கே உள்ளது. பாருங்கள், அவர் அந்த அடையாளத்தை கனப்படுத்துகிறார். 427 அவர் அதை இப்பொழுதும் செய்கிறார், அவர் தம்முடைய அடையாளத்தை கனப்படுத்துகிறார். சபையானது எவ்வளவாக மாறினாலும், கவலைப்பட வேண்டியதில்லை. அது எவ்வளவு தான் இதைச் செய்தாலும் கவலையில்லை; தேவன் தம்முடைய அடையாளத்தை இன்னமும் கனப்படுத்துகிறார், அதை மாத்திரமே. அவர் செய்வதையும், அவர் கூறியதையும் கனப்படுத்த அவர் ஒரு போதும் தவறினதில்லை என்பதையே அது நமக்குக் காண்பிக்கிறது. நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். நாம் அதற்கு மதிப்பு கொடுக்கிறோம். நான் மதிப்பு கொடுக்கிறேன். 428 நமது விசுவாசத்தின் மேல் அவருடைய அடையாளத்தை வைத்து, சாத்தனுக்கும், அவனுடைய அவிசுவாச கோட்பாடுகளுக்கும், ஸ்தாபனங்களு க்கும் அதைக் காண்பித்து, அவருடைய வாக்குத்தத்தம் உண்மையென்றும், அவர் வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்று நாம் விசுவாசிக்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்றும் அவர் நம்மை எதிர் பார்க்கிறார். அதுவே சபையாய் உள்ளது. 429 நாம் அதைக் கூறுவது போல, அவர்கள் அங்கிருந்து முதல் அடிப்படையைக் காரியத்தைக்கூட பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதில் வியப்பு ஓன்றுமில்லை. இந்த விதமாக கூறுவதற்காக மன்னிக்கவும். அவர்கள் எங்கும் எதையும் பெற்றுக் கொள்ளாமல், ஆனால் ஒரு ஸ்தாபனத்திற்கு திரும்பிச் சென்று, நன்கு உடைகளை அணிந்து, மெருகேற்றப் பெற்ற நாகரிக மக்களோடு அறிவாளிகளோடு, கல்வியறிவு பெற்றுள்ளவர்களோடு சேர்ந்திருப்பதில் வியப்பு ஓன்றுமில்லை. அவர்கள் வேறெதையும் பெறுவதில்லை, ஏனென்றால், "நான் மெத்தோடிஸ்டு. நான் பிரஸ்பிடேரியன்" என்று அதைத் தான் அவர்கள் காண்பிக்கிறார்கள். அவர்களிடம் உள்ளது அவ்வளவு தான். 430 ஆனால் விசுவாசிகள் அந்த அடையாளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இயேசு கலிலேயாவில் அற்புதம் செய்யத் தொடங்கின முதற்கொண்டு, அவர் தொடர்ந்து பரிசுத்தாவி என்னும் அடையாளத்தை வெளிப்படுத்துவதினூடாக அவர் சபைக்கு மறுபடியும் அதை அனுப்பி இப்பொழுதும் அற்புதங்களைச் செய்து வருகிறார். ஏனென்றால், அது அப்போஸ்தலர்களின் கிரியைகள்," அல்ல, அவை அப்போஸ்தலர்களுக்கு உள்ளிருந்த பரிசுத்த ஆவியானவர் நடப்பித்த கிரியைகளாய் இருந்தன, அதுவே ஒரு அடையாளமாய் இருந்தது. 431 பேதுருவும் யாக்கோபும், பேதுருவும் யோவானும் அலங்கார வாசல் வழியாய் சென்ற போது, அவர்கள் இவ்விருவரின் மேலும் கவனம் செலுத்த வேண்டியவர்களாய் இருந்தார்கள். அவர்கள் படிப்பறியாதவர்களும் பேதமை உள்ளவர்களுமாய் இருந்தார்கள். மற்றவர்கள், "இவர்கள் இலக்கணமற்ற கொச்சையான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். நான் இதைக் குறித்து உங்களுக்கு விளக்கிக் கூறுவேன்" என்று கூறி இருந்திருப்பார்கள். புரிகிறதா-? ஜனங்களால் புரிந்து கொள்ள முடியாத இலக்கண பிழைகளோடு அவர்கள் பேசி இருந்து இருக்கலாம். அவர்கள் எந்த வித்தியாசமும் அறியாமல், வேதாகம கணிதம் ஒன்றையும் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இயேசுவுடன் கூட இருந்தவர்கள் என்று ஜனங்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களால் அந்த அடையாளத்தை பகிரங்கமாக வெளிப்படுத்த முடிந்தது. ஏனெனில் சிலுவையேற்றத்திற்கு முன்பு இயேசுவின் மேல் இருந்த அதே ஆவி தான், அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவர்கள் மேல் இருந்தது. ஆமென்-! 432 அதுவே அவரை எபிரெயர்.13:8 ஆக ஆக்குகின்றது, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." அவர் பிழைத்திருக்கிறார் என்று அதன் மூலமாகவே நாம் அறிந்து கொள்கிறோம். காரணம் ஏன்-? நாம் பிழைத்து இருக்கிறோம் என்பதை எப்படி அறிகிறோம்-? அவர் பிழைத்து இருக்கிறபடியினாலேயாகும். அவரைப்போல் நாம் இருப்பதனாலும், அவருக்குள் நாம் இருப்பதனாலும், நாம் பிழைத்து இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்கிறோம். அவர் “நான் பிழைத்திருக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்" என்று கூறியுள்ளாரே-! “மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்" என்றும், நானே அவர் என்றும் வெளிப்படுத்தின விசேஷத்தில் அவர் கூறியுள்ளார். நாம், நமக்குள் மரித்தும் அவருக்குள் பிழைக்கும் போது, நாம் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறோம். நமக்குள் இருக்கும் அவருடைய ஜீவன், மற்றெந்த ஜீவனையும் போன்றது. அவர் என்னவாயிருந்தார் என்பதை அது வெளிப்படுத்துகிறது. அதுவே அவரை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகச் செய்கின்றது. 433 இப்பொழுது அவர்கள், அதை மறுக்கும் போது, நீங்கள் எப்படி மறுக்க முடியும்-? "செத்த கிரியைகள்" என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா-? இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திலிருந்த நித்திய உடன்படிக்கை ஆகிய அவருடைய ஜீவனின் மூலம், ஜீவனுள்ள தேவனை ஆராதியுங்கள்... என்றே நான் குறிப்பிட்டுக் கூறுகிறேன். இப்பொழுது இப்படியே முடிவு வரை, நான்... நல்லது. நான் நாம் முடித்து விடலாம் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள், அவருடைய கிருபை, அவருடைய அன்பு என்னும் அடையாளத்தைக் காண்பியுங்கள்-! இப்பொழுது, இந்த அடையாளமில்லாமல்... 434 இப்பொழுது, அது ஒரு அடையாளம். அடையாளம் என்றால் என்ன-? கடன் செலுத்தி தீர்ந்துவிட்டது என்பதன் ஒரு அறிகுறியே அடையாளம். தேவைப்பட்ட கிரயம் செலுத்தப்பட்டு விட்டது. நம்முடைய இரட்சிப்பின் கிரயமே மரணமாய் இருந்தது, பாருங்கள், கிறிஸ்துவைத் தவிர வேறு யாராகிலும் அதைச் செலுத்த முடியாது. ஒரு ஸ்தாபனத்தின் ஆவியோ, ஒரு போப்பின் ஆவியோ, எந்த ஒரு மனிதனின் ஆவியோ அல்லது யாரோ ஒரு பரிசுத்தவானின் ஆவியோ அதைச் செலுத்த முடியாது. ஆனால் சபையின் மேலுள்ள இயேசு கிறிஸ்துவின் ஆவி, கிரயம் செலுத்தப்பட்டு விட்டது என்பதற்கும், தேவனுடைய எல்லா தேவை களையும் அவர் பூர்த்தி செய்து விட்டார் என்பதற்கும், நாமும் அவருக்குள் ஒன்றாய் இருக்கிறோம் என்பதற்கும் அடையாளமாயுள்ளது. “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்." 435 அடையாளத்தைத் தரித்துக் கொள்ளுங்கள். அவருடைய உயிர்தெழுதலின் அடையாளத்தைத் தரித்துக்கொள்ளுங்கள். நாம் நீதிமான்களாவதற்கென்று அவர் உயிரோடு எழுப்பப்பட்டார், நாமும் அவருடன் கூட உயிரோடு எழுந்து விட்டோம். அந்த அடையாளத்தின் ஐக்கியத்தின் கீழே இப்பொழுது நாம் அவரோடே கூட உன்னதங்களில் வீற்றிருக்கிறோம். 436 இஸ்ரவேல் ஜனங்கள் அடையாளத்தின் கீழிருந்த போது, தெருக்களில் கூக்குரல்கள் கேட்டன. அவர்கள் எதைக் குறித்தும் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அந்த அடையாளமாகிய இரத்தம் மாத்திரம் இருக்கிறதா என்று அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது. 437 அந்த ஒரே காரியத்தைக் குறித்து மாத்திரம் இப்பொழுது நாமும் கவலை கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். நண்பர்களே, வழியில் துன்பம் காத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் அதிக காலம் அது தாமதிக்காது. துன்பம் தாக்கக் காத்திருக்கிறது. அதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்கள் அடையாளம் பகிரங்கமாக காண்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பரிசுத்தாவியே அடையாளமாயுள்ளது. "நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு அவருடைய மகிமையின் பங்காளிகளாக்கப்பட்டிருக்கிறோம்," நம்முடைய தேசத்திற்கு, பரலோக வீட்டிற்கு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அணிவகுத்து சென்று கொண்டு இருக்கிறோம். 438 நீங்கள் அவரை நேசிக்கின்றீர்களா-? [சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி.) நீங்கள் அடையாளத்தை விசுவாசிக்கின்றீர்களா-? ["ஆமென்"} "ஓ, சகோதரன் பிரான்ஹாமே, இந்த அடையாளத்தின் கீழ் நான் வரவேண்டுமென்று எனக்காக ஜெபியுங்கள்" என்று எத்தனை பேர் கூற விரும்புகிறீர்கள்-? ["ஆமென்”] நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக 439 கர்த்தராகிய இயேசுவே, மிகுந்த கிருபையுள்ளவரே, உலகமானது பாவத்தில் இருந்த போது, யாரும் உதவி செய்ய முடியாத நிலைமையிலே இருந்த போது, தேவன் இரக்கத்தினாலே, பாவத்தைப் போக்கக் கூடிய அடையாளம் ஒன்று வரப்போகிறது என்பதை ஒரு முன்னடையாளத்தினால், முன் கூட்டியே காண்பித்தார். அது பாவத்தை மூடும் ஒன்றல்ல. ஆனால் அது பாவத்தை எடுத்துப் போடக் கூடிய ஒன்றாகும். இயேசுவும் ஏற்ற காலத்தில் வந்து, அவர் இரத்தத்தை சிந்தி, தம்முடைய சொந்த ஜீவனை அளித்து, எங்களுடைய பாவங்களுக்கான பாவநிவிர்த்தியை உண்டு பண்ணி, தமது ஜீவனைக் கொடுத்து மறுபடியுமாக பரிசுத்தாவியின் உருவத்தில் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பொழுது அவர் வரும் வரைக்கும் அதுவே சபையில் காத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு அடையாளமாய் அது உள்ளது. பேதுரு அப்போஸ்தலன் "வாக்குத் தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாகி இருக்கிறது" என்று கூறியிருக்கிறான். 440 கர்த்தாவே, உம்முடைய கிருபையினாலே, உம்முடைய ஒத்தாசையினாலே இச்செய்தியை கேட்கிற ஒவ்வொருவரையும் நான் உரிமை கோருகிறேன், நான் அவர்களை தேவனுக்காக உரிமை கோருகிறேன். கர்த்தாவே, இந்தக் காலையில் இங்கிருப்பவர்களுக்காகவும், இதை ஒலி நாடாவில் கேட்பவர்களுக்காகவும் நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இக்கடைசி கால வார்த்தையை கேட்க வேண்டிய முன் குறிக்கப்பட்ட வித்து எங்காகிலும் இருந்தால், அவர்கள் இனிமையாகவும் தாழ்மையாகவும் இப்பொழுது வந்து, தங்களுடைய வெற்றிப் பதக்கங்களை சிலுவை அண்டையில் வைத்துவிட்டு, அல்லது தேவனுடைய கிருபையின் வெற்றிச் சின்னம் என்று அழைக்கப்படும் அவர்களையே சிலுவையண்டை ஒப்புவிப்பார்களாக. அவர்கள் பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டு, அவர்கள் இந்த பூமியில் இங்கே தரித்திருக்கும் வரை, அவருடைய உயிர்த்தெழுதலில் உள்ள இயேசு கிறிஸ்துவின் ஜீவனை அடையாளமாக காண்பிப்பார்களாக. கர்த்தாவே, இதை அருளும். 441 கர்த்தாவே, இந்த வார்த்தைகளை, நான் அவைகளை சரியாக எடுத்து உரைக்காமல் இருந்து இருக்கலாம். நான் அவைகளை சரியாக எடுத்து உரைக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த வார்த்தைகளை எடுத்து, அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில், ஜனங்களை அதை குரோத மனப்பான்மையின்றி புரிந்துகொள்ளும்படி தந்தருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அன்பு திருத்துகிறதாய் உள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நாம் கர்த்தரின் வருகைக்கு அருகாமையிலுள்ள சமயத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதன் காரணமாகவே இவ்விதம் கூறுகிறேன் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படிச் செய்யும். காலம் சமீபமாயுள்ளது என்பதை எச்சரிக்கும் மகத்தான சிவப்பு விளக்குகள் உலகம் பூராவும் விட்டு விட்டுப் பிரகாசிப்பதை நாங்கள் காண்கிறோம். 442 ஜனங்கள் இந்த நாளில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வார்களாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அவர்களை உம்மிடம் சமர்ப்பித்து நான் ஜெபிக்கிறேன். நாங்கள் வாழும் காலம் வரைக்கும் அது எங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கட்டும்; அவ்வாறு இருக்கும் என்று நீர் வாக்களித்து இருக்கிறீர். எனவே, அதைக் கேட்பது எளிதாயிருக்கும், ஏனென்றால் அது அவ்வாறு இருக்கும் என்று நீர் வாக்களித்தீர், எனவே அது அவ்வாறு இருக்கும் என்பதை நான் அறிவேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக் கொள்கிறேன். ஆமென், இப்பொழுது அப்படியே ஒரு நிமிடம் நம்முடைய தலை வணங்கி இருப்பதோடு. 443 விசுவாசத்தோடு, விசுவாசித்து, எப்படியோ நான் அறிந்துள்ள வரை நான் உங்களுக்காக ஜெபித்துள்ளேன். அதற்காக எப்படி ஜெபிக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்த அளவிற்கு உத்தமமாய் நான் ஜெபித்தேன். 444 பாருங்கள், நான் அதை தெளிவாக உணருகிறேன். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? உங்கள் தசமபாகங்களிலும் காணிக்கைகளிலும் நான் ஜீவனம் செய்து வருகிறேன். அது இங்கே சபையிலிருந்து வரும் உங்களுடைய ஆதரவாயுள்ளது, எனவே இங்கு பிரசங்கிக்க நான் ஒருவரை ஏற்பாடு செய்ய முடிகிறது. அது உங்களுடைய அன்பும், உங்களுடைய "ஆமென்களும்," உங்களுடைய ஐக்கியமுமாயுள்ளது. உங்களுடைய கனிவான வார்த்தைகளால், நீங்கள் செல்லுகிற இடங்களுக்கும், உலகில் உள்ள தேசத்தினூடாக பல்வேறு மாநிலங்களுக்கு செய்தியை கொண்டு செல்ல உங்களுடைய தயவான வார்த்தைகளே உதவுகின்றன. நீங்களே அதற்குக் காரணம். இவ்விஷயத்தில் நாம் கிறிஸ்துவுடன் கூட்டாளிகளாக இருக்கிறோம். நாம் சகோதரரும் சகோதரிகளுமாய் இருக்கிறோம். அவர் நமது ராஜா. நான் உங்களை நேசிக்கிறேன். நான் நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே நீங்களும் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இரண்டு முறை உங்களுக்குப் பிரசங்கம் செய்ய நான் தேசத்தைக் கடந்து வருகிறேன். ஞாயிறு காலை நான் உங்களை இங்கே சந்திக்க வாஞ்சிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். உங்களை நான் எப்பொழுதும் நேசித்து வருகிறேன். சில நேரங்களில் கடினமான பேச வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் அது திருத்துவதற்கு மாத்திரமே ஆகும். நீங்கள் பாருங்கள், அது நான் உங்களை நேசிப்பதன் காரணமாகவே அவ்வாறு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. பாருங்கள், அதை நீங்கள் இழந்து போக நான் விரும்பவில்லை. நீங்கள் நீங்கள் அதை இழந்து போகக் கூடாது. 445 இப்பொழுது, அப்படியே இனிமையாகவும், தாழ்மையோடும், உங்கள் இருதயத்தில் உள்ள எல்லாவற்றோடும், உங்கள் இருதயத்தின் ஆழங்களில் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். "கர்த்தராகிய இயேசுவே, இப்பொழுதே உம்மைப் போன்றிராத எல்லாவற்றையும் இப்பொழுதே எடுத்துப் போட்டுவிடும், என்னுடைய எல்லா பெருமையையும், நான் வெளியே எடுத்துப் போடட்டும். என்னிடத்தில் உள்ள எல்லாக் குப்பையையும், எல்லா அவிசுவாசத்தையும், நான் நான் கர்த்தாவே, இப்பொழுதே அதை தள்ளுவிடுகிறேன். நான் அதை உதைத்துத் தள்ளுகிறேன். தேவனுடைய இனிமையான பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் எனக்குள் இறங்குவாராக-! கர்த்தாவே, நான் நித்தியமாக ஜீவிக்க விரும்புகிறேன், இந்நேரத்தில் நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை இப்பொழுதே அருளும்,” என்று கூறுங்கள். 446 நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, நான் அவரை நேசிக்கிறேன் என்னும் இந்தப் பாடலை நாமெல்லாரும் சேர்ந்து வாய் திறவாமல் இல்லை மெதுவாக அதைப் பாடப் போகிறோம். நினைவிருக்கட்டும், அது அன்பின் மூலம் மாத்திரமே வருகின்றது. ஏனெனில் அவர் அன்பாயிருக்கிறார். இந்த உறுமால்களின் மேல் நான் என்னுடைய கைகளை வைத்துக் கொண்டிருக்கும் போது, ஏனென்றால் இன்றிரவிற்கு முன்பே, இந்த உறுமால்களை ஜனங்கள் பெற்றுக் கொள்ளலாம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முதலில் அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் முதலில் அவர் என்னை நேசித்ததால் இப்பொழுது உங்கள் ஜீவியத்தை அவருக்கு ஒப்புக் கொடுங்கள். சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி.... 447 அவரை நேசியுங்கள், நேசியுங்கள், நேசியுங்கள், உங்களுக்காக அவர் என்ன செய்தாரென்று பார்த்தீர்களா-? ["சகோ.பிரன்ஹாம் நான் அவரை நேசிக்கிறேன் என்று தாழ்ந்த குரலில் வாய்மூடி இசைக்கத் துவங்குகிறார் -ஆசி.) அவை யாவும் அன்பின் காரணமாகவே. அன்பு கீழ்ப்படிதலைக் கொண்டு வருகின்றது. அன்பு, அன்பின் உறவாடுதலைக் கொண்டு வருகிறது. அன்பு விவாகத்தை கொண்டு வருகிறது. நாம் அவரை அங்கே எதிர் நோக்கியே சென்று கொண்டு இருக்கிறோம், ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கே. என்னுடைய இரட்சகர் அழைப்பதையும், அவர் என்னையும் கூட நேசிக்கிறார் என்று கூறுவதையும் என்னால் கேட்க முடிகிறது. என்னையும் கூட-! நான்... 448 அப்படியே உங்களுடைய முழு இருதயத்தோடும், ஏதோ ஒன்று உண்மையாக இனிமையாக உங்களுக்குள் வருவதை உணருங்கள். அது தான் பரிசுத்தாவி. முதலில் அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே 449 - கூட்டத்தாரோடு, இசை இசைக்கப்படும் போது, என் கரங்களை நானும் உயர்த்துகிறேன். நான் பாவம் செய்திருந்தால், நான் தவறான ஏதாவது காரியத்தை செய்திருந்தால்.... நான் இப்பொழுது உங்களுக்காகவும், எனக்காகவும் ஜெபித்துக் கொண்டு இருக்கிறேன். 450 நான் தவறு ஏதாகிலும் செய்திருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று பொருட்படுத்தியே என்னுடைய கரத்தை, கர்த்தாவே உம்மிடம் உயர்த்துகிறேன். கர்த்தாவே, நான் அந்த காரியத்தை செய்ய விரும்பவில்லை என்ற அர்த்தத்தில் நான் என்னுடைய கரத்தை உம்மிடம் உயர்த்துகிறேன். கர்த்தாவே, நான் மரித்துக் கொண்டு இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் இவ்வுலகத்தை விட்டு, இச்சரீரத்தை விட்டு போக வேண்டியவனாய் இருக்கிறேன். நான் உம்மை சந்திக்க விரும்புகிறேன். கர்த்தாவே, உயர்த்தப்பட்ட என் கரத்தை ஏற்றுக் கொள்ளும், அதுவே அதன் அர்த்தமாயுள்ளது. உமது ஆவியினால் என்னை நிரப்பும். உம்முடைய அன்பின் அடையாளமாகிய பரிசுத்தாவியை என் மீது வையும், அது என்னை இனிமையாய், சாந்தமாய் ஜீவிக்கச் செய்யும், அதுவோ கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவனின் ஜீவியத்தையே நான் ஜீவிக்கச் செய்யும்; என் இருதயம் மற்றவர்களுக்காக கொழுந்து விட்டு எரிய அருள் செய்யும். என்னால் முடிந்த வரை, எல்லாரையும் உமக்காக பெற்றுக் கொள்ளும் வரையிலும், இரவும் பகலும் என்னால் இளைப்பாற முடியாது. எரிகோவுக்குச் சென்ற தூதர்களைப் போல் நான் இருப்பேன். என்னால் முடிந்த ஒவ்வொரு நபரிடமும் நான் சென்று, அவர்களை இரத்த உடன்படிக்கையின் கீழ் என்னால் கொண்டு வர முடியுமா என்று, அவர்கள் அடையாளத்தை பெற்றுக் கொள்ளும்படி ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் கீழ் கொண்டுவர முடியுமா என்று பார்பேனாக. 451 பாருங்கள், இரத்தம் சுத்திகரிக்கின்றது. இரத்தம் பூசப்பட்டுள்ளது என்பதற்கு பரிசுத்த ஆவியே அடையாளமாயுள்ளது. புரிகிறதா-? இரத்தம் பூசப்பட்டுள்ளது என்பதற்கு பரிசுத்தாவியே அடையாளமாயுள்ளது. இரத்தம் பூசப்படும் வரைக்கும் பரிசுத்தாவி வர முடியாது. ஆனால் இரத்தம் பூசப்படும் போது, நீங்கள் இரத்தத்தின் பேரில் கொண்டுள்ள விசுவாசம் அங்கீகரிக்கப்பட்டது என்பதன் அடையாளமாக பரிசுத்தாவி மறுபடியும் உங்கள் மேல் வருகின்றது. உங்கள் கிரயம் செலுத்தப்பட்டு விட்டது. உங்கள் கட்டணம் செலுத்தித் தீர்ந்து விட்டது. அது முடிவு பெற்றது. உங்கள் வழக்கு முடிவுற்று விட்டது. நீங்கள் ஒரு கிறிஸ்தவர்களாகின்றீர்கள்; நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கின்றீர். கிறிஸ்து உங்களுக்குள்ளும் நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளும் இருக்கின்றீர்கள். ...முதலில் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 452 உங்கள் இருதயங்கள் தேவனுக்கு முன்பாக வணங்கியிருக்கும் இந்த நேரத்தில்; உங்கள் போதகர் சகோ.நெவில் தன்னுடைய கடைசி வார்த்தைகளாக என்ன கூறப் போகிறாரோ அதை கூறுவார். 453 இன்றிரவு ஆராதனைகள், அதாவது சுகமளித்தல் ஆராதனை உண்டு என்பது நினைவிருக்கட்டும். நேரத்தோடே வாருங்கள். நாங்கள் 7-மணிக்கே ஆரம்பித்து விடுவோம். ஏழரை மணிக்கு நான் பிரசங்க பீடத்தில் இருப்பேன். அது சரிதானா, சகோ.நெவில்-? [சகோ.நெவில், "அது அருமையானது" என்று கூறுகிறார்.- ஆசி.) நீங்கள் பாருங்கள், இன்றிரவு இராப்போஜன ஆராதனையும் நாங்கள் நடத்தப் போகிறோம். வாருங்கள் 454 இன்று பிற்பகல் வாருங்கள். அதனோடு தரித்திருங்கள். இந்தச் செய்தி உங்களை விட்டு பிரியாதிருப்பதாக. நினைவில் கொள்ளுங்கள், இந்தச் செய்தி ஒரு போதும் உங்களை விட்டுப்பிரியாதிருப்பதாக. 455 ஜீவன் அளிக்கப்பட்டது என்பதற்கு இரத்தம் ஒரு அடையாளமாயிருக்கும். புரிகிறதா-? "அந்த இரத்தத்தை நான் காணும் போது, நான் உங்களைக் கடந்து போவேன்." உங்கள் இருதயங்களில் இரத்தம் பூசப்பட்டுள்ளது என்பதன் ஒரு அடையாளமாக பரிசுத்தாவி உங்களிலுள்ளது. உங்கள் இருதயங்களில் இரத்தம் பூசப்பட்டு உள்ளது என்பதற்கு அது தான் அடையாளம். அது பூசப்படாவிட்டால், அடையாளம் உங்களிடம் வராது. நீங்கள் புரிந்து கொண்டீர்களா-? அப்படி ஆனால், "ஆமென்" என்று சொல்லுங்கள். [சபையார் "ஆமென்" என்று கூறுகின்றனர்.-ஆசி.) இரத்தம் பூசப்பட வேண்டும். அப்பொழுது அடையாளம் வருகிறது. மீட்பின் இரத்தம் பூசப்பட்டது என்பதற்கும் உங்களுடைய கிரயம் செலுத்தப்பட்டது என்பதற்கும் அது ஒரு அடையாளமாயுள்ளது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக-! சகோதரன் நெவில்.